Home பாலியல் உங்கள் அந்தரங்க கட்டில் வாழ்கையை பாதிக்கும் நோய்

உங்கள் அந்தரங்க கட்டில் வாழ்கையை பாதிக்கும் நோய்

52

பாலியல் நோய்கள்:எந்த ஒரு ஜீவராசியாக இருந்தாலும் அடுத்த தலைமுறையை உற்பத்தி செய்து கொண்டுதான் இருக்கும். இது இயற்கை தாயின் முதற்கடமையாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள், சிறு சிறு உயிரினங்கள் என அனைத்து உயிரினங்களும் இதில் அடங்கும். மற்ற உயிரினங்களுக்கு இதில் பிரச்சினை இருக்கோ இல்லையோ மனித இனத்திற்கு அதிக பிரச்சினை இதில்தான் ஏற்படுகின்றது. ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு உயிரை இந்த பூமிக்கு கொடுப்பதற்குள் எண்ணற்ற உடல் சார்ந்த கோளாறுகளை இருவரும் சந்திக்க நேரிடுகிறது. இது கால மாற்றத்தால் நிகழ்கின்ற ஒன்றாக நாம் சாதாரணமாக சொல்லிவிட முடியாது.

இதற்கு பல காரணிகள் இருக்கத்தான் செய்கிறது. குழந்தை இன்மை இன்றைய காலத்தில் மிக பெரிய குறைபாடாகவே பலராலும் பார்க்க படுகிறது. இதற்கேற்றவாறு சந்தைகளிலும் பல போலி மருந்துகளை விற்று லாபம் சம்பாதிக்க பார்க்கின்றனர். குழந்தை இன்மைக்கு முதல் காரணம் ஆரோக்கியமற்ற உடலுறவுதான் என்கிறது ஆராய்ச்சிகள். இதனை சீர்குலைக்கவே சர்க்கரை நோயும் அதில் ஒன்றாக வரிசையில் நிற்கிறது. சர்க்கரை நோய் எவ்வாறு இல்லற வாழ்வை கெடுகிறது என்பதை இந்த பதிவில் அறிவோம்.

சர்க்கரை நோயா…!
இன்று மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்களுக்கு இருக்கும் பிரச்சினை இந்த சர்க்கரை நோய்தான். வயது வித்தியாசம் பார்க்காமல் இது அனைவரையும் ஆட்டி படைக்கிறது. சர்க்கரை நோய் உடல் அளவில் மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. கூடவே உளவியல் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளும் இதோடு சேர்ந்தே வருகிறது. இதன் தாக்கம் உங்கள் இல்லற வாழ்க்கையையும் முற்றிலுமாக பாதிக்க செய்கிறது.

என்னதான் ஆகும்..? சர்க்கரை நோய் உடலில் இருப்பதால் எண்ணற்ற பிரச்சினை வர தொடங்கி விடும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் உடலுறவில் நாட்டம் இல்லாமல் இருப்பார்கள். அத்துடன் அவர்களின் பிறப்புறுப்புகளில் உணர்வு குறைந்து வறண்டு காணப்படும். மொத்தத்தில் உடலுறவு என்றாலே சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு பாகற்காய் போலத்தான் கசக்க செய்யும். இதற்கு முழு காரணமும் உடலில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் ஹார்மோனில் மாற்றம் ஏற்பட்டு, மன அழுத்தம் அதிகரித்து சோர்வு ஏற்படும். இது மனதளவிலும் சோர்வை தருகிறது.

ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்… சர்க்கரை நோய் கொண்ட ஆண்களுக்கு விறைப்பு தன்மை ஏற்படும். சிலருக்கு விறைப்பு தன்மை அதிகரிப்பதால் அதுவே சர்க்கரை நோயின் அறிகுறியாக கூட இருக்கலாம். சர்க்கரை நோயால் நரம்புகள் மிகவும் தளர்ந்து தசைகள் வலுவிழந்து போகும். அதிக ரத்த அழுத்தம், மன குழப்பம், நடுக்கம் போன்றவையும் இதில் அடங்கும். மேலும் உடல் பருமன் அதிகரிக்க செய்யும்.

பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள்… ஆண்களுக்கு இந்த வித பிரச்சினைகள் என்றால் பெண்களுக்கு வேறு சில பிரச்சினைகள் வரிசையாக நிற்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகள், உடலுறவில் நாட்டமின்மை, வலியுடன் கொண்ட உடலுறவு, ஆர்கஸம் அடைவது குறைதல், பிறப்புறுப்பில் வறட்சி போன்றவை ஏற்படுகிறது. மேலும் பெண்களின் உடலில் வலிமை குறைந்தும் விடுகிறது.

தனிமை நிலைதான்..! சர்க்கரை நோய் கொண்ட தம்பதிகள் கிட்டத்தட்ட ஒரு மோசமான நிலையைத்தான் அடைவார்கள். காதல் அவர்களுக்குள் அதிகம் இருந்து காமம் ஒரு விஷயமாக இல்லையென்றால் இது ஒரு பிரச்சினையாகவே அவர்களுக்கு தோன்றாது. ஆனால் அவ்வாறு இருப்பது மிக குறைந்த தம்பதிகளே…! இல்லற வாழ்வு மிக முக்கியமாக கருதும் பல தம்பதிகளுக்கு இந்த சர்க்கரை நோய் சற்றே மோசமானதுதான். உடலுறவு முக்கியம் என்று நினைக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கு தனிமை நிலைதான் கிடைக்கிறது.

தீர்வு #1… சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தம்பதிகள் முதலில் தங்களுக்குள் நல்ல ஆரோக்கியமான உறவை உருவாக்க வேண்டும். அடுத்து நல்ல உளவியல் மற்றும் உடலுறவு சார்ந்த மருத்துவரை அணுக வேண்டும். அவர்கள் கூறும் மருந்துகளை அன்றாடம் பின்பற்ற வேண்டும். தினமும் ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். எப்போதும் இருவரும் மனம் விட்டு தங்கள் பிரச்சினைகளை பேச வேண்டும். இது தங்கள் இருவரின் வாழ்க்கை என்பதை மறந்துவிட கூடாது.

தீர்வு #2… சிலர் ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவத்தை நாடுவார்கள். இதுவும் நல்ல முறையே. ஆனால் நல்ல மருத்துவரா என்பதை நிச்சயம் உறுதி செய்ய வேண்டும். பூனைக்காலி விதை இந்த பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு என்றே சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது விறைப்பு தன்மையை குணப்படுத்த நன்கு உதவுகிறது. எந்த ஒரு மருந்தை எடுத்து கொள்வதாக இருந்தாலும் முதலில் மருத்துவரை ஆலோசித்து விடுங்கள். என்றும் நலம் பெற வாழ்த்துக்கள் நண்பர்களே..!