Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சி செய்ய நீங்கள் உங்களை தயார் செய்வது எப்படிதேரியுமா?

உடற்பயிற்சி செய்ய நீங்கள் உங்களை தயார் செய்வது எப்படிதேரியுமா?

70

உடல் கட்டுப்பாடு:காலையில் அலாரம் ஒலிக்கும்போது அதனை அணைத்துவிட்டு, இன்னும் பத்து நிமிடம் தூங்கலாம் என்று தொடங்கி, எழும்போது அது ஒரு மணி நேரமாகிப் போனதைக் கண்டு, தாவிக் குதித்து அலுவலகத்திற்குக் கிளம்பிச் செல்வது தினமும் நடக்கிறதா? அவசரமாக அலுவலகத்திற்குப் புறப்பட வேண்டும், நன்றாகத் தூங்கவில்லை, குளிராக இருக்கிறது, இன்று அலுவலகத்தில் எல்லாம் சொதப்பல், என் விருப்பமான விஷயங்களில் ஈடுபட எனக்கு நேரமே இல்லை – உடற்பயிற்சி செய்யாமல் விடுவதற்கு நீங்கள் இப்படியெல்லாம் பலப்பல காரணங்களை அடுக்குகிறீர்களா

இப்படி விதவிதமாகக் காரணங்கள் சொல்லி நீங்களே உங்களை ஏமாற்றிக்கொள்வதை விட்டுவிட்டு, உங்களுக்கு நீங்களே ஊக்கம் கொடுத்து தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய சில வழிகள் உள்ளன!

போதுமான நேரம் தூங்க வேண்டும் (Get Enough Sleep):

உங்கள் உடலுக்கு போதுமான ஓய்வு தேவை, அதில் நீங்கள் ஒருபோதும் குறை வைக்கக்கூடாது. சராசரியாக ஒரு நபருக்கு தினமும் 7-8 மணிநேரம் தூக்கம் தேவை. ஆனால் சிலருக்கு 5 மணிநேரம் தூங்குவதே போதுமானதாக இருக்கலாம். அடுத்த நாள் அதிகாலை ஜிம்முக்கு செல்லும் திட்டமிருந்தால், இரவு சீக்கிரமே தூங்கச் செல்லும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

அலாரம் வைப்பது (Alarm placement)

அலார கடிகாரம் அல்லது அலாரம் வைத்திருக்கும் மொபைலை படுக்கையிலிருந்து சற்று தொலைவில் வைக்க வேண்டும், அப்போதுதான் நீங்கள் அலாரத்தை அணைத்துவிட்டு மீண்டும் தூங்கிவிடமாட்டீர்கள்! அலாரத்தை அணைத்ததும் மீண்டும் படுக்கைக்குச் செல்லாமல் உங்கள் நாளைத் தொடங்குங்கள்!

ஜிம்முக்குச் செல்லும் நேரத்தை, நடைமுறையில் சாத்தியமாகும்படி திட்டமிட்டு முடிவு செய்துகொள்ளுங்கள் (Be realistic about your Gym timings):

காலை நேரத்தில் தான் ஜிம்முக்கு செல்ல வேண்டும் என்று கட்டாயமில்லை! உங்கள் கல்லூரி/வேலை நேரத்திற்கு ஏற்றவாறு ஜிம்முக்கு செல்லும் நேரத்தை மாற்றியமைத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சிக்கு எல்லா நேரமும் நல்ல நேரமே! உடற்பயிற்சி செய்யும்போது, நீங்கள் சாப்பிட்டு சிறிது நேரம் ஆகியிருக்க வேண்டும் என்பதை மட்டும் மனதில் கொள்ளவும்.

வெகுமதிகள் கொடுத்து உங்களை ஊக்குவிக்க வேண்டும் (Bribe yourself)

கடைக்குச் சென்று ஸ்டைலான உடற்பயிற்சி உடைகளை வாங்கிக்கொள்ளுங்கள். ஜிம்மில் மட்டும் தான் அதை அணியப்போகிறீர்கள். ஆகவே கவலையில்லை! நீங்கள் விரும்புவதை வாங்கிக்கொள்ளுங்கள். இப்போது ஜிம்முக்குச் செல்ல உங்களுக்கு புதியதொரு காரணமும் கிடைத்துவிட்டதல்லவா!

