Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்கள் இயற்கை உபாதை நேரத்தில் உடல்பயிற்சி செய்யலாமா?

பெண்கள் இயற்கை உபாதை நேரத்தில் உடல்பயிற்சி செய்யலாமா?

43

பெண்களிடையே இருக்கும் மிகப் பெரும் கேள்வி மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்யலாமா? என்பது. பொதுவாக அக் காலப் பகுதியில் பெண்கள் வலு இழந்து விடுவதுடன், உடலில் சக்தியும் குறைவடைகிறது.

அத்துடன் அவர்களிற்கு வலியும் இருப்பதனால் உடற்பயிற்சி செய்வதில் கடினத் தன்மையும் உள்ளது. இதனாலேயே பலரும் ஜிம்மிற்கு போவதையும் தவிர்த்து விடுகின்றனர்.

ஆனால் உண்மை என்னவெனில் இந்தக் காலப்பகுதியில் ஜிம்மிற்கு போவதனால் மாதவிடாய்ப் பிடிப்புகளில் இருந்து தீர்வு கிடைக்கின்றது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

உடற்பயிற்சி செய்வதனால் என்ன நன்மை கிடைக்கிறது?

உடற்பயிற்சி செய்வதனால் ஹார்மோன்கள் அளவு சீராகின்றது, இதனால் எரிச்சல், படபடப்பு, போன்றவற்றைச் சரி செய்கிறது.

மேலும் உடற்பயிற்சி செய்யும் போது வெளியேறும் என்ட்ரோபின்ஸ் இயற்கையான வலி நிவாரணியாக செயற்படுகிறது. அதிகமான உடற்பயிற்சி செய்வதனால் வலி, இரத்தப் போக்கையும் அதிகரிக்கச் செய்து விடுவதை கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

சிறந்த சில அனுகூலங்கள்.
• மாதவிலக்கு பிரச்சினைகளைத் தீர்த்து சிறந்த மனநிலையை ஏற்படுத்தும்.
• உடற்பயிற்சியினால் சோம்பல், தலைவலி நீங்கும்.
• மாதவிடாயின் போது ஏற்படும் பிடிப்புக்களை குணப்படுத்துவதுடன் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
• உடற்பயிசினால் உடலை குளிர்மையாக வைத்திருக்க முடியும்.
• மாதவிலக்கு சம்பந்தப்பட்ட அணைத்து உடல் அசௌகரியங்களைத் தீர்க்கும்.

எந்த வகையான உடற் பயிற்சிகள் சரியான தேர்வாக இருக்கும்?

உங்களுக்கு இப்போதுள்ள கேள்வி எந்த வகையான உடற்பயிற்சி உடலிற்கு சிறந்தது என்பதே? கடினமான கார்டியோ உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். ஆனால் நடத்தல், மெதுவாக ஓடுதல் போன்றவற்றை குறைந்தளவு நேரத்தில் செய்தல் சிறந்தது. இலகுவான கார்டியோ பயிற்சிகளையும், யோகா ஆசனங்களைச் செய்வதும் வரவேற்கத்தக்கது.

தவிர்க்க வேண்டிய உடற்பயிற்சிகள் எவை?
மாதவிடாயின் போது அதிகளவான ஹார்மோன்கள் செயற்படுவதுடன், அடி வயிற்றுப் பகுதி மென்மையானதாகவும் காணப்படுவதனால் வயிற்றுப் பகுதிகளுக்கு அதிகளவு அழுத்தம் கொடுக்கும் உடற்பயிற்சிகளையும், யோகாசனங்களையும் செய்வதை தவிர்ப்பது அவசியமானது.

உடற்பயிற்சியினால் காயங்கள் ஏற்படும் என்ற பயம் உங்களுக்கு இருந்தால் அதனை விலக்கி இலகுவான உடற்பயிற்சிகளை மாதவிடாயின் போது செய்ய ஆரம்பியுங்கள்.