Home அந்தரங்கம் உங்கள் அந்தரங்க விளையாட்டு காதலாக இணையவேண்டுமா?

உங்கள் அந்தரங்க விளையாட்டு காதலாக இணையவேண்டுமா?

173

அந்தரங்க காதல்:முன்பனிக்காலத்தில் அதிகாலையிலும் அந்தி மாலையிலும் குளிர் ஜில்லிடுகிறது. வானத்தில் இதமான நிலா வெளிச்சத்தில் தன் துணையோடு அமர்ந்து பேசிக்கொண்டே காதல் விளையாட்டில் ஈடுபட உற்சாகம் அதிகரிக்கும்.

வாழ்க்கைத் துணையுடன் காதலில் ஈடுபட கால நேரம் தேவையில்லை. வேலைப்பளு அழுத்தத்தினால் காதலில் ஈடுபட நேரம் காலம் பார்க்க வேண்டியிருக்கிறது. எத்தனையோ விளையாட்டுக்கள் இருந்தாலும் முன்பனிக்காலத்தில் குளிர் ஊடுருவும் நேரத்தில் காதலோடு விளையாட தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்கு சில ரொமான்ஸ் ரகசியங்களை அளிக்கிறது.

சின்னச் சின்ன தொடுகையும், மெதுவான பேச்சுக்களும் உங்கள் துணையை மெஸ்மரிசம் செய்யும். காதலான ஒரு பார்வையே போதும் பல்லாயிரம் சொற்களுக்கு ஈடானது அது. சுவையான உணவு, கூடவே மனதை வருடும் மெல்லிய இசை, மனதிற்குப் பிடித்த துணை இருந்தால் போதும் தினம் தினம் பண்டிகையைக் கொண்டாடலாம்.

காதலைக் கொண்டாட துணையோடு சந்தோஷிக்க இப்போதெல்லாம் நேரமே இருப்பதில்லை. கிடைக்கும் தருணத்திலும் துணையுடன் உற்சாகமாக நேரத்தை செலவழிக்க முடிவதில்லை. எல்லாமே அவசரகதியில் நடப்பதால் மகிழ்ச்சியான தருணங்களை மனதில் அசைபோட முடிவதில்லை. மன்மதன் அம்பு பாயும் நேரத்தில் மனதிற்குப் பிடித்த துணையோடு நேரத்தை செலவு செய்ய என்னென்ன விளையாட்டுக்கள் விளையாடலாம் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. படிப்பதோடு நிறுத்தி விடாமல் விளையாடி துணையை உற்சாகப்படுத்துங்கள்.

1.ரொமான்ஸ் மெசேஜ் காதலிக்க நேரமில்லை என்று சொல்லித் திரிந்தாலும் வாடிய மலரை தண்ணீர் ஊற்றிப் புத்துணர்ச்சியூட்டுவது போல ரொமான்ஸ் மெசேஜ் மூலம் குளிப்பாட்டுங்கள். செல்போன், உங்கள் துணை பார்க்கும் இடங்களில் வைத்துவிடுங்கள். ரொமான்ஸ் மெசேஜ் மூலம் அன்றைக்கு விசேஷம் இருக்கு என்று புரிய வைக்கலாம்.

2.ரொமான்ஸ் நேரம் காதலிக்க நல்ல இடம் அமைவது அவசியம். யாருடைய தொந்தரவு இருக்கக் கூடாது. மனதை மயக்கும் மாலை நேரத்தில் மனதிற்கு பிடித்த உடையை அணிந்து கொண்டு மெலிதாய் குளிர்காற்று வீச மொட்டை மாடியில் துணையுடன் கை கோர்த்து பேசிக் கொண்டிருக்கலாம். இதமான குளிர் காதலின் வேகத்தை அதிகரிக்கும். படுக்கை அறை என்றாலும் ஓகேதான். இயற்கை காற்று உடம்போடு ஒட்டி உறவாடட்டும்.

3.சின்னச் சின்ன உரசல்கள் சின்னச் சின்ன தொடுகை துணையின் மீது மின்சாரத்தை பாய்ச்சும். ஸ்பரிசத்தின் வேகத்தில் முத்தங்கள் பரிசாகக் கிடைக்கும். கட்டிப்பித்தலும் முத்தமிடுதலும் காதலின் அடுத்த கட்ட நகர்வுகள். நிலவொளியில் நிகழும் இந்த காதல் விளையாட்டுக்கள் அடுத்தவரின் கண்களை உறுத்தாத வகையில் இருக்க வேண்டும்.

4.உதட்டோடு விளையாட்டு இதே வேகத்தோடு உங்களின் துணையை யாருக்கும் தொந்தரவு இல்லாத அறைக்கு அழைத்து செல்லுங்கள்.மின்சார வெளிச்சத்தின் தொந்தவு இல்லாமல் மெழுகுவர்த்தியின் வெளிச்ச உதவி மட்டுமே போதும். கண்களில் காதலைச் சொல்லி, உதட்டோடு விளையாட மின்சாரத்தின் பாய்ச்சல் அதிகரிக்கும்.

