Home உறவு-காதல் அலுவலகத்தில் ஆண் நண்பர்களின் நட்பு

அலுவலகத்தில் ஆண் நண்பர்களின் நட்பு

31

அலுவலகம் என்று வந்து விட்டால் வித்தியாசமான அணுகுமுறை அவசியமானதாகவே பார்க்கப்படுகிறது; அது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் தனிப்பட்ட ரீதியாக இருந்தாலும் சரி. உடன் வேலை செய்யும் ஆண்கள் சில நேரம் பெரும் உதவியாக விளங்குவார்கள்.

நம் வேளையில் சில நேரம் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அவ்வேளையில் நம் நண்பர்களே நமக்கு கை கொடுப்பார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான நட்பு நேர்மறையாகவும் அமையும் எதிர்மறையாகவும் அமையும். உடன் வேலை செய்யும் ஆண் நண்பர்களால் ஏற்படும் நன்மைகளை பார்க்கலாம்.

* எல்லா நாணயத்துக்கும் இரண்டு பக்கங்கள் இருப்பதை போலவே, ஆண் பெண் இடையேயான நட்பிற்கும் இரண்டு பக்கங்கள் உள்ளது. ஒரு ஆணும் ஒரு பெண்ணும் வெறும் நண்பர்களாக மட்டுமே இருக்க முடியுமா என்ற கேள்வி எப்போதும் எழுவதுண்டு. இதற்காக பல ஆய்வுகளும் நடத்தப்பட்டு தான் வருகிறது. அலுவலகத்தில் உடன் வேலை செய்யும் ஆண்களிடம் நட்பு பாராட்டுவதால் பல நன்மைகள் இருந்தாலும் கூட சில தீமைகளும் இருக்கத் தான் செய்கிறது.

* ஆண்-பெண் நட்பு சில சமயம் உடல் கவர்ச்சியினால் அவர்களை ஆட்டுவிக்கும். அப்படி ஆகும் போது நட்பு என்ற எல்லைக்குள் மட்டும் உங்களால் அதிக காலம் இருக்க முடிவதில்லை.

* எதிர் பாலினத்தோடு அந்த மாதிரியான உணர்ச்சிகள் ஏற்படுவது இயற்கை தானே. உங்களுடன் வேலை செய்யும் ஆண் நண்பரிடம் அவ்வகை உணர்வு ஏற்பட்டு விட்டால் அது அவ்வளவு சுலபத்தில் போகாது என்பதை மறந்து விடாதீர்கள். இது நன்றாக போய் கொண்டிருக்கும் உங்கள் உறவை பாதிக்கும்.

* உங்களுடன் வேலை செய்யும் ஆணுடன் நட்பு நிலைக்க வேண்டுமானால் நீங்கள் இருவருமே திருமணமாகாதவர்களாக இருக்க வேண்டு. திருமணம் ஆகாதவர்களாக இருந்தால் இருவருக்குமே சுதந்திரம் அதிகமாக இருக்கும். ஆனால் இதுவே உங்கள் இருவரில் யாரவது ஒருவர் திருமணமானவராக இருந்தாலும் கூட நிலைமையே தலைகீழ். உங்கள் வாழ்க்கையில் வேறொருவர் இருக்கிறார் என்ற எண்ணம் எப்போதும் உங்கள் தலையில் ஓடி கொண்டே இருக்கும். அதனால் அவருக்கு துரோகம் செய்யக் கூடாது என்ற குற்ற உணர்ச்சி ஏற்படும்.

* நீங்கள் திருமணமானவரா? அப்படியானால் உங்களுடன் வேலை செய்யும் உங்கள் ஆண் நண்பரால் உங்கள் கணவனுடனான உங்கள் உறவில் உரசல்கள் ஏற்படலாம். உங்கள் நட்பினால் உங்கள் கணவனின் மனதில் பொறாமையும், பாதுகாப்பின்மையும் ஏற்படும். அதனால் உங்கள் நண்பருடனான உறவில் கவனம் தேவை.