Home உறவு-காதல் இப்படி ஆண்கள் இருந்தால் பெண்கள் விழுந்து விழுந்து காதலிப்பார்

இப்படி ஆண்கள் இருந்தால் பெண்கள் விழுந்து விழுந்து காதலிப்பார்

477

பெண்கள் உறவுமுறை:பெண்களின் மனதை புரிந்து நடந்து கொள்வது எப்படி? ஒவ்வொரு பெண்ணும் ஆணிடம் அதிகம் எதிர்பார்ப்பது மதிப்பும், மரியாதையையும் மட்டுமே. பொன், பொருள்கள் இதெல்லாம் அப்புறம்தான். பெண் என்பவள் தங்களின் அடிமை அல்ல என்பதை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பெண்கள் தங்களுக்கு சேவை செய்ய பிறந்தவர்கள் என்ற எண்ணத்தை அவர்களின் மனதில் இருந்து முற்றிலும் அழிக்க வேண்டும். அந்த மாதிரியான ஆண்களையே பெண்கள் அதிகம் விரும்புகின்றனர். வேறு எந்த மாதிரியான குணங்கள் படைத்தவரை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். இதோ…ஒவ்வொன்றாக பார்க்கலாம்!

அதிகம் சம்பாதிப்பவர்களைக் காட்டிலும், சாமர்த்தியசாலியாக நடந்து கொள்பவர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். பெண்களின் உடலைமைப்பு குறித்து குறை கூறுவதை விடுத்து, உள்ளதை உள்ளபடியே நேசிக்கும் ஆண்களைதான் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

பெண்களை, பெண்களாய் நடத்தும் பெருந்தன்மை கொண்ட ஆண்களை பெண்கள் அதிகம் நேசிக்கின்றனர். உரிமையை பறிக்காமல், சுதந்திர உணர்வோடு அவர்களை நடத்த வேண்டும் என்பது பெண்களின் பெரும் எதிர்பார்ப்பு.

ஆண் என்பவன் தங்களின் உணர்வுகளை மதித்து அக்கறையோடு நடத்தவேண்டும் என்று பல பெண்கள் விரும்புகின்றனர். பெண்ணின் மீது நம்பகத்தன்மை கொண்டவனாக ஆண் இருக்க வேண்டும்.

பெண் என்பவள் தங்கள் விருப்பத்திற்கு இணங்க பிறந்தவள் என்று நினைத்துக் கொண்டு, உடல்ரீதியான இன்பத்திற்காக நினைத்த நேரத்திற்கு அவர்களை வற்புறுத்தும் ஆண்களை பெண்கள் அறவே வெறுக்கிறார்கள்

தங்களை கைநீட்டி அடிக்கும் ஆண்களை பெண்களுக்கு ஒருபோதும் பிடிப்பதில்லை. அத்துடன், தேவைக்காக நெருங்கி வந்து, வேண்டிய காரியம் நடந்ததும் கைவிட்டுச் செல்லும் ஆண்களைக் கண்டு பெண்கள் எரிச்சல் அடைகிறார்கள்.

குடும்ப வாழ்க்கை குறித்த தெளிவான எண்ணம் கொண்டவராகவும், குடும்ப முன்னேற்றம் பற்றிய உள்ளுணர்வு கொண்டவராகவும், அதற்கான வழிகளை புரிந்து நடந்து கொள்பவராகவும் உள்ள புத்திசாலியான ஆண்களின் மீது பெண்கள் அளவில்லா நேசம் வைத்துக் கொண்டாடுவார்கள்.

காதலிக்கும்போது மட்டும் சிரித்துப் பேசும் ஆண்களில் பலர் திருமணம் முடிந்த பிறகு அதை சுத்தமாக மறந்து விடுகின்றனர். இந்த விஷயத்தில் பெண்கள் பெருத்த ஏமாற்றத்தை சந்திக்கின்றனர்.

எப்போதும் தன்னுடைய மனைவியை காதலியாகவே நினைக்கும் ஆண்கள் பெண்களால் அதிகம் விரும்பப்படுகின்றனர். ஒரு காதலன் காதலியிடம் எப்படி அன்பாக நடந்துகொள்வானோ, அதேபோல திருமணத்திற்கு பிறகும் நடந்து கொள்ள வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

Previous articleபெண்கள் ரோமங்களை அகற்ற சில அற்புதமான வழிகள்
Next articleபெண்கள் வெறுக்கும் ஆண்கள் இவர்கள்தானம்- படியுங்க புரியும்