Home பாலியல் உங்கள் பாலியல் வாழ்க்கை பாதிப்படைய சூழழும் ஒரு காரணி

உங்கள் பாலியல் வாழ்க்கை பாதிப்படைய சூழழும் ஒரு காரணி

71

பாலியல் தகவல்:எல்லா உயிரினங்களுக்கும் பாலியல் உறவு என்பது இயற்கை அளித்த ஒரு பரிசு! அதுவே ஒவ்வொரு இனமும் தழைத்திருக்கவும், இந்த உலகத்திலிருந்து அழிந்துவிடாமல் நீடித்து நிலைத்திருக்கவும் அடிப்படையாக இருக்கிறது. எனினும், மனிதர்களின் பாலியல் செயல்பாடு மட்டும் குறைந்துகொண்டே வருவதாகத் தெரிகிறது. வயது அதிகரிக்கும்போது பலருக்கு பாலியல் விருப்பம் குறைகிறது, இது மட்டுமின்றி, இருபது முப்பது வயதிலிருக்கும் இளம் தலைமுறையினருக்கும் பாலியல் விருப்பம் குறையும் பிரச்சனை அதிகரித்து வருகிறது.

பாலியல் விருப்பம் குறைவதற்கான காரணங்களாகக் கருதப்படுபவை:

மன இறுக்கம் போன்ற மனநலப் பிரச்சினைகள்
வேலை அல்லது சொந்த வாழ்க்கையில் இருக்கும் பிரச்சனைகளின் காரணமாக ஏற்படும் மன அழுத்தம்
தாழ்ந்த சுய மதிப்பீடு அல்லது உடல் பற்றிய மோசமான அபிப்ராயம்
ஹார்மோன்களைப் பாதிக்கும் மருந்துகள்
கரிம காற்று மாசுபடுத்திகளால் பாதிக்கப்படும் சூழலில் நீண்டகாலம் இருப்பது
கேட்பதற்கு விநோதமாக இருந்தாலும், காற்று மாசுபாட்டால் மனிதர்களின் பாலியல் விருப்பம் குறைகிறது என்பது உண்மை. காற்று மாசுபாடு கண்கள், நுரையீரல், சருமம் போன்றவற்றை மட்டும் பாதிப்பதில்லை, ஒருவரின் பாலியல் விருப்பத்தையும் பாதிக்கிறது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஆரோக்கியமாக இருக்கும் ஆண்களுக்கு, டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவுப் பிரச்சனை இருப்பது அதிகரித்து வருகிறது, அத்துடன் அவர்களுக்கு விந்தணுக்கள் எண்ணிக்கையும் தரமும் குறைந்து வருகிறது. டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன, அவற்றில் காற்று மாசுபாடு அதில் முக்கியமாகப் பங்களிக்கிறது.

காற்றில் உள்ள கடின உலோகங்களின் துகள்கள், தொழிற்சாலைகள், மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் ஆகியவை மனிதர்களின் ஹார்மோன் சமநிலையை நேரடியாகப் பாதிக்கின்றன.

காற்றில் பொதுவாக பின்வரும் மாசுக்கள் காணப்படுகின்றன:

கார்பன் மோனாக்சைடு – இதுவே காற்றின் மாசுக்களில் முக்கியமானது, இது வாகனங்கள், குளிர் சாதனங்கள், ஹீட்டர் கருவிகள் போன்றவற்றில் இருந்து வெளியேறுகிறது.
நைட்ரஜன் டை ஆக்சைடு – இது நீராவியுடன் கலக்கும்போது அமில மழை பொழிவிற்குக் காரணமாகிறது. இது வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது.
துகள் பொருள்கள் – இவை காற்று மண்டலத்தில் காணப்படும் நுண்ணிய, துகள்களாகும். இவை மனித உடலில், குறிப்பாக கண்களில் எரிச்சல் மற்றும் ஒவ்வாமை அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடியவை.
சல்பர் டை ஆக்ஸைடு – இது சருமம், கண்கள், சுவாசம் ஆகியவற்றில் கடினமான எரிச்சலை ஏற்படுத்தக் கூடியதாகும். இது தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகிறது, அழுகிய முட்டையின் மணம் கொண்டது.
பிற மாசுபடுத்திகள் – ஆஸ்பெஸ்டோஸ், ஆர்சனிக், பென்சீன், ஈயம், டையாக்ஸின் போன்றவையும் காற்றில் உள்ள மாசுபடுத்திகளாகும், இவை நம்மைப் பாதுகாக்கும் ஓசோன் படலத்தை சேதப்படுத்தி, நாள்பட்ட சருமப் பிரச்சனைகள், கண் பிரச்சனைகள் போன்ற பிரச்சனைகளுக்கும் புற்றுநோய்க்கும் கூட வழிவகுக்கின்றன.
ஆண்களின் உடலில் உள்ள டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனுக்கும் பெண்களின் உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனுக்கும் பாலியல் விருப்பத்துடன் நேரடித் தொடர்புள்ளது. இவற்றின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுவது, பாலியல் விருப்பத்தை கணிசமாகக் குறைக்கலாம். நவீனமான, பரபரப்பான காலத்தில் வாழ்கிறோம், அதில் பல வசதிகளும் உள்ளது, ஆனாலும் கண்ணுக்குத் தெரிகின்ற, தெரியாத எண்ணற்ற சுற்றுச்சூழல் நச்சுப்பொருள்களும் நம்மைச் சுற்றி உள்ளன.

