Home பெண்கள் தாய்மை நலம் குழந்தையின்மைக்கு ஆண்கள் பெண்கள் சார்ந்த பிரச்னைகள்

குழந்தையின்மைக்கு ஆண்கள் பெண்கள் சார்ந்த பிரச்னைகள்

97

கணவன் மனைவி:உடலுறவில் முழு மன துடன் ஈடுபட்டும் தம்ப திகள் சிலருக்கு குழந் தை பிறக்காமல் இருப் பதற்கு ஆண் சார்ந்த காரணங்கள், பெண் சா ர்ந்த காரணங்கள் அல் லது இருவரையும் சார்ந்த காரணங்கள் என மூன்றுவிதமான கா ரணங்கள் உண்டு. குழந்தையின்மைக்கு ஆண்சார்ந்த காரணங் கள் 40லிருந்து 45சதவிகிதம் இருக்கலாம். பெண் சார்ந்த காரண ங்கள் 50லிருந்து 55 சதவிகிதம் இருக்கலாம். 5 முதல் 15 சதவிகிதம் வரை இருவரையும் சார்ந்த காரணங்கள் இருக்கலாம்.

ஆண் சார்ந்த காரணங்கள்
ஒரு ஆண் செக்ஸில் ஈடுபடும்போது, அவனிடமிருந்து கண்டிப்பா க 2 மில்லி லிட்டர் விந்து வெளியேற வேண்டும். அப்போதுதான் குழந்தையை உருவாக் க முடியும். இப்படி வெளிவரும் விந் தில், ஒரு மி.லிக்கு 20 மில்லியன் உயி ரணுவாவது இருக்கவேண்டும். இதில், 30சதவிகித உயிரணு ஆரோக்கியமான தரத்துடன் இருக்க வேண்டும். அதேபோல், இந்த 20 மில்லியன் உயிரணுவில் 50 சதவிகிதம் நல்ல நீந்தும் திறனைப் (மொடிலிட்டி) பெற்றிருக்க வேண்டும். 20 மில்லியன் உயிரணுவில், 25 சதவி கிதமாவது மிக மிக வேகமாக நீந்தும் திறன் கொண்டிருக்க வேண்டும்.

ஆண் உறுப்பில் அடிபட்டு காயம் ஏற்பட்டிருந் தாலோ, தொற்று நோய் ஏற்பட்டிருந் தாலோ, பிறவிக் கோளாறு இருந்தாலோ தரமான உயிர ணு உற்பத்தி யாவதில் பிரச் னை ஏற்படும்.

சத்தான உணவு, உடற்பயிற் சி, சரியான ஓய்வு இவற்றுட ன் புகை மற்றும் மதுப்பழக்க ம் இல்லாதிருக்கும் ஆணுக்குத் தரமான விந்தணு உற்பத்தியாவதில் பொதுவாகத் தடையேதும் இருப்பதில்லை.

சந்ததி உருவாக்குதல், இன்பம் அடைதல், உறவுகளின் கட்டமைப்பு என செக்ஸு க்கு மூன்றுவித நோக்கங்கள் உண்டு. செக்ஸின் முதன்மையான, முக்கியமான நோக்கம் சந்ததியை உருவாக்குவதுதான். இனப்பெருக்கம் ஒன்றுக்காகத்தான் செக்ஸ். எல்லா உயிரினங்களும் உலகில் பல்கிப் பெருகிக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற இயற்கையின் ஏற்பாடுதான் இது.

வெறும் இனப்பெருக்கம் என்றால், மனிதனுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது என்பதா ல், போனஸாக ஒருவிதமான இன்பத்தையும் செக்ஸு க்குள் இணைத்து வைத்துள்ளது இயற்கை! செக்ஸ் இன்பத்துக்காக இணைசேரும் ஆணின் உயிரணு பெண்ணின், ஜனன உறுப்பில் தங்கி சந்ததியை உருவாக்குகிறது. சில தம்பதிகளில், கணவனின் உயிரணு மனை வியின் உறுப்பில் டெபாஸிட் ஆகாத சூழலில், குழந்தை பிறக்காமல் போய் விடலாம் . இப்படியரு நிலை ஏற்பட சில காரணங்கள் உள்ளன.

ஆண் உறுப்பில் விறைப்புத் தன்மை இல்லாதிருப்பது, தீவிரமான துரித ஸ்கலிதம் காரணமாக ஆண் உறுப்பு பெண் உறுப்புக்குள் நுழைந்தாலும் பெண் உறுப்புக்கு வெளியிலேயே விந்து வெளியேறி விடுவது, நல்ல விறைப்புடன் பெண் உறுப்புக்குள் நுழைந்தும் விந்து வெளியேறாமல் போவது போன்ற காரணங்களால் விந்து, பெண் உறுப்புக்குள் டெபாஸிட் ஆகாமல் போகலாம்.

