Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் எடையை தொடர்ந்தும் பேண டயட் டிப்ஸ்

உடல் எடையை தொடர்ந்தும் பேண டயட் டிப்ஸ்

68

பொது மருத்துவம்:டயட் இல்லாமல் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? டயட் என்றாலே பிடித்த பல உணவுகள் தவிர்த்து கலோரிகள் குறைந்த காய் வகைகள், சாலட் போன்றவற்றை அதிகம் உட்கொள்ளுதல். விரும்பி உண்ணும் உணவைத் தவிர்ப்பதுடன் சிலர் பட்டினி கிடக்கும் செய்கின்றனர்.

உடல் எடையைக் குறைப்பது என்பது கலோரிகள் குறைப்பது மட்டுமல்ல, உடலின் ஹார்மோன் நிலையை சமநிலையாகப் பேணுவதும் முக்கிய அம்சமாக உள்ளது.

மன அழுத்தம், மனச் சோர்வு போன்ற பல உணர்வுகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளால் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படுக்கின்றது. உடல் எடைப் பிரச்சினையை சரி செய்வதற்கு உடல் மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தைப் பேணுவதும் இன்றியமையாதது.

இந்தப் பகுதியில் உடல் எடையைக் குறைப்பதற்கு உள ஆரோக்கியத்தையும், உணர்வுகளையும் எவ்வாறு கையாள வேண்டும்? எப்போது என்ன உணவுகளைச் சாப்பிடுவதனால் உடல் எடையைப் பேண முடியும் எனப் பார்ப்போம்.

டயட் இல்லாமல் உடல் எடையக் குறைப்பதற்கான வழிகள் சில:

1. திரவக் கொழுப்பை தவிர்த்தல்.
கார்பனேடட் பானங்களை அதிகளவில் அருந்தும் போது உடல் எடை அதிகரிக்கச் செய்யும். அதற்கு பதிலாக எலுமிச்சை பானம் போன்ற கலோரிகள் குறைந்த பானங்களை அருந்துவதௌ பழக்கப்படுத்துவது சிறந்தது. கிறீன் டீ அருந்துவது விரைவாக உடல் எடையைக் குறைக்க உதவும்.

2. காலை உணவை எடுத்துக் கொள்ளுதல்.
காலை உணவை தவிர்த்தால், மெட்டபோலிசச் செயற்பாடு குறைவதுடன், சமிபாட்டில் தாமதம் ஏற்படும். சமிபாடடையாத உணவுகள் கொழுப்பாக மாருவதனால் உடல் எடை அதிகரிக்கச் செய்யும். எனவே தினமும் காலையில் 9 மணிக்கு முன்பாக காலை உணவு அருந்துவது அவசியமானது.

3. அதிகமாக நீரை அருந்துதல்.
உடலிற்கு நீர் அவசியமானது. தினமும் குறைந்தது 8 கிளாஸ் நீரை அருந்துவதனால் உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புக்கள் குறைவடையும். இதனால் உடல் எடை குறைவடையும். அத்துடன் மெட்டபோலிசச் செயற்பாட்டை சீராக்குவதனால் பசி ஏற்படுவதில் சில மாற்றங்களை உணர்வீர்கள்.

4. பழங்களை அதிகம் உட்கொள்ளுதல்.
பழங்களை உட்கொள்ளும் போது அதில் அதிகமாக நீர்ச்சத்துக் காணப்படுகிறது. இதனால் உடல் எடை குறைவதுடன் ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. தர்ப்பூசனி, ஆப்பிள், செரி, பெரி, தக்காளி போன்ற பழங்கள் மிகவும் சிறந்தது.

5. பச்சை இலை சாலட்.
உணாவில் பச்சை இலை மற்றும் காய்களிலான சாலட்டை சேர்த்துக் கொள்வதனால் உடலிற்கு ஆரோக்கியம் கிடைப்பதுடன், பசியை தூண்டுவதைத் தவிர்க்கும். சீஸ், கிறீம் போன்ற கொழுப்பு பொருட்களில் தயாரிக்கப்படும் சாலட்டிற்கு பதிலாக முட்டைக்கோசு, வெங்காயம், மிளகாய், செலரி போன்ற உடன் காய்களில் தயாரிக்கும் சாலட்களை உட்கொள்வது சிறந்தது.

6. முழு தாணியங்கள்.
முழு தாணியங்களை உட்கொள்வதனால் உடலிற்கு ஆரோக்கியம் கிடைப்பதுடன், நீண்ட நேரத்திற்கு பசியை ஏற்படுத்தாது. உட்ஃபல் எடையைக் குறைக்கும் முழு தாணியங்களான சிவப்பு அரிசி, ஆட்டா, சோளம், திணை, ஓட்ஸ் போன்றவற்றில் அதிகளவான நார்ப் பொருட்கள் காணப்படுகின்றது. அத்துடன் இதில் அதிகளவான் அண்டிஒக்ஸிடன் மற்றும் கனியுப்புக்களான சிங், மக்னீசியம், செம்பு, இரும்பு போன்றவையும் காணப்படுகிறது.

7. புரத உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுதல்.
புரதச் சத்துள்ள உணவுகளை அதிகளவில் சேர்த்துக் கொள்வதனால் வயிற்றை இலகுவாக திருப்திப்படுத்துவதுடன், நீண்ட நேரத்திற்கு பசியையும் ஏற்படுத்தாது. புரதச்சத்து உடலில் பசியை தூண்டும் ஹார்மோன்களில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் கலோரிகளும் குறைவாகக் கிடைக்கும்.ஆனால் அளவுக்கதிகமாக புரதத்தைச் சாப்பிடுவது சிறந்ததல்ல.

8. மெதுவாக மென்று சாப்பிடுதல்.
உண்ணும் உணவினை மெதுவாக மென்று சாப்பிடுவதனால் குறைந்தளவு கலோரிகளே உடலிற்குக் கிடைக்கும். இதனால் வயிறு நிரம்பிய தகவல் மூளைக்குக் கிடைப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கும். எனவே குறைவான அளவு உணவையே உட்கொள்வீர்கள். அத்துடன் சமிபாட்டு செயற்பாடும் சீராகும்.

9. சமநிலையான உணவை உட்கொள்ளுதல்.
உணவில் மாப்பொருள், புரதம், நல்ல கொழுப்பு போன்ற எல்லா ஊட்டச்சத்துக்களும் தேவையான அளவு கிடைப்பது அவசியமானது. சமநிலையான ஊட்டச்சத்து உடலிற்குக் கிடைப்பதனால் உடலிற்குச் சக்தி கிடைப்பதுடன், நச்சுப் பொருட்களை வெளியேற்றி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.

10. அதிகமாக சமைத்த உணவை தவிர்த்தல்.
அதிகமாக சமைத்த உணவில் ஊட்டச்சத்துக்கள் குறைவடைந்து விடும் இதனால் பசி தீர்ந்த உணவு ஏற்படாது. உடனே எல்லோரும் துரித உணவுகளை நாடிச் செல்வார்கள். இதைத் தவிர்ப்பதற்கு பச்சையாக சாலட் போன்றவற்றை எடுத்துக் கொள்வதுடன், வாட்டிய காய்கறிஉ, சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்வதும் சிறந்தது.