துகள் பொருள்கள் மற்றும் நச்சுப் பொருள்களால் பாதிக்கும் சூழலில் நீண்ட காலம் இருப்பதால், ஹார்மோன் சமநிலை பாதிக்கப்படலாம், இதனால் பாலியல் விருப்பம் பாதிக்கப்படும். வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையில் உள்ள ஈயம் போன்ற மாசுபடுத்திகள், நாம் சுவாசிக்கும்போது சுவாசத்தின் வழியாக உடலுக்குள் நுழைந்து, ஹார்மோன் சமநிலையைப் பாதிக்கின்றன. சுவாசப் பிரச்சனைகள், தோல் எரிச்சல், பார்வை ஆரோக்கியப் பிரச்சனைகள் போன்ற பிற பிரச்சனைகளும் பாலியல் விருப்பத்தைக் குறைக்கலாம்.

என்ன செய்யலாம்? (What can I do?)

காற்று மாசுபாட்டை நாம் ஒரே நாளில் முற்றிலுமாக நீக்கிவிட முடியாது, ஆனால் அதன் பாதகமான விளைவுகள் நம்மைப் பாதிக்காதபடி நம்மைப் பாதுகாத்துக்கொள்ள சில நடவடிக்கைகளை எடுக்கலாம். அவற்றில் சில:

தேவைப்பட்டால் மட்டுமே வெளியே செல்ல வேண்டும் – நீண்ட நேரம் வெளியே சுற்றிக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பதன் மூலம், காற்று மாசுபாடு உங்களைப் பாதிக்கும் நேரத்தைக் குறைக்கலாம். கூடுமானவரை, வெளியே செல்லாமல் இருக்கலாம்.
கண்கள், வாய், காதுகள் மற்றும் மூக்கை ஆடைகளாலும், சன்கிளாஸ் போன்றவற்றாலும் மூடிவைக்கவும். கைகள், கால்கள் வெளியே தெரியாதபடி, கூடுமானவரை மறைத்திருக்க முயற்சி செயவும், இதனால் காற்று மாசுபாடு பாதிப்பு குறையும். இதற்காக கால்களையும் கைகளையும் உடைகள் முழுவதும் மறைக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.
நீர்ச்சத்து – வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன்பே போதுமான நீர் அருந்தவும், வெளியே இருக்கும் வரை உடலில் நீர்ச்சத்து இழக்காதபடி பார்த்துக்கொள்ள வெளியே செல்லும்போது குடிப்பதற்கு நீரையும் எடுத்துச்செல்லவும்.
தேவையற்ற போது வாகனத்தை இயக்கிக்கொண்டே இருப்பதைத் தவிர்க்கவும் – போக்குவரத்து சிக்னல்களில் சிறிது நேரம் நிற்க வேண்டி வரும்போது வாகனத்தின் என்ஜினை அணைத்து வைக்கவும். இதனால் நச்சுப்புகை வெளியேறுவது குறையும். இது உங்களுக்கு மட்டுமின்றி பிறருக்கும் உதவியாக இருக்கும்.
பொது போக்குவரத்து – வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்க பொதுப் போக்குவரத்தைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம் அல்லது பகிர்ந்து பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகளைப் பயன்படுத்தலாம்.
காற்று மாசுபாடு உடலுக்குள் இருக்கும் ஒரு அம்சத்தை எப்படி பாதிக்கும் என்பது நமக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அது பாதிக்கிறது என்பதும் உண்மையே. நகர்களில் உள்ள மாசுபாடு, மனிதர்களுக்கு குழந்தையின்மைப் பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு ஆபத்தான அளவில் உள்ளது என்று கூறப்படுகிறது. எதிர்காலத் தலைமுறையினர் காற்று மாசுபாட்டினால் பெரிய பாதிப்புகளை அடையாதவண்ணம் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது நமது பொறுப்பு.