Home ஆண்கள் பெண்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் பெண்மை குறைவு இருக்கும்

பெண்களுக்கு இந்த அறிகுறி இருந்தால் பெண்மை குறைவு இருக்கும்

406

ஆண்மை பெருக்கம்:ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மைக்குறைவு பிரச்சினை போலவே பெண்களுக்கும் சில பாலியல் குறைபாடு பிரச்சினைகள் உள்ளது. இது பெண்மைக்குறைவு என்று அழைக்கப்படும். ஆண்மைக்குறைவு போலவே பெண்களின் இந்த பிரச்சினைகளும் தாம்பத்யத்தில் குறைபாடுகளை உண்டாக்கும். ஆண், பெண் இருவரில் யாருக்கு பாலியல் பிரச்சினைகள் இருந்தாலும் அது அவர்களின் இல்லறத்தை பாதிக்கும்.

பெண்களுக்கு இந்த பிரச்சினைகள் ஏற்பட காரணம் அவர்களின் உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் குறைபாடு ஆகும். ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்தான் ஆண், பெண் இருவருக்குமே பாலியல் ஆசைகளை தூண்டுவதாகும். இதில் குறைபாடு ஏற்படும்போது நிச்சயம் அது பெரிய பிரச்சினைதான். பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைபாடு உள்ளது என்பதை இந்த அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்.

மாதவிடாய் மறைதல்
ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டின் முக்கிய அறிகுறி இதுதான். உங்கள் மாதவிடாய் சுழற்சியை சீராக வைத்திருக்க ஈஸ்ட்ரோஜன் மிகவும் அவசியமானதாகும். ஈஸ்ட்ரோஜன் குறைபாடு உங்கள் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சினையை ஏற்படுத்தும். உங்களுக்கு ஈஸ்ட்ரோஜன் குறைவாக இருந்தால் அது உங்கள் உடலில் கருப்பையின் சவ்வை பலவீனமாக்குவதால் மாதவிடாய் முழுமடையாது.

மனநிலை மாறுபாடு ஈஸ்ட்ரோஜன் உங்கள் மாதவிடாயில் சிக்கலை ஏற்படுத்துவதால் அது உங்கள் மனநிலையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். ஈஸ்ட்ரோஜன் குறைபாடு உள்ளபோது உங்கள் மனநிலை ஒரு ரோலர்கோஸ்டர் போல மாறிக்கொண்டே இருக்கும். இந்த சூழ்நிலையில் அடிக்கடி கோபமும், எரிச்சலும் உங்களுக்கு ஏற்படும். இதற்கு முழுகாரணமும் இந்த ஹார்மோன் குறைபாடுதான்.

தூக்க பிரச்சினைகள் மற்றும் சோர்வு ஈஸ்ட்ரோஜன் குறைபாடு உங்கள் தூக்கத்தில் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஏனெனில் இந்த ஹார்மோன் மூளையின் மற்றொரு ஹார்மோனான செரோட்டினுடன் தொடர்புடையது. இந்த செரோட்டினின் தான் தூக்கத்திற்கு தேவையான மேலோட்டினினை உற்பத்தி செய்கிறது. இந்த சூழ்நிலையில் செரோட்டின் மற்றும் ஈஸ்ட்ரோஜன் குறைவாக இருக்கும்போது அது தூக்கத்தை பாதிக்கும் இதனால் நீங்கள் அதிக சோர்வுக்குள்ளாவீர்கள்.

மனஅழுத்தம் ஈஸ்ட்ரோஜனுடன் செரோட்டினினுக்கு இருக்கும் தொடர்பு உங்கள் மனஅழுத்தத்தை அதிகரிப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. ஈஸ்ட்ரோஜன் உங்கள் உடலில் செரோட்டினின் உற்பத்தியை அதிகரிப்பதால் உங்கள் மனநிலை சீராக இருக்கும். நீங்கள் சோகமாக இருப்பதாக உணர்ந்தால் அதற்கு செரோட்டினின் குறைபாடுதான் காரணம்.

