Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களின் தொப்பையை குறைக்கும் எளிய முறை உடல் பயிற்சி

பெண்களின் தொப்பையை குறைக்கும் எளிய முறை உடல் பயிற்சி

104

உடல் கட்டுப்பாடு:தொப்பையை குறைக்க வேண்டும் என்று விதவிதமாக முயன்று கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள். இந்நிலையில்,இந்த முறையை பின்பற்றி வந்தால் நிச்சயம் உங்கள் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் எளிமையாக குறைக்க முடியும்.

மனதளவிலும் உடல் அளவிலும் அவர்கள் சந்திக்கிற மாற்றங்கள் உங்களது அன்றாட வேலையை சில நேரத்தில் குலைத்துவிடக்கூடியது என்று சொன்னால் அது மிகையாகாது.

தொப்பையின் அளவு அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் ஏரளமாக இருக்கின்றன. சிலருக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால் ஆகியவையும் வரக்கூடும்.

தினமும் குறைந்தது 78 டம்ளர் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசமானது அதிகரிக்கும். இதனால் வயிற்றைச் சுற்றி காணப்படும் பெல்லியும் குறைந்துவிடும்.

அதே போல பென்சல்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் ஸ்லீப் மெடிசின் என்று ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது அதில், தொப்பை அதிகமிருப்பவர்களுக்கு பகல் நேரத்தில் தூக்கம் வருவது, எப்போதும் சோர்வாக உணர்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

உணவில் அதிகப்படியான உப்பு சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் உப்பை அதிகம் சேர்த்தால், உடலில் தண்ணீரானது வெளியேறாமல், அதிகமாக தங்கிவிடும்.

தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதில் கிரீன் டீ குடித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்கலாம். மேலும் உடல் எடையையும், தொப்பையையும் எளிமையாக குறைக்க முடியும்.

பழங்கள் பழங்களில் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி, உடலில் தங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றிவிடும். இதனால் அழகான உடலை பெற முடியும்.

தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், அதில் உள்ள குறைவான கலோரி மற்றும் ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.

இதை பின்பற்றினால், நிச்சயம் உடல் எடையுடன், வயிற்றினைச் சுற்றியுள்ள தொப்பையையும் எளிமையாக குறைக்க முடியும்