Home பெண்கள் அழகு குறிப்பு இத மட்டும் செய்ங்க… முகப்பரு உங்கள் எட்டியே பார்க்காது…

இத மட்டும் செய்ங்க… முகப்பரு உங்கள் எட்டியே பார்க்காது…

33

முகப்பருக்கள் சருமத்தின் அழகையே கெடுத்துவிடுகின்றன. முகப்பருக்கள் உண்டாவதற்கு தூசுகளும் மாசுக்களும் மட்டுமே காரணம் அல்ல. சரியான தூக்கமின்மை, மனஅழுத்தம், ஊட்டசத்தில்லாத உணவு ஆகியவற்றின் விளைவுகள் யாவும் உங்கள் சருமத்தின் வழியாக நிச்சயம் பிரதிபலிக்கும்.

அவையே கருவளையம், கரும்புள்ளிகள், முகப்பரு என பல வடிவங்களில் சருமங்களில் வெளிப்படுகின்றன. அவற்றைப் போக்க என்னதான் வழி?

சரியான தூக்கமும் ஊட்டச்சத்து உணவுகளையும் எடுத்துக் கொள்வதோடு, கீழ்வரும் சில குறிப்புகளையும் கடைபிடித்து வந்தால் முகப்பருக்கள் இல்லாத கிளீன் சருமத்தைப் பெற முடியும்.

சிறிய வெள்ளரிக்காயை நறுக்கி, சிறிதளவு ஓட்ஸ் பவுடர் மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட்டாக்கிக் கொண்டு, முகத்தில் மாஸ்க் போட்டு அரைமணி நேரம் வரை ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவுங்கள்.

ஆரஞ்சு பழத்தின் தோலை, கீழே தூக்கி எறியாமல் வெயிலில் உலர்த்தி வைத்துக் கொண்டால், தேவைப்படும் போது சிறிது நீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி, முகத்தில் தடவினால் போதும். முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விடும்.

கற்றாழை உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடியது. இது பாக்டீரியா தொற்றுகளை எதிர்த்துக் போராடும் தன்மையுடையது. கற்றாழையை அடிக்கடி முகத்தில் தடவி வருவதால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தழும்புகள் அத்தனையும் நீங்கி, முகம் பளபளப்படையும்.