இனிமையான செக்ஸ் இன்பத்தை உச்சத்துக்குக் கொண்டு செல்வதில் “ஃபோர் ப்ளே” எனப்படும் முன்விளையாட்டுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் பல ஆண்களுக்குப் பொறுமை இருப்பதில்லை.

முன்விளையாட்டில் ஈடுபட்டுப் பெண்ணைத் தயார்நிலைக்குக் கொண்டுவராமல் உடலுறவில் ஈடுபடும்போது, பெண் பிறப்புறுப்பு ஈரப்பதமின்றி இருக்கும். செக்ஸ் விளையாட்டுகள் மூலம் இயற்கையாக ஈரப்பதம் உண்டாக்குவதற்குப் பதில் விளக்கெண்ணெய், வாஸலின், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை உபயோகித்து செயல்படுவார்கள். உண்மையில் இவை, உயிரணுவைக் கர்ப்பப் பைக்குள் போகவிடாமல் தடுக்கவே செய்கின்றன. மேலும், இவை கர்ப்பப்பை, ஃபெலோப்பியன் குழாய் போன்றவற்றில் கிருமித் தொற்றையும் உண்டாக்குகின்றன. இதனால் கருமுட்டை வெளிவருவதும் தடுக்கப்படும். சமயத்தில், கரு உருவானால்கூட அது கர்ப்பப்பையில் தங்கி வளர முடியாத நிலையை இந்தக் கிருமித் தொற்று ஏற்படுத்தி விடும்.

பெண்குறிக்குள் ஆண்குறி நுழைந்து உயிரணு வெளிப் படும்போ துதான் கரு உருவா கும். ஆனால், சில ஆண்களு க்குப் பிறவியிலேயே ஆண் குறியின் முனையில் இருக்க வேண் டிய துவாரம் கீழ்ப்பக்கம் தள்ளி இருக்கும். இதனால் ஆண்குறி, பெண்குறிக்குள் நுழைந் தாலும், உயிரணு கர்ப்பப் பைக்குள் போகாமல் வெ ளியிலேயே வெளியேறி விடும். இது ஒரு பிறவிக் குறை. இதற்கு ” ஹை போஸ்பேடியாஸ்” என்று பெயர். இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் இக்குறையை நீக்க ஆபரேஷன் இருக்கிறது. இதன் மூலம் இக்குறையை நிவ ர்த்தி செய்துவிட லாம்.

சிலஆண்களுக்கு, பிறவிக் குறைபாட்டால் ஆண் குறி அளவுக்கதிகமாக வளைந்திருக்கும். இதனால் ஆண் குறி, பெண்குறிக் குள் போ கவே போகாது. இந்தக் குறையையும் ஆபரேஷன் மூலம் சரிசெய்துவிட முடியும்.

பெண் சார்ந்த காரணங்கள்
சில பெண்களுக்குக் கருமுட்டையும், உயிர ணுவும் சந்தித்து கரு உருவானாலும்கூட உருவான கரு, ஃபெ லோப்பியன் டியூப்பிலிருந்து நகர்ந்து கருப்பைக்கு வராமலே கூட இருந்து விடலாம். அப்படியே வந்தாலும் கர்ப்பப்பையில் தங்கி வளர முடியாத நிலைமை ஏற்படலாம். இதனால் இந்தப் பெண்களுக்குக்கு ழந்தை பிறக்காமல் போகும்.

உயிரணுவானது கருப் பாதை, ஃபெலோப்பியன் டியூப், கர்ப்பப்பை போன்ற இடங்க ளை நீந்திச் சென்றால்தான் கர்ப்பம் தரிக்க முடியும். ஆனால், சில பெண்களுக்கு உயிரணு வானது நீந்திச் செல்ல முடி யாத அளவுக்குத் தடைகள் ஏ ற்பட் டு, அதனால் குழந்தை இல்லாமல் போகலாம். இன்னும் சில பெண்களுக்கு ஃபெ லோப்பியன் டியூப்பில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக குழந்தை பாக்கியமற்றுப் போகலாம் அல்லது ஜனன உறுப்பில் கிருமி தொற்றிப் பாதிப்பு ஏற்பட்டு இக்குறை ஏற்படலாம்.

