Home அந்தரங்கம் தாம்பத்திய உறவு: மருத்துவ நிபுணர் என்ன சொல்கிறார்…!!

தாம்பத்திய உறவு: மருத்துவ நிபுணர் என்ன சொல்கிறார்…!!

22

தாம்பத்திய உறவில் எல்லா நாட்களிலும் சிறப்பாகவே செயல்பட முடியும் என்ற எண்ணத்தை முதலில் போக்க வேண்டும். உங்கள் உடல்நிலை மற்றும் மனநலம் குன்றியிருக்கும் தருணத்தில் உங்களால் சிறந்து செயல்பட முடியாமல் போகலாம்.

ஏதோ இரு தருணத்தில் உண்டாகும் இந்த மாற்றம் கண்டபின் மொத்தமாக எதிர்மறை எண்ணங்களில் மூழ்கிவிடுவது தவறு. இதன் காரணத்தால் கூட நீங்கள் சரியாக ஈடுபட முடியாமல் போகலாம். எனவே, நேர்மறை எண்ணங்கள் வளர்த்து கொள்ளுங்கள். இது தாம்பத்தியம் மட்டுமின்றி, உங்கள் வாழ்க்கை முழுதும் சிறக்க உதவும்.

வாழ்க்கையின் எல்லா தருணங்களிலும் வெற்றி தோல்விக்கு சூழ்நிலையும்காரணம். இதற்கும் அப்படி தான், இருவரில் ஒருவருக்கு சூழ்நிலை ஒத்துவரவில்லை எனிலும், கட்டாயப்படுத்த வேண்டாம். இவ்வாறு ஈடுபடுவது மன சங்கடங்களை தான் ஏற்படுத்தும். பார்ன் படங்களில் பார்த்தது போல துணையுடன் உறவில் ஈடுபட முயல வேண்டாம்.

அது வெறும் காட்சிப்படுத்தப்பட்ட படம் தான். உண்மையல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். மேலும், இது போன்ற செயல்கள் உடலளவில் மட்டுமின்றி, மனதளவிலும் பெண்களை பெரிதாக பாதிக்கும். ஒருபொழுதும் சம்மதம் இல்லமல் தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டாம். மனிதத்தன்மை படி யோசித்தால், சம்மதம் இல்லாமல் துணையுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடாதீர்கள்.