Home ஆண்கள் ஆண்களின் விந்து அழிவதற்கு இவைகள்தான் முக்கிய காரணம்

ஆண்களின் விந்து அழிவதற்கு இவைகள்தான் முக்கிய காரணம்

483

ஆண்களின் விந்து:இன்றைய நவீன உலக வாழ்க்கையில் எத்தகைய ஆரோக்கியமான வாழ்வை நாம் வாழ்கின்றோம் என்பதை நன்கு அறிந்திருக்க வேண்டும். கடமைக்கு வாழும் வாழ்க்கை கடினமான பாதையாகவே முடிந்து விடும். நலமான இன்பத்தை தரும் வாழ்வையே அனைவரும் விரும்புவார்கள். ஆனால் இது பல சந்தர்பங்களில் நிறைவேறாமலே போய்விடுகிறது. குறிப்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் இது போன்ற பிரச்சினைகள் இல்லற வாழ்வின் போதுதான் ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிடாய், ஹார்மோன் குறைபாடு என்றால்… ஆண்களுக்கு வேறு சில பிரச்சினைகள் இருக்க செய்கிறது.

ஆண்களை இல்லற வாழ்வில் ஆரோக்கியத்தை குறைத்து, குழந்தை உருவாவதை தடுக்கிறது. இதற்கு முழு காரணமும் விந்தணுக்களின் செயல்பாடே. விந்தணுக்கள், ஆண்களுக்கு மிக முக்கியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. இவை ஆரோக்கியம் இன்றி இருந்தால் பெண்ணின் கருவுடன் சேர்ந்து சிசுவை உருவாக்க இயலாது. எந்த வகைகளில் எல்லாம் விந்தணுவானது பாதிப்படைந்து வலுவிழக்கிறது என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அதன்பிறகு, தகுந்த முறைகளை கடைபிடிக்க வேண்டும். இந்த பதிவில் இவற்றை பற்றி முழுமையாக அறிவோம்.

ஏன் விந்தணுக்கள் பாதிப்படைக்கிறது…?
எந்த வகையான உயிரினமாக இருந்தாலும் அதற்கென்று தகுந்த சூழலும், தகவமைப்பும் இருக்க வேண்டும். அவை இல்லையென்றால், அந்த உயிரினத்தின் வாழ்வியலை சீர் குலைக்கும். அதே போன்றுதான் ஆண்களின் விந்தணுவும். உடலில் தகுந்த சூழல் இல்லையென்றால், விந்தணு முற்றிலுமாக சிதைவடைய கூடும். பொதுவாகவே இவை 5 முதல் 7 நாட்கள் பெண்ணின் உடலினுள் வாழும். ஆனால் ஆரோக்கியமற்ற விந்தணு விரைவிலே இறக்க கூடும். இதனால் கரு முட்டையில் சிசு உருவாக இயலாது.

விந்தணுவை தாக்கும் தாமதமான உறக்கம்..!
இன்று ஸ்மார்ட் போன் உலக வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மில் பலருக்கு தூக்கம் என்ற ஒன்று மறக்கும் அளவிற்கு வந்து விட்டது. இதன் தாக்கத்தால் உடலில் பல பாதிப்புகள் ஏற்படும். அவற்றில் மிக முக்கியமான ஒன்று, விந்தணுக்கள் சிதைவடைதல். ஆண்களுக்கு இரவு 8 மணி முதல் 10 மணி வரைதான் விந்தணுக்களின் செயல்பாடு சுறுசுறுப்பாக இருக்கும்.

அதாவது, விந்தணுக்கள் கருமுட்டையுடன் வேகமாக இணைந்து கருவை உருவாக்க அதிக வாய்ப்புகள் இந்த நேரத்தில் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. எனவே இரவில் அதிக நேரம் கண் விழித்திருந்தால் அது விந்தணுவின் ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் அவற்றின் செயல்பாடும் குறைந்து விடும்

விந்தணுவை வலுவிழக்க செய்யும் பானங்கள்..! இதில் இவ்வளவு நச்சு தன்மை உள்ளது என்று கூறினாலும் நாம் குளிர் பானங்கள் குடிப்பதை நிறுத்த மாட்டோம். சோடாக்கள் அதிகம் நிறைந்த இவைதான் உங்கள் விந்தணுவிற்கு மிக பெரிய பாதிப்பை தருகிறது. அதிக சர்க்கரை அளவுடைய பானங்களை எடுத்து கொண்டால் அது உங்கள் முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

ஃபோனும் ஆபத்தே..! ஆண்கள் பலருக்கு இருக்கும் பிரச்சினை இதுதான். எப்போதும் தங்கள் பாக்கெட்டிலே ஸ்மார்ட் போனை வைத்திருப்பது…! இதில் உள்ள அதிக படியான கதிர்கள் உங்கள் உடலின் DNA அமைப்பை மாற்றி விந்தணுவை சிதைவடைய செய்து விடும். இனி உங்கள் ஸ்மார்ட் போனை உங்கள் அருகில் வைத்து உறங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.

அதிக மன அழுத்தம்.. பல ஆராய்ச்சிகள் திடுக்கிடும் இந்த உண்மையை வெளியிட்டுள்ளது. பொதுவாக உங்களுக்கு அதிக கோபமோ, மன அழுத்தமோ, மன கசப்புகளோ ஏற்பட்டால் உங்கள் உடல் நலத்தை அது பாதிக்கும் என்பதை நன்கு உணருங்கள். அதோடு இது நிறுத்தி கொள்ளாமல், விந்தணுவின் ஆரோக்கியத்திற்கும் மிக பெரிய இடையூறை தரும். முடிந்த அளவிற்கு உங்கள் மனதை சாந்தமாக வைத்து கொள்ளுங்கள்.

அதிக தூக்கமும் வேண்டாமே..! பல ஆண்கள், இன்று ஐ.டி. நிறுவனங்களில் இரவு நேரங்களிலே வேலை செய்கின்றனர். அதுவே விந்தணுவை பாதிப்படைய செய்கிறதென்றால், அதற்கு சமமாக இன்னொரு பிரச்சினையும் கூடவே வருகிறது. இரவில் வேலை செய்த களைப்புடன் அடுத்த நாள் முழுவதும் பகல் நேரங்களில் அதிக நேரம் தூங்க நேரிடும். இதுவும் விந்தணுவின் ஆரோக்கியத்தை கெடுக்கும். 7 மணி நேரம் நல்ல உறக்கம் கொண்ட ஆண்களின் விந்தணுக்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்குதாம்.

ஆரோக்கிய உணவுகள்… விந்தணு பிரச்சினை கொண்ட ஆண்களுக்கு இதனை சரி செய்ய வேறு சில வழிகளும் உள்ளது. முடிந்த அளவிற்கு சத்தான உணவுகளையே சாப்பிட வேண்டும். மேலும், உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் ஃபாஸ்ட் ஃபூட்களை தவிர்க்க வேண்டும். கையில் கிடைக்கும் உணவுகளை சாப்பிடாமல் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.