பொதுவாக ஒரு பெண்ணுக்கு இருபத்தெட்டு நாட்களுக்கு ஒரு தடவை மாதவிடாய் வந்தது என்றால், பதினான்காம் நாள் கரு முட்டை வெளி வரும். அப்படி வரும் கருமுட்டையின் ஆயுட்காலம் 24 மணி நேரம்தான். இந்தத் தருணத்தில் உடல் உறவு கொண்டால்தான் கரு உருவாக வாய்ப்பு உண்டு. ஆனால், கரு முட்டையே வெளிவராவிட்டால் கரு எப்படி உருவாக முடியும்? கரு முட்டை வெளி வராமல் போவதற்குக் காரணம் ஹார்மோன் குறைபாடுகள் தான். உடல் எடை கூடுதலாக இருக்கும் பெண்களில் சில ருக்கும் குழந்தை இல்லாமல் இருக்கும். தீவிர மன அழுத்தம் கூட கருமுட்டையை வெளிவராமல் செய்துவிடும் என்பது மருத்துவ உண்மை.

கரு உருவானாலும்கூட கர்ப்பப்பையில் தங்கி வளர இயலாத நிலைமை. பொதுவாக கரு ஃபெ லோப்பியன் டியூப்பில்தான் உருவாகும். அதன் பின்னர், நான்கிலிருந்து ஏழு நாட்களுக்குள் கரு நகர்ந்து கர்ப்பப்பைக்குள் வர வேண்டும். ஒருவேளை கருப்பையின் உட்சுவர் (எண்டோமெட்ரிய ம்) பலவீனமாகிப்போனால், ஃபெலோப்பியன் டியூப்பிலி ருந்து நகர்ந்து கர்ப்பப்பைக்கு வரும் கருவானது, அங்கு தங்கி வளரமுடியாத சூழல் ஏற்படும். இந்த எண்டோமெ ட்ரியம் ஆரோக்கியமில்லாமல் போவதற்குரிய காரணங்களில், ஹார்மோன் கலாட்டாவும் ஒன்று.

பெண் குறியின் பாதை எப்போதும் அமிலத்தன்மை கொண்டிருக்கும். இந்த அமிலத் தன்மையை விந்தில் உள்ளகா ரத்தன்மை மட்டுப்படுத்திவிடும். சில பெண்களுக்குக் கிருமித் தொற்றால், அமிலத் தன்மை அதிகரித்து விடும். இதனால் உயிரணுக்கள் இறந்து விடும்.

கர்ப்பப் பையின் வாசலில் மியூ க்கஸ் என்கிற அடர்த்தியான சளிப்படலம் ஒரு கதவுபோல இருக்கும். கருமுட்டை வெளியாகும் தருணத்தில் இது நீர்த்துப் போய் கசிந்து வெளியேறிவிடும். ஆனால், சில பெண்களுக்குக் கரு முட்டை வெளிவரும் நாளில் இந்த சளிப்படலத்தின் அடர்த்தி குறையாமல் போய்விடும். அப்போது இதுவே கர்ப்பப்பையின் வாசலில் தடையாக இருந்து உயிரணுவைப் பைக்குள் செல்ல விடாமல் தடுத்து நிறுத்திவிடும். இதன் காரணமாகவும் குழந்தைப் பிறப்பு தடைபடும். சில பெண்களுக்கு பெண்குறி பாதையிலும், கர்ப்பப்பை வாசலிலும் உயிரணுவை எதிர்க்கிற ஒருவித ரசாயனம் சுரக்கும். இதனால் உள்ளே வரும் உயிரணு வின் வீரியம் குறைந்து விடும் அல்லது உயிரணு இறந்து விடலாம்.

கரு முட்டையும், உயிரணு வும் சந்திக்கும் ஃபெலோப் பியன் டியூப்பில் அடைப்பு இருந்தாலும் கரு உருவாகாமல் போகலாம். பிறவி குறைபாடு, பால் வினை நோய், காசநோய் போன்றவற்றால் ஃபெலோப்பியன் குழாயில் அடைப்புஏற்படலாம். மிகவும் அரிதாக, சில பெண்களுக்கு மனஅழுத்தத்தால் ஃபெ லொப்பியன் டியூப்பில் பிளாக் ஏற்படலாம்.

கர்ப்பப்பைக்கு இரண்டு பக்கமும் உள்ள இரண்டு ஃபெலோப்பியன் டியூப்களில் ஏதாவது ஒன்றில் அடைப்பு இருந்தால், குழந்தை பிறக்க 50 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இரண்டிலும் அடைப்பு இருந்தால், அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பிறக்க நிச்சயம் வாய்ப்பே இல்லை