Home பெண்கள் பெண்களின் முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்க அழகு குறிப்பு

பெண்களின் முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்க அழகு குறிப்பு

62

பெண்கள் அழகு:முகத்தை குளிர்மையாக வைத்திருக்கும் முறையானது கொரியப் பெண்களிடத்தே மிகவும் பிரசித்தி பெற்றதொன்று. முகத்தை குளிர்மைப்படுத்துவதன் மூலம், பருக்களை விரட்டியடிக்கலாம்.

அத்துடன் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி முகம் பொலிவு பெறுவதுடன் இரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.

அது சரி, நாம் வீட்டிலிருந்தவாறே எமது முகத்தை எப்படி குளிர்மைப்படுத்துவது என்று பார்ப்போம்.

01. முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.

02. சிறு துணித் துண்டு ஒன்றை எடுத்து அதில் ஐஸ் கட்டியொன்றை வைத்து கட்டிக் கொள்ள வேண்டும்.

03. ஐஸ் கட்டி உருக ஆரம்பித்தவுடன் அதனை முகத்தில் பூச வேண்டும்.

04. முகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் 1 – 2 நிமிடங்கள் அதனை வைத்திருத்தல் வேண்டும்.

05. வட்டமான வடிவத்தில் முகத்தில் ஐஸ்கட்டியைக் கொண்டு மசாஜ் செய்யவும். நாடிப் பகுதியில் இருந்து மேல் நோக்கியவாறும், கன்னங்களில் இருந்து நெற்றி மற்றும் மூக்குப் பகுதிக்கும் வட்டமாக சுற்றி மசாஜ் செய்தல் வேண்டும்.

06. இவ்வாறு செய்து முடித்தவுடன் மொய்ஸ்சரைசர் ஒன்றை பயன்படுத்த வேண்டும்.

முகத்தை குளிர்மைப்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்

01. மிருதுவான சருமம்
முகத்தில் உள்ள சிறு துளைகளில் அழுக்கு மற்றும் மாசு என்பன தங்கும் பட்சத்தில் முகப்பருக்கள் ஏற்படும் என்பதால் குளிர்மைப்படுத்தல் மூலம் அந்த துளைகள் அடைக்கப்படுகின்றன. இதன் மூலம் சருமம் மிருதுவானதாக மாறுகின்றது.

02. முகப்பருக்கள் கட்டுப்படுத்தப்படும்
இந்த முறைமையின் மூலம் அழற்சி மற்றும் வீக்கம் என்பன கட்டுப்படுத்தப்படும். அதனால் முகப்பருக்கள் தோன்றுவதும் கட்டுப்படுத்தப்படும். முகப்பருக்கள் மீது சிறிது நேரம் ஐஸ் கட்டியை வைத்திருப்பதன் மூலம் முகப்பருக்களும் காணாமல் போய்விடும்.

03. சுருக்கங்கள் இல்லாமல் போகும்
முகத்தை குளிர்மைப்படுத்துவதன் மூலம் தேவையற்ற சுருக்கங்கள் எல்லாம் மறைந்து விடும்.

04. கண் வீக்கத்தை இல்லாமல் ஆக்கும்
கண்கள் விழிகள் வீங்கிக் காணப்படும் போது அதன் மீது ஐஸ் கட்டி வைப்பதன் மூலம் வீக்கம் குறைக்கப்படும்.
05. இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்
முகத்தில் உள்ள இரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்தும்.

06. மேக்கப் இடுவதை இலகுபடுத்தும்
மேக்கப் இடுவதற்கு முன்னதாக ஐஸ் கட்டியினால் மசாஜ் செய்தால் துளைகள் மூடப்பட்டு மேக்கப் போடும் போது அழகாகத் தென்படும்.

குறிப்பு
01. 15 நிமிடங்களுக்கு மேல் ஐஸ் மசாஜ் செய்யக் கூடாது.
02. ஐஸ் கட்டிகளை கிளவுஸ் அணிந்தே பிடிக்க வேண்டும்.
03. ஐஸ் கட்டிகளை குளிரூட்டியில் இருந்து வெளியே எடுத்தவுடனேயே முகத்தில் பூசக் கூடாது.
04. மென்மையான துணியிலேயே ஐஸ் கட்டியை சுற்றி வைத்தல் வேண்டும்.
ஐஸ் கட்டியுடன் கிறீன் டீ, ரோஸ் வாட்டர், கெமொமைல் தேநீர் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.