Home பெண்கள் அழகு குறிப்பு முகத்திலே அசிங்கமான கரும்புள்ளியா..? வீட்டிலே சரி செய்ய இதோ இயற்கை வழிகள்..!

முகத்திலே அசிங்கமான கரும்புள்ளியா..? வீட்டிலே சரி செய்ய இதோ இயற்கை வழிகள்..!

27

சிறு கரும்புள்ளிகள் நமது முகத்தில் தோன்றுகிறது.இவை மூக்குப் பகுதிகயில் காணப்படுகின்றது இந்த கரும்புள்ளிகள் சருமத்தில் உள்ள எண்ணெய்ச் சுரப்பிகளில் இருந்து உருவாகின்றது.

எண்ணெய் சுரப்பிகளில் அதிகமாக சுரக்கும் சீபம்(sebum) எனப்படும் எண்ணெய் பொருள்,சிறிது சிறிதாக கடினமாகி இறந்த சருமம் அல்லது பக்டீரியாவுடன் சேர்வதால் இந்தக் கரும்புள்ளிகள் தோன்றுகின்றது.

இந்த சீபம்(sebum) காற்றில் உள்ள ஒக்ஸிஸனுடன் சேர்ந்து தாக்கம் ஏற்படுத்துவதால் இவை கறுப்பு நிறமாக மாறுகின்றது.

கரும்புள்ளிகள் தோன்றுவதற்கான காரணங்கள்

(1) மன அழுத்தம்

(2) ஹோர்மன்களின் மாற்றம்

(3) பர்ம்பரை

(4) அழுக்கான சருமம்

(5) அழகுசாதன பொருட்கள்

(6) புகைப் பிடித்தல்

(7) மதுபானம்

(8) காஃபின்(caffeine)

இயற்கையான வழிகள்

(1)தக்காளி
தக்காளி பழத்தில் நச்சுக் கொல்லித்(antibiotic) தன்மை இருக்கின்றது.

தக்காளிப் பழத்தை எடுத்து தோலை நீக்கி நன்றாக மசிக்க வேண்டும்.

தூங்குவதற்கு முன் மசித்து எடுத்த தக்காளி பேஸ்ட்டை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும்.பின்னர் காலையில் எழுந்து முகத்தை நன்றாக கழுவ வேண்டும்.

(2) எலுமிச்சப் பழச்சாறு
எலுமிச்சப் பழச்சாற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.பின்னர் முகத்தை இளஞ் சுடுநீர்ல் கழுவி,இந்த கலவையை பூச வேண்டும்.
20 நிமிடங்களின் பின்னர் நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

(3) பற்பசை
பற்பசை சிறிதளவு எடுத்து மெல்லியபடையாக கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவ வேண்டும். 25நிமிடங்களின் பின்னர் முகத்தை நன்றாக நீரில் கழுவ வேண்டும்.
இவ்வாரு இரு வாரத்திற்கு ஒரு தடவை செய்து வந்தால் சிறந்த தீர்வு கிடைக்கும்.

(4) தேன்
தேன் கிருமித் தொற்றை அழிக்கும் தன்மை உள்ளது. இது எண்ணெய்த் தன்மை,கரும்புள்ளிகளை நீக்கும்.இதனை பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி 15 நிமிடங்களின் பின்னர் கழுவ வேண்டும்.

(5) சமையல் சோடா
சமையல் சோடாவை நீரில் கலந்து ,அந்த பசையை கரும்புள்ளிகள் மீது தடவி சிறிது நேரத்தில் கழுவ வேண்டும்.

(6) ஓட்ஸ் பசை
2 தேக்கரண்டி ஓட்ஸ்,3 தேக்கரண்டி தயிர்,1தேக்கரண்டி எலுமிச்சசாறு,ஒலிவ் எண்ணெய் போன்றவற்றை நன்றாக பேஸ்ட் செய்ய வேண்டும்.
அந்த பேஸிட்டை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் கழுவ வேண்டும்.

(7) முட்டை
ஒன்று அல்லது இரண்டு முட்டை வெள்ளைக் கருவை எடுத்து ஒரு மேசைக்கரண்டி தேனுடன் கலக்க வேண்டும்.அதனை முகத்தில் தடவி 30 நிமிடங்களின் பின்னர் கழுவ வேண்டும்.

(8)கராம்பு
கராம்பு மற்றும் எலுமிச்சபழச்சாற்றை சம அளவு எடுத்து கலக்க வேண்டும்.
தூங்குவதற்கு முன்னர் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி காலையில் எழுந்தவுடன் கழுவ வேண்டும்.