மனதை கொஞ்சம் ஏமாற்றிப் பழகுங்கள்! (Play mind games with yourself)

உடற்பயிற்சி உடையை அணிந்து ஜிம்முக் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். அதைச் செயல்படுத்துங்கள். ஜிம்முக்கு வந்ததும் உங்களுக்கு உடற்பயிற்சி செய்யத் தோன்றவில்லை என்றால், செய்யாதீர்கள். பிறகு, வெறும் 15 நிமிடங்கள் மட்டும் செய்தால் போதும் என்று மனதை சம்மதிக்க வையுங்கள். அதை முடித்ததும், இன்னும் 10 நிமிடம் என நீட்டித்துக்கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக இப்படி அதிகரித்துக்கொள்ளுங்கள்! இது உண்மையில் பலன் தரும்!

உங்களுக்கே பரிசு கொடுத்துக்கொள்ளுங்கள்! (Reward Yourself)

உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு 45 நிமிடம் முதல் ஒரு மணிநேரம் வரை, உங்கள் உடல் உடற்பயிற்சியின்போது இழந்த மாவுச்சத்தையும் புரதங்களையும் மீண்டும் உறிஞ்சிக்கொள்ளும். இந்த நேரத்தில், உங்களுக்குப் பிடித்த உணவுகளை சாப்பிட்டுக் கொள்ளலாம். சுவையான கிரில் சிக்கன் அல்லது மீன் சாப்பிடலாம், வேர்க்கடலை வெண்ணெயுடன் பிரெட் சாப்பிடலாம். உங்கள் விருப்பம்! உங்கள் விருந்து!

உங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்ய ஒரு நண்பரைத் தேடுங்கள் (Plan it with your partner)

உங்கள் அறையில் தங்கும் நண்பர்கள், உங்கள் நண்பர் அல்லது இணையரையும் உங்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யுமாறு ஊக்கப்படுத்துங்கள். பிடித்தவர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும்போது அது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும், தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய ஊக்கமும் கிடைக்கும். உடற்பயிற்சி முடித்த பிறகு இருவரும் காபி சாப்பிட வெளியே செல்லலாம் என்று திட்டமிட்டால் இன்னும் ஊக்கமாக இருக்கும்! உங்கள் இணையருடன் நல்லவிதமாக நேரம் செலவழிக்கவும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

இசை (Music)

ஜிம்முக்குச் செல்லும்போது உங்கள் MP3 பிளேயரையும் ஹெட்ஃபோனையும் எடுத்துச்செல்லுங்கள்! உங்களுக்கு பிடித்த துள்ளலான இசை கேட்டுக்கொண்டே மகிழ்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். இசையுடன் உடற்பயிற்சி செய்வது மகிழ்ச்சியாக இருக்கும். அதுவும் இசையின் தாளத்திற்கு ஏற்ப நீங்கள் பயிற்சி செய்யும்போது செய்யும்போது இன்னும் அற்புதமாக இருக்கும்!

உங்களுக்கே சவால் விடுங்கள் (Challenge yourself)

ஒரே உடற்பயிற்சியை செய்ய வேண்டாம். உங்கள் உடல் குழம்ப வேண்டும்! எந்தப் பகுதிக்கு வேலை கொடுக்கப் போகிறீர்கள் என்று உடலால் ஊகிக்க முடியாதபடி பார்த்துக்கொள்வதே அதிக கலோரிகளை இழக்க சிறந்த வழி!

உங்களுக்கு உண்மையில் எதில் ஆர்வம் என்று கண்டறியுங்கள் (Find your real area of interest)
உங்கள் நண்பர்கள் ஜிம்முக்கு செல்கிறார்கள் என்பதற்காக, நீங்களும் அதையே செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது என்று கண்டறிந்து அதில் ஈடுபடுங்கள். சைக்கிளிங், நீச்சல், ஜாகிங், ஃப்ரீஹேன்ட் பயிற்சிகள், யோகா, ஏரோபிக்ஸ் போன்றவற்றையும் நீங்கள் தேர்வு செய்து, தினமும் ஈடுபடலாம்.