Home பாலியல் ஆண்களிடம் மாதவிடாய் காலங்களில் இதை எதிர்பார்க்கிறார்களாம் பெண்கள்..!

ஆண்களிடம் மாதவிடாய் காலங்களில் இதை எதிர்பார்க்கிறார்களாம் பெண்கள்..!

36

பெண்கள், குழந்தை பேரு காலங்களில் பெண் குழந்தையை விட ஆண் குழந்தையை அதிகம் விரும்ப ஒரு காரணம், மாதவிடாய் காலங்களில் அவர்கள் அனுபவிக்கும் வலி. இரத்தபோக்கு உடலளவிலும், வீட்டில் உள்ள பெரியோர்கள் தீட்டு என்று சொல்லி மனதளவிலும் வலியை அதிகப்படுத்துவர்கள்.

இந்த மூன்று முதல் ஐந்து நாட்களில் அவர்கள் எதிர்கொள்ளும் வலி மரணத்தையும் விடக் கொடியது. அதிலும், வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு இந்த மூன்று நாட்கள் நரகத்தை போல தான் நகரும்.

வலிமிகுந்த இந்த நாட்களில், திருமணமான பெண்கள் அவர்களது கணவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதைப் பற்றி இனி தெரிந்துக் கொள்ளலாம்….

பணிவாக பழகுங்கள்
மாதம் முழக்க இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் இந்த மூன்று நாட்களிலாவது அவர்களுடன் பணிவாக பழகுங்கள். இது அவர்களை மனதளவில் மென்மையாக உணர உதவும்.

ஓய்வளியுங்கள்
அவர்கள் தினமும் செய்யும் வேலைகளில் இருந்து இந்த மூன்று நாட்கள் அவர்களுக்கு ஓய்வளியுங்கள். அல்லது அவர்களே அந்த வேலைகளை செய்ய முற்பட்டாலும், அந்த வேலைகளில் உடனிருந்து உதவி செய்யுங்கள்!

அன்பை வெளிக்காட்டுங்கள்
பெண்கள் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்கள், தங்களது அன்பிற்குரியவர்களின் கடுமையான வார்த்தைகளை தவிர. எனவே, இந்த நாட்களில் அவர்களிடம் அதிகம் அன்பை வெளிப்படுத்துங்கள். இது அவர்கள் வலியை மறக்க உதவும்.

பொறுமையாக இருங்கள்
இந்த நாட்களில் அவர்கள் என்ன செய்தாலும் பொறுமையாக இருங்கள். மாதவிடாய் இரத்தப் போக்கின் காரணமாக ஏற்படும் வலியின் வெளிப்பாடாய் அவர்களுக்கு கோவமும், மன சோர்வும் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே, அவர்கள் என்ன கூறினாலும், செய்தாலும் பொறுமையாக இருந்து அவர்களை பணிவாக பார்த்துக் கொள்ளுங்கள்.

கேள்விகள் கேட்க வேண்டாம்
இந்த நாட்களில் போய், அவர்களிடம் முன்பு நடந்த ஏதேனும் விஷயத்தைப் பற்றிய கேள்விகள் கேட்டுக் குடைய வேண்டாம். இது, அவர்களை மனதளவில் மேலும் வலிமையிழக்க செய்யும்.

சண்டையிட வேண்டாம்
இந்த வலிமிகுந்த நாட்களில் அவர்களிடம் உங்கள் கோவத்தையோ அல்லது ஏதேனும் காரணம் குறித்தோ சண்டையிடாதீர்கள். இது, அவர்களது உணர்வுகளை பாதிக்கும். ஏன், உறவுகளிலும் கூட விரிசல்கள் ஏற்பட காரணமாகிவிடும்.

அவர்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள்
சமையல், பொழுதுபோக்கு, விளையாட்டு போன்ற ஏதாவது அவர்களுக்கு பிடித்ததை செய்து அவர்களை மகிழ்விக்க முயற்சி செய்யுங்கள்.

ஆரோக்கியமான உணவுகள்
காய்கறி, பழங்கள் என அவர்களுக்கு அந்த நாட்களில் ஆரோக்கியத்தை அளிக்கும் உணவுகளை வாங்கி வந்துக் கொடுத்து. அவர்களது அன்பினை பெற முயற்சி செய்யுங்கள். மாதத்தில் இந்த மூன்று நாட்கள் நீங்கள் அவர்களை சரியாக புரிந்து, பார்த்துக் கொண்டால், மற்ற அணைத்து நாட்களும் அவர்கள் பல மடங்கு அதிகமான அன்புடன் உங்களைப் பார்த்துக் கொள்வார்கள்