பாலியல் ஆசை குறைதல் பெண்களுக்கு பாலியல் ஆசைகள் குறைவதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கிறது. அதில் மிக முக்கியமான காரணம் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு. இதற்கு செரோட்டினின் அளவும் ஒரு முக்கிய காரணமாகும். குறிப்பாக உங்கள் இரத்தத்தில் எவ்வளவு செரோட்டினின் அளவை பொறுத்துதான் உங்களுக்கு எவ்வளவு பாலியல் ஆசைகள் இருக்கிறது என்று தீர்மானிக்கப்படும். சுருக்கமாக குறைவான எஸ்ட்ரோஜன் = குறைவான செரோட்டினின் = குறைவான பாலியல் ஆசைகள்.

உறவில் திடீரென வலி ஈஸ்ட்ரோஜன் குறைபாடு தாம்பத்தியத்தை கூட வலிமிக்கதாக மாற்றக்கூடும். உங்கள் உடலில் போதுமான அளவு ஈஸ்ட்ரோஜன் இல்லாவிட்டால் உங்கள் பிறப்புறுப்பு விரைவில் வறட்சியடையும். மேலும் இது பிறப்புறுப்பின் சுவர்களை கடினமாக்கும். இதன் விளைவாக நிச்சயம் உறவின் போது வலி ஏற்படும்.

கண்களில் வறட்சி ஈஸ்ட்ரோஜன் குறைபாட்டால் வறட்சியடைவது பெண்களின் பிறப்புறுப்பு மட்டுமல்ல. ஈஸ்ட்ரோஜன் குறைபாடு உங்கள் உடலில் உற்பத்தியாகும் கண்ணீரின் அளவையும் குறைக்கும். எனவே ஈஸ்ட்ரோஜன் குறைபாடு இருக்கும்போது அது உங்கள் கண்களில் வறட்சியை ஏற்படுத்தும்.

சரும வறட்சி ஈஸ்ட்ரோஜன் குறைபாடு உங்கள் சருமத்திலும் பிரதிபலிக்கும். ஈஸ்ட்ரோஜன் குறிப்பாக உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. மேலும் இது இயற்கை அமிலங்களின் உற்பத்தியை உங்கள் சருமத்தில் அதிகரிக்கிறது. இது இல்லையெனில் உங்கள் சருமத்தில் வெடிப்புகள் ஏற்படும்.

மறதி ஈஸ்ட்ரோஜன் குறைபாடு உங்கள் மூலையில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். உங்கள் உடலுக்கு தேவையான ஹார்மோனின் அளவை விட குறைவான ஹார்மோன் இருந்தால் உங்கள் உங்களின் அனைத்து செய்லபாடுகளும் பாதிக்கப்படும். ஈஸ்ட்ரோஜன்தான் உங்கள் மூளையுடன் தொடர்புடைய அனைத்து நரம்புகளையும் சீராக செயல்பட வைப்பதோடு, மனஅழுத்தத்தை குறைக்க உதவும் கார்டிசோல் ஹார்மோனின் உற்பத்தியை அதிகரிக்கிறது.

தொடர்ச்சியான தலைவலி உங்களுக்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடு அதிகம் இருந்தால் அது உங்களுக்கு அடிக்கடி தலைவலி மற்றும் ஒற்றை தலைவலி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தொடர்ந்து ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் மாற்றம் ஏற்படுவது உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தலாம். குறிப்பாக மாதவிடாய் ஏற்படுவதற்கு முன்னர் தலைவலி ஏற்படும். இதற்கு காரணம் ஈஸ்ட்ரோஜன் குறைபாடுதான்.

கர்ப்பமாவதில் சிக்கல் ஒருவேளை உங்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்சினை இருந்தால் அதற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடுதான் முக்கிய காரணமாகும். ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் குறைபாடு உங்கள் கர்பப்பையை பலவீனமாக்குவதால் அது உங்களுக்கு கருத்தரிப்பதில் பல பிரச்சினைகளை உண்டாக்கும் .

எடை அதிகரிப்பு ஈஸ்ட்ரோஜன் உங்கள் கொழுப்பு செல்களுடன் தொடர்புடையது. உங்கள் எடை அதிகரிப்பதிலும், குறைவதிலும் ஈஸ்ட்ரோஜனின் பங்கு மிகமுக்கியமானது. அதிகளவு ஈஸ்ட்ரோஜன் உங்கள் எடை அதிகரிப்பில் முக்கியப்பங்கு வகிக்கிறது, அதேபோல உங்கள் எடையை குறைக்க இயலாமல் சிரமப்படுவதற்கு காரணமும் குறைந்தளவு ஈஸ்ட்ரோஜன்தான்.