Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உணவில் கட்டுப்பாடு எதற்காக?

உணவில் கட்டுப்பாடு எதற்காக?

23

p56aaதற்காலத்தில் யாரை உணவு அருந்தும் படி கேட்டாலும் நாம் உணவுக் கட்டப்பாட்டில் இருக்கிறோம் என்பார்கள். இது எதற்காக அவர்கள் தங்களது உடல் எடையை குறைப் பதற்காக தானே.

பத்தியமான உணவு வகை களை உட்கொள்வதன் மூலம் மட்டும் உடலின் எடை அதிகரிப்பதனை கட்டுப்படுத்த முடி யாது. உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்று வோரின் உடல் எவ்வாறு பருமனடைகின்றது என்பதனை பற்றி எப்போதாவது சிந்தித்து பார்த்தீர்களா?

உண்மையில் உடல் எடையை குறைப்பதற்கு உணவுக் கட்டுப்பாடு மட்டும் போதுமானதல்ல. பத்தியமான உணவுகள் என வகையீடுப்படுத்தப்பட்ட பல உணவுப் பொருட்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமானது என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக சிப்ஸ், கோலா வகைகள் போன்றன உடல் ஆரோக்கியத்திற்கு உசிதமானதல்ல. கட்டுப்பாடான உணவு வகைகளை அதிகமாக உட்கொள்வதனாலும் உடல் உடை உயர்வடை கின்றது. நாம் அனைவருமே கட்டழகான, எழிலான தோற்றமுடைய உடல் அமைப்பை பெற்றிருக்க வேண்டுமென விரும்புகின்றோம்.

எனினும் வேலைப்பளு, அழுத்தம் மற்றும் வேறும் பொறுப்புக்கள் காணமாக எம்மால் உடற்பயிற்சி செய்வதற்கு போதியளவு நேரத்தை ஒதுக்கிக்கொள்ள முடிவதில்லை. இதனால் அநேகமானவர்கள் உணவுக் கட்டுப்பாட்டு பழக்கங்களை பின்பற்றுவதில் அதிக நாட்டம் காட்டுகின்றனர்.

ஒன்றிரண்டு மணித்தியாலங்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்வதனை விடவும் வழமையாக உட் கொள்ளும் உணவு வகைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவது சுலபமானது.

உணவுக் கட்டுப்பாடு தொடர்பான பிழையான கருதுகோள்களினால் முன்பு இருந்ததை விடவும் இவர்கள் அதிகளவு பருமனடை கின்றனர். பல்வேறு உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் உடலின் எடையை குறைக்க முடியும் என கருது கின்றனர்.

எனினும் அவற்றின் கலோரி அளவை உன்னிப்பாக கவனித்தால் வழக்கமாக உட்கொள்ளும் உணவுப் பொருட் களையும் விடவும் அதிகமானவை என்பது புலனாகும்.