5.இதமான வெந்நீர் குளியல் குளிருக்கு இதமாக வெந்நீரில் குளியல் போட காதலின் வேகம் கூடும். பாத்டப்பில் உடம்பை மெதுவாக மசாஜ் செய்து விட ரிதமும் கூடும். பூப்போன்ற டவலில் துடைத்துக்கொண்டு மெல்லிய ஆடைகளை அணிந்து கொண்டு அடுத்த விளையாட்டை ஆரம்பிக்கலாம். அதற்கு முன் சுவையான பானத்தை குடித்து உற்சாகப்படுத்திக்கொள்ளலாம். பாத்டப்பில் மனம் மயக்கும் ரோஜா இதழ்கள், வாசனை சோப்பு நுரை உங்கள் காதல் உணர்வுகளை தட்டி எழுப்பும்.

6.லவ் ஹார்மோன் குளிர்கால காதல் விளையாட்டுக்களில் கைகளுக்கு அதிகம் வேலை கொடுங்கள். கை கோர்த்துக்கொண்டு பேசுவது, சிறு உரசல்கள், தொடுகைகள் லவ் ஹார்மோனை அதிகம் சுரக்கச் செய்து உற்சாகப்படுத்தும். ஆக்ஸிடோசின் அதிகரித்தால் ஆட்டோமேட்டிக்காக காதலும் அதிகரிக்கும்.

7.நெருப்பு மூட்டுங்கள் மலைப்பிரதேசமாக இருந்தால் குளிருக்கு இதமாக நெருப்பு மூட்டுங்கள். அந்த நெருப்பின் வெளிச்சத்தில் அற்புதமான ஓவியமாக தெரியும் அன்பிற்குரியவரை ரசியுங்கள். வார்த்தைகள் தேவையில்லை பார்வைகள் மூலம் காதலை பரிமாறுங்கள்.

8.உற்சாகப்படுத்துங்கள் கணவனோ, மனைவியோ காதலிக்கும் தருணத்தில் அவரின் பேச்சுக்களையும், செய்கைகளையும் உற்சாகப்படுத்துங்கள். எரிச்சல் ஊட்டும் வகையில் எதிலும் ஈடுபடவேண்டாம். அவருக்கு பிடித்தமான பரிசுகளையும் கொடுங்கள். அப்புறம் பாருங்கள் அன்றைய இரவு உங்களுக்கு மறக்கமுடியாத இரவாக மாறிவிடும்.

9.ரொமான்ஸ் சினிமா இரவுப்பொழுதில் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் காதல் சினிமாவை கண்டு மகிழலாம். டர்ட்டி சினிமாவும் உங்களை உற்சாகமூட்டும். ஒருபக்கம் சினிமா மறுபக்கம் மனதிற்கு பிடித்த துணை என உங்களின் காதல் நேரம் களைகட்டும். 10.வீட்டிற்குள் உற்சாகம் மனதிற்குப் பிடித்த உணவுகளை சமைத்து வைத்து கேண்டில் லைட் வெளிச்சத்தில் துணையோடு அமர்ந்து சாப்பிடலாம். வீட்டிற்குள் சாப்பிட போராடித்தால் பக்கத்தில் ரொமான்ஸ் அதிகரிக்கும் இடத்திற்கு சமைத்து எடுத்துக்கொண்டு போய் சாப்பிடலாம்.

11.மடிமீது தலை வைத்து மனைவியின் மடி மீது தலை வைத்து படுக்கவும், கணவன் தலை மீது மனைவி தலை வைத்து படுக்கவும் எல்லாருக்கும் வாய்ப்பு கிடைத்து விடாது. ஒரு ரொமான்ஸ் தருணத்தில் துணையை மடியில் கிடத்தி படுக்க வைத்து தலைகோதி விடுங்கள். அந்த கிறக்கத்தில் அவரின் காதோரம் ஐ லவ் யூ சொல்லிப்பாருங்கள் அப்புறம் நடப்பதை உங்கள் ஜென்மத்திற்கும் மறக்க முடியாது.

12.ஜோடி யோகா ரொமான்ஸ் செய்வதற்கு ஒரு திறமை வேண்டும். ஐ லவ்யூ சொல்வது முதல் இதமான முத்தம் கொடுப்பது வரை அதை ரொமான்டிக்காக சொல்ல தெரிந்திருக்க வேண்டும். உடற்பயிற்சியும் கூட ஒருவித ரொமான்ஸ்தான். அதிகாலையில் இதமான தருணத்தில் துணையுடன் யோகாவில் ஈடுபட உறவுப்பாலம் உறுதிப்படும். மனமும், உடலும் உற்சாகமடையும். யோகாவினால் ஏற்படும் மாற்றம் மனதில் காதல் உணர்வுகளை அதிகரிக்கச்செய்யும்.

13.மசாஜ் விளையாட்டு உடம்பினை சாதாரணமாக தொடுவதற்கும், உச்சி முதல் உள்ளங்கால் வரை பிடித்து மசாஜ் செய்து விடுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. இரவு கவிழும் நேரத்தில் மெல்லிய நறுமண எண்ணெயை கைகளில் தடவி உங்கள் துணையின் உடம்பை இதமாக பிடித்து மசாஜ் செய்து விடுங்கள். அந்த மயக்கத்தில் மனம் மயக்கும் முத்தம் கொடுத்தால் அதன் பலனே தனிதான்.