Home பெண்கள் உடல் கட்டுப்பாடு எந்தெந்த வயதில் உடல் எடை கூடும்?

எந்தெந்த வயதில் உடல் எடை கூடும்?

36

ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் திடீரென உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கும். இதற்கு உடற்பயிற்சி இல்லாதது, சரிவிகித உணவு பழக்கம் இல்லாதது போன்ற காரணங்களாகும்.

குழந்தைப் பருவத்தில் அளவுக்கு அதிகமாக நொறுக்குத்தீனிகள் சாப்பிடுவதாலும், குழந்தைகளை ஓடியாடி விளையாடவிடாமல், தடுப்பதாலும் இளம் பருவத்திலேயே உடல்பருமன் ஏற்படுகிறது.

பெண்களுக்கு, திருமணம் ஆகும் வரை மட்டும், `உடல் எடையை கட்டுக்குள் வைத்திருந்தால் போதும்’ என்ற மனநிலை உள்ளது. திருமணத்துக்குப் பின்னர்,
ஹார்மோன்கள் காரணமாக எடை கூடுவதைக் காட்டிலும், தவறான உணவு முறை மற்றும் வாழ்வியல் முறை காரணமாகவே அதிக எடை கூடுகிறது.

ஆண்கள், திருமணம் ஆவதற்கு முன்பு வரை, பெரும்பாலும் காலை உணவைத் தவிர்த்துவிடுகின்றனர். திருமணம் ஆன பின்னர், தினமும் மூன்று வேளையும்
சாப்பிடுவதாலும், விளையாட்டுகள், உடற்பயிற்சி போன்றவற்றில் இருந்து, அறவே ஒதுங்குவதாலும் 30 வயதில் தொப்பைவர ஆரம்பித்துவிடுகிறது.