Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாத உணவுகள்!

உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாத உணவுகள்!

18

postworkout-meal-13-1476361317நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருபவரா? அப்படியெனில் உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாத உணவுகள் என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்து வருபவரா? அப்படியெனில் உடற்பயிற்சியினால் முழு நன்மையையும் பெற உடற்பயிற்சி செய்யும் முன்பும், உடற்பயிற்சிக்கு பின்னரும் குறிப்பிட்ட சில உணவுகளை உட்கொள்ளக்கூடாது.

தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், சர்க்கரை நோய், உடல் பருமன் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம். ஆனால் அத்துடன் சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். இங்கு ஒருவர் உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பச்சையான காய்கறிகள் காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது நல்லது தான். ஆனால் அந்த காய்கறிகளை உடற்பயிற்சி செய்த பின் சாப்பிடக்கூடாது. உடற்பயிற்சிக்குப் பின் உடல் ஏராளமான ஊட்டச்சத்துக்களை இழந்திருக்கும். அப்போது வெறும் காய்கறிகளை சாப்பிட்டால், உடலுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது.

இனிப்புகள் உடற்பயிற்சிக்குப் பின் இனிப்பு பலகாரங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இனிப்பு பலகாரங்களில் இனிப்பு அதிகம் இருப்பதால், அது கொழுப்புக்களைக் கரைக்கும் செயல்பாடுகளில் இடையூறை ஏற்படுத்தி, உடற்பயிற்சி செய்ததன் முழு பலனை கிடைக்கப் பெறாமல் செய்யும்.

காரமான உணவுகள் காரமான உணவுகள் அல்லது சாட் பொருட்களை உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிடுவது நல்லதல்ல. இம்மாதிரியான உணவுகள் உடற்பயிற்சியினால் உடல் ரிலாக்ஸ் ஆவதைக் குறைக்கும்.

கொழுப்புமிக்க உணவுகள் உடற்பயிற்சி செய்த பின் எண்ணெயில் பொரித்த உணவுகளான சிப்ஸ், வடை, போண்டா, சமோசா போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இந்த உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் ஏராளமான அளவில் இருப்பதால், அது உடற்பயிற்சியினால் கிடைக்கும் நன்மைகளைத் தடுக்கும்.

எனர்ஜி பார்கள் பெரும்பாலான எனர்ஜி பார்களில் சர்க்கரை மற்றும் கொழுப்புக்கள் அதிகம் இருக்கும். இவற்றை உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிட்டால், இழந்த ஆற்றல் மீண்டும் கிடைத்தது போன்று உணரச் செய்யும். அதே சமயம் அது இரத்த சர்க்கரை அளவில் ஏற்றத்தாழ்வை உண்டாக்கும்.

பீன்ஸ் உடற்பயிற்சிக்குப் பின் சாப்பிடக்கூடாத உணவுகளில் பீன்ஸ் ஒன்று. இதனை சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை மற்றும் செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.