Home ஆண்கள் பெண்களே உங்களுக்கு மலட்டுதன்மை இருந்தால் இந்த அறிகுறி இருக்கும்

பெண்களே உங்களுக்கு மலட்டுதன்மை இருந்தால் இந்த அறிகுறி இருக்கும்

175

ஆண்மை இழப்பு:குழந்தைக்கான திட்டம் உங்கள் மனதில் உள்ளதா? கர்ப்பம் அடைவது என்பது பல ஜோடிகளின் உச்சகட்ட மகிழ்ச்சியாக உள்ளது. அமெரிக்க பிரகனன்சி அசோசியேஷன் ஆறில் ஒரு பெண் கருவுறுதல் பிரச்சனைகளை கொண்டுள்ளனர் என தெரிவிக்கிறது. பெண் கருவுறாமைக்கு, இண்டோமெட்ரியோசிஸ் (endometriosis), ஃப்லொபோபியன் குழாய்களில் அடைப்பு அல்லது பாலிசிஸ்டிக் கருப்பை அறிகுறி (பிசிஓஎஸ்), ஹார்மோன் சமநிலையின்மை, உண்ணும் கோளாறுகள், மன அழுத்தம், எடை அதிகரிப்பு அல்லது நீர்க்கட்டிகள் ஆகியவை காரணமாக உள்ளன.

சில அறிகுறிகளை வைத்து இது போன்ற பிரச்சனைகளை கண்டறியலாம். உங்களால் அறிய முடியவில்லை என்றால் மருத்துவரை அணுகி தீர்வு பெறலாம். கீழ்காணும் பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், உங்களது குழந்தைக்கான கனவு இதோடு முடிந்துவிட்டது என கவலைப்பட வேண்டாம். இவை பெரும்பாலும் தீர்வுகான கூடிய பிரச்சனைகள் தான். சிறிது தாமதம் ஆனாலும் கட்டாயம் நீங்கள் குழந்தை பெற முடியும்.

1. மாதவிடாய் பிரச்சனை உங்களுக்கு மிகவும் சீக்கிரமாகவோ அல்லது நீண்ட காலம் தள்ளியோ மாதவிடாய் ஏற்படுவது கூடாது. மாதவிடாய் சரியாக தான் இருக்கிறது என்றால், மாதவிடாய் காலங்களில் இடுப்பு பகுதியில் அதிக வலி இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதிகமான வலி கூட கருவுறுதலை பாதிக்கும். மாதவிடாய் வராமல் போவது பிரச்சனையை இரண்டு மடங்காக்கும். காலம் தவறிய மாதவிடாயானது பிசிஓடி பிரச்சனைக்கும், வலி மிகுந்த மாதவிடாய், இண்டோமெட்ரியோசிஸ் பிரச்சனைக்கும் காரணமாகிறது.

2. தடித்த அல்லது மோசமான கர்ப்பப்பை வாய் சளி உங்கள் கருப்பை வாய் சளி தடிமனாக இருந்தால் அது விந்தணு உள்ளே செல்வதை தாமதமாக்குகிறது. விந்தணு கர்ப்பபைக்குள் செல்வதற்குள் இறந்துவிடுகிறது. கருப்பை வாய் சளி வளமான தரத்தில் இருக்கும் போது அது விந்தணுவை வறட்சியாக விடுவதில்லை மற்றும் எளிதாக கருப்பைக்கு எடுத்து செல்கிறது. உங்கள் கருப்பை சளியானது, முட்டையின் வெள்ளை திரவத்தை போன்று இல்லை என்றால் நீங்கள் கருவுறுதலில் பிரச்சனை இருக்கலாம்.

3. அசாதாரண கருப்பை இரத்தப்போக்கு கருப்பை இரத்தப்போக்கிற்கும் மாதவிடாய்க்கும் சம்பந்தம் இல்லை. இந்த கட்டிகள், கருப்பையில் உள்ள தசை திசு அதிகரிக்கும்போது உருவாகும். துரதிருஷ்டவசமாக, ஃபைபிராய்டுகள் கூட அசாதாரண இரத்தப்போக்கு மற்றும் கருவுறாமைக்கு காரணமாக அமைகின்றன. உட்புற குழி அல்லது கருப்பை மையத்தின் அருகில் இருந்தால், அவற்றை நீக்க அறுவைச் சிகிச்சை செய்து அவசியமாகலாம். நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா? இதனால் கருச்சிதைவு ஏற்படலாம். அதனால் தான் ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது அவசியமாகிறது.

4. உடலுறவின் போது, அல்லது பிறகு வலி உடலுறவு வலியை தராது. உடலுறவு எண்டோமெட்ரியோசிஸின் போது அல்லது அதற்குப் பின் உங்களுக்கு வலி ஏற்பட்டால் அது பிரச்சினையாக இருக்கலாம். இந்த நிலை கருவுறாமை ஒரு முக்கிய காரணம் ஆகும்.

5. சோர்வு, மன அழுத்தம், மற்றும் இன்சோம்னியா இண்டோமெட்ரியோசிஸின் ஒரு அறிகுறி சோர்வாக இருப்பது. உங்களது மாதவிடாயின் போது நீங்கள் மிகவும் மன அழுத்தம் மற்றும் சோர்வுடன் இருப்பீர்கள். அண்டவிடுப்பின் போது மன அழுத்தம் ஏற்படலாம். இது இடுப்பு அழற்சி நோய் (PID), கருவுறாமைக்கு மற்றொரு காரணமாக இருக்கலாம். இன்சோம்னியாவும் ஒரு வருகை கரணமாகலாம்.

இது போன்ற அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்து தீர்வு காணுங்கள்.