Home உறவு-காதல் பெண் காதலிக்கும் ஆணை எங்கெல்லாம் பார்ப்பாள் தெரியுமா?

பெண் காதலிக்கும் ஆணை எங்கெல்லாம் பார்ப்பாள் தெரியுமா?

638

காதல் பார்வை:முதல் சந்திப்பில் மனதை கவர்வது தான் காலத்திற்கும் நீடிக்கும் என்பார்கள். முதல் சந்தில் நீங்கள் நல்லவராக தெரிந்தால், இறுதி வரை நீங்கள் நல்லவராக அறியப்படுவீர்கள். தவறாக தெரிந்தால், இறுதிவரை உங்களை தவறாகவே பார்ப்பார்கள்.

உங்களது காதலியை சந்திக்க முதல் முறையாக நீங்கள் எப்படி செல்கிறீர்கள் என்பதைப் பொறுத்து தான் நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை அவர் முடிவு செய்வார்.

பெண்கள் அனைத்தையும் கவனமாக பார்க்க கூடியவர்கள். முதல் முறை அவர்களை பார்க்க செல்லும் போது நீங்கள் நன்றாக போக வேண்டியது அவசியம்.

முதல் முறையாக ஒரு ஆணை பார்க்கும் போது, பெண்கள் எதை எல்லாம் கவனிக்கிறார்கள் என்பது தெரிந்துகொள்வோம்.

*. உங்கள் ஆடையை தான் முதலில் பார்ப்பார்கள். எனவே அவருக்கு பிடித்த நிறத்தில் அல்லது கருப்பு, மெரூன், பச்சை ஷேடுகளில் ஆடை அணிந்து செல்லுங்கள்.

*. தலைமுடி பெண்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்களது தலைமுடியை கவனிப்பார்கள், எனவே உங்களது தலைமுடியை நன்றாக வைத்திருக்க வேண்டியது அவசியம்.

*. உடல் அசைவு பெண்கள் முதலில் அதிகமாக கவனிப்பது இதை தான். நீங்கள் அவரது முன் எப்படி அமருகிறீர்கள். எப்படி பேசுகிறீர்கள் என்பதை தான் அதிகமாக கவனிப்பார்கள். எனவே நீங்கள் நாகரீகமான முறையில் நடந்துகொள்ள வேண்டியது அவசியம்.

*. நம்பிக்கை நீங்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைகுரியவராக நடந்துகொள்கிறீர்கள், அவர்கள் உங்களுடன் இருக்கும் போது எந்த அளவுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள் என்பதை எல்லாம் கவனிப்பார்கள்.

*. காலணி மேலே கூறிய அனைத்தையும் கவனித்த பிறகு, பெண்கள் உங்களது ஷூக்களை தான் பார்ப்பார்கள். அது சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். எனவே நன்றாக பாலிஷ் செய்த ஷூக்களை அணிந்து செல்லுங்கள்.

*. கண்கள் பெண்கள் கண்களை பார்த்தே அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்கள். நீங்கள் எங்கே பார்த்து பேசுகிறீர்கள், உங்கள் உண்மையாக தான் பேசுகிறீர்களா, உங்களது நோக்கம் என்ன என்பதை எல்லாம் கண்களை பார்த்தே பெண்களால் கண்டுபிடித்து விட முடியும்.

*. உங்களது பதில்கள் நீங்கள் அந்த பெண்ணுக்கோ அல்லது உங்களை சுற்றி உள்ளவர்களின் கேள்விகளுக்கோ எப்படி விடையளிக்கிறீர்கள் என்பதை வைத்தே பெண்கள் உங்களது குணத்தை எடை போட்டுவிடுவார்கள். அவர்களது பார்வையில் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது.

*. உங்களது கைகள் பெண்கள் உங்களது கைகளை கவனிப்பார்கள் என்று கூறினால் உங்களால் நம்ப முடியாது தான். ஆனால் நீங்கள் அவர்களுக்காக நாற்காலிகளை தருவது, கைகளின் அசைவுகள் போன்றவற்றை கண்காணித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.

Previous articleபெண்களின் மதுப்பழக்கத்தினால் உண்டாக்கும் பாதிப்புகள்
Next articleகணவனின் சகோதரனோடு ஏற்பட்ட தகாத உறவால் உண்டான பிரச்னை