Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உங்க எடை அதிகமாகுதா?இந்த முறையை கையாளுங்கள்

உங்க எடை அதிகமாகுதா?இந்த முறையை கையாளுங்கள்

158

உடல் கட்டுப்பாடு:உடல் எடையை குறைப்பதன், ஃபிட்டாக இருக்க வேண்டியதன் அவசியமும், அதீத உடல் எடையுடன் இருப்பதினால் என்னென்ன உடல் நல பாதிப்புகள் ஏற்படும் என்பதை தெரிந்தே வைத்திருக்கிறோம். இதைத் தொடர்ந்து உடல் எடையை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறவர்கள் ஒருபக்கம் என்ன செஞ்சாலும் உடல் எடை குறையவே மாட்டீங்குது என்று புலம்புவதும் இன்னொரு பக்கம் உடல் எடையை குறைக்கிறேன் என்று சொல்லி நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிற சத்துக்களையே எடுக்காமல் தவிர்ப்பதால் பல்வேறு உடல் பாதிப்புகளாலும் பாதிக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் தேவையான சத்துக்கள் என்ன என்பதை அவர்களது உணவுப்பழக்கம், இருக்கிற சூழல் மற்றும் வாழும் வாழ்க்கை முறை ஆகியவற்றை கொண்டே முடிவு செய்யப்பட வேண்டும். அனைத்துவிதமான சத்துக்களும் கிடைக்கிற மாதிரியான ஒரு ஹெல்தி டயட் மேலும் அது உடலில் உள்ள கொழுப்பை கரைக்கவும் வேண்டும் என்று நினைக்கிறவர்கள் ரெயின்போ டயட் பின்பற்றலாம்.

#1
இந்த ரெயின்போ டயட்டில் பெரும்பாலும் காய்கறி மற்றும் பழங்களே நிறைந்திருப்பதால் அதில் அதிகப்படியான அல்கலைசிங் துகள்கள் இருக்கின்றன. அதனை தொடர்ந்து நீங்கள் எடுத்துக் கொள்வதினால் உங்களுக்கு புற்றுநோய் தாக்கும் பாதிப்புகளை குறைத்திடும்.

இந்த டயட்டில் உணவின் வண்ணங்கள் மூலமாக தான் பிரிக்கப்படுகிறது என்பதால் நீங்கள் தாராளமாக கடைபிடிக்கலாம்.

#2
பல்வேறு வண்ணங்களில் இருக்கக்கூடிய காய்கறி மற்றும் பழங்களில் ஏராளமான மைக்ரோ நியூட்ரிஷியன்கள் இருக்கின்றன. இவற்றை நீங்கள் ரெகுலராக கூட எடுத்துக் கொள்ளலாம். இதில் நீங்கள் புதுமையாக எதையும் சமைத்து சேர்க்கப்போவதில்லை.

இயற்கையாக கிடைக்கிற பொருட்கள் அதன் நிறங்களைக் கொண்டு பிரித்து சாப்பிடப் போகிறீர்கள்.

#3
மற்ற டயட் முறைகளைப் போல இதில் எந்த விதிமுறைகளும் கிடையாது. தினமும் ஐந்து கப் அளவு காய்கறி அல்லது பழங்களை சாப்பிட வேண்டும். அவை அனைத்துமே பல வண்ணங்களின் கலவையாக இருக்க வேண்டும், குறைந்தது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட வண்ணங்களை கொண்ட காய்கறிகளை கொண்டிருப்பது அவசியம்.

சிகப்பு,மஞ்சள், ஆரஞ்சு,வெள்ளை, பச்சை, நீலம், பர்ப்பிள் போன்ற நிறங்களை எடுத்துக் கொள்ளலாம்.

#4
சிகப்பு நிறமுள்ளவை என்றால் ஸ்ட்ராபெர்ரீ, தர்பூசணி, சிகப்பு திராட்சை, பீட்ரூட், தக்காளி,மாதுளை,சிவப்பு குடைமிளகாய் ஆகியவறை அடங்கும். இவற்றில் லைகோபின் பீட்டாசைசின் இருக்கிறது. இவற்றை எடுத்துக் கொள்வதால் உங்களது ரத்த நாளங்களுக்கு நன்மைபயக்கும். முதுமை காலத்தில் ஏற்படக்கூடிய அல்சைமர் பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

இது உங்கள் சருமத்திற்கு மிகவும் நல்லது. ப்ரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தவிர்க்கலாம். இவற்றில் ஆண்ட்டிஆக்ஸிடண்ட் நிறைய இருக்கும் குறிப்பாக இந்த உணவுகளில் விட்டமின் பி இருக்கும். சிகப்பு திராட்சையில் இருக்கக்கூடிய ரிஸ்வெராட்ரோல் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் பாதிப்புகளை குறைக்கிறது.

தர்பூசணி மற்றும் தக்காளியில் இருக்கிற லைகோபென் ப்ரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது, பீட்ரூட் சிகப்பு நிறமாக இருப்பதற்கு காரணம் அதிலிருக்கும் பீட்டாசைசின் தான், இவை நம் உடலில் இருக்கக்கூடிய செல்களை ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது.

#5
அடுத்ததாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம். இந்த பிரிவில் எலுமிச்சை, கேரட்,பூசணிக்காய், சோளம்,ஆரஞ்சுப்பழம், சாத்துக்குடி, அப்ரிகாட்,அன்னாசிப்பழம் ஆகியவை இடம்பெறுகிறது. இவற்றில் லுடியின் மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை இருக்கிறன. இவை தொடர்ந்து எடுத்துக் கொள்வதினால் கண்களுக்கும் பார்வைக்கு மிகவும் ஏற்றது, எலும்பு முட்டுகளுக்கு வலு சேர்க்கும்,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மிக முக்கியமாக இது கொழுப்பை கரைக்கும்.

ஆரஞ்சு நிற உணவுகளில் அதிகப்படியான பீட்டா கரோட்டின் மற்றும் விட்டமின் சி இருக்கிறது. இவை சருமத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இவற்றில் இருக்கும் லுடியின் மூளை செயல்பாடுகளை துரிதமாக்கவும் உதவிடுகிறது.

#6
காலிஃப்ளவர்,வெங்காயம், முள்ளங்கி,பூண்டு,முட்டைகோஸ், ஆகியவை வெள்ளை வண்ணத்தில் சேர்கிறது. இவற்றில் எக்ஸாந்தோன் அலிசின் இருக்கிறது. இது ஆண்ட்டிஆக்ஸிடண்ட்டாக செயல்படும். இவற்றை நீங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்வதினால் உங்களது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இது கொழுப்பினை கரைக்க உதவுவதுடன் வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும். பூண்டில் இருக்கக்கூடிய லிசின் நம் ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவிடும். இதனால் சர்க்கரை நோய் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க பயன்படும்.

#7
க்ளோரோஃபில் நிறம்பியிருக்கக்கூடிய பச்சை நிறத்தில் இருக்கக்கூடிய என்று பட்டியலிட்டால் கீரை வகைகள், வெள்ளரி, பட்டாணி,வெண்டைக்காய்,பாவக்காய்,அவரை,முருங்கை, பெரும்பாலன காய்கள் பச்சை நிறத்தில் தான் இருக்கின்றன.

அவற்றை சாலெட்டுகளாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் வழக்கமாக நீங்கள் செய்யும் பொரியல் போல தயாரித்து சாப்பிடலாம். இவை செரிமானத்திற்கு பயன்படும் மேலும் சரும சுருக்கங்களை போக்க உதவிடும், எலும்புகளின் வளர்ச்சிக்கு அவசியமான ஒன்றாகும். பச்சை நிறமுள்ள உணவுகளில் சல்ஃபர் என்ற மினரல்ஸ் இருக்கிறது. இவற்றை நீங்கள் தொடர்ந்து எடுத்துக் கொள்ள அவசியமான இன்னொரு காரணம் என்ன தெரியுமா?

இவை நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற வைத்திடும் , கீரைகளில் இருக்கக்கூடிய தைலாகோய்ட்ஸ் கொழுப்பை கரைக்க உதவுவதுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசையை கட்டுப்படுத்தும்.

#8
ப்ளூ மற்றும் பர்ப்பிள் நிறன் கொண்டவை என்று பார்த்தால் கத்திரிக்காய், திராட்சை,ப்ளூபெர்ரீ,ப்ளம்ஸ் பழம் ஆகியவற்றை சொல்லலாம். இவற்றில் ஆன்தோசியானின் இருக்கிறது.

இவை ரத்த நாளங்களை சுத்தமாக்கும். இதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் தவிர்க்கப்படும். இவை உங்கள் தலைமுடிக்கு மிகவும் நல்லது செல்களின் துரித செயல்பாடுகளுக்கு இவை உதவிடும். முக்கியமாக சிறுநீர் தொற்று பாதிப்புகளை தவிர்க்கலாம்.

#9
மார்க்கெட்டுக்கு செல்லும் போது என்ன காய் வாங்குவது என்று குழப்பமாக இருந்தால் இந்த வண்ணங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நாட்களுக்கு முதல் நாள் சிகப்பு, அடுத்த நாள் மஞ்சள் அல்லது ஆரஞ்சு,மூன்றாம் நாள் வெள்ளை, நான்காம் நாள் பச்சை, ஐந்தாம் நாள் நீலம்.

#10
இந்த ரெயின்போ டயட் எடுத்துக் கொள்வதினால் உங்களுடைய உடல் எடை குறைவதுடன், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதோடு உங்கள் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் சீராக கிடைத்திடும்.

இவற்றை நீங்கள் எடுக்கும் அதே நேரத்தில் ஜங்க் உணவுகளை தவிர்ப்பது மிக மிக அவசியமான ஒன்று. இவை பழகிய பின் ஜங்க் உணவுகள் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழாது.