Home பாலியல் பாலியல் கல்வி யாருக்கு தேவை?

பாலியல் கல்வி யாருக்கு தேவை?

56

பாலியல் கல்வி

பாலுணர்வு, குழந்தை பேரு சம்பந்தமாக உடற்கூறு,உயிரியல் கல்வி ,உடலுறவு,பாலியல் உணர்வுகள் ,தாய்மை,மகப்பேறு,மகபேறு தடுப்பு முறை இவற்றை விஞ்சான ரீதியாக கற்கும் கல்வியே பாலியல் கல்வியாகும்.

பாலியல் கல்வியை தெரிந்து கொள்ளும் பருவம்.

பெற்றோர்களின் அன்பும், அரவணைப்பும், ஆதரவும் குழந்தை பாலியல் கல்வியை பற்றி படிப்படியாக உணர்வு வெகுவாக வழி வகுக்கிறது. எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் குழந்தையை வைத்து கொண்டு சண்டை போட்டு கொள்ள கூடாது.குழந்தைகள் உள்ளம்ஒரு பசுமையான நிலம் போல, வீட்டிலே நடப்பவை உள்ளத்தில் அப்படியே பதிந்து விடும். எனவே பெற்றோர்கள் குழந்தைக்கு தனக்கு தானே தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள உதவ வேண்டும் . குழந்தைகள் எதையும் அறிந்துகொள்ளும் ஆர்வம் உள்ளவர்கள். பாலியல் சம்பந்தமாக ஒரு குழந்தை கேள்வி கேட்டால் கூட உடனே அதை மிரட்டாது பக்குவமான முறையில் பதில் தர விளைய வேண்டும் .”தம்பி எப்படிப்பா பிறந்தான் என்ற திடீர் கேள்வியை ஒரு குழந்தை கேட்டால் ” டேய் அதை பற்றி நீ தெரிந்து கொள்ள கூடாது” என்று தடை விதிக்க கூடாது. அம்மாவின் கர்ப்பபையிலிருந்து பிறந்தான் என்று பக்குவமாக விளக்க வேண்டும். சில தர்மசங்கடமான கேள்விகளை ஒரு சிறு வயது குழந்தை எழுப்பினால் அதன் மனம் புண்படும்படி திட்டாது, அதை தவிர்த்து இது நல்ல கேள்வி ஒரு வயதிற்கு பின் பள்ளியிலேயே இதை உனக்கு கட்பிபார்கள்” என்று சமாளிக்க வேண்டும்.இது குழந்தைக்கு “என் பெற்றோர்தான் எனக்கு எல்லாம் என்ற ஒரு நம்பிக்கையை வளர்கிறது. எனவே பாலியல் கல்வி என்பது ஒரு ஆணோ,பெண்ணோ அதை முறையாக புரிந்து கொள்ளும் பக்குவமான வயதை அடைந்தபின் அதாவது உயர்நிலைப்பள்ளியில் கட்பிக்கபடவேண்டிய ஒன்றாகும்.

பாலியல் கல்வி தேவையா

தேவைதான். இதை புரிந்து கொள்ள சில அடிப்படை உண்மைகளை நாம் ஒத்துகொள்ள வேண்டும்.

1)இன்றைய சமுதாயத்தின் பொருளாதார நெருக்கடி,ஸ்திரதன்மை,தனித்துவம் போன்ற காரணங்களால் ஆண்,பெண் இருவருமே சம்பாதிக்க வேண்டிய நிலையில் உள்ளார்கள். எனவே இவர்களின் கல்யாண வயது தானாகவே தள்ளிபோடபடுகிறது.

2)நல்ல ஊட்டச்துனவும்,நல்வாழ்வில் நாட்டமும் உள்ள பெண்கள் சீகிரமே வயதுக்கு வந்து விடுகிறார்கள்.

3)நல்வாழ்வு அறிவியல் வளர்ச்சி நவீன மருத்துவமனைகள் ஒரு மனிதன் வாழ்நாளை அதிகபடுதியுள்ளன. எனவே பருவ முதிர்ச்சிக்கும் ,திருமணத்திற்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது.

4)இன்றைய பத்திரிக்கைகள் ,சினிமாக்கள்,தொலைக்காட்சிகள் ஒரு மனிதனை பாலுணர்வையும்,
வக்கிரபுத்தியையும் ,வன்முறையையும் தூண்டுகின்றன.

5)பாலியல் அறியாமை, அதைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம், பாலியல் பற்றிய தவறான அறிவு ,உணர்ச்சியால் உந்தப்படும் இளைஞ்சர்கள் சமுதாயத்தை பாலியல் குற்றங்கள் செய்ய தூண்டுகிறது. பெற்றோருக்கு தெரியாமல் காதல் திருமணம் சிறுவயதில் கர்ப்பம் ,பாலியல் நோய்கள் ,பாலியல் மனகொளாறு போன்றவை அவர்களை அலைகளிகிங்றன. விரக்தி, வெறுப்பு ,கிடைக்காததை பெரும் ஆர்வம். இவர்களை வன்முறை, அபின் போன்ற போதை மருந்துகளுக்கு அடிமையாக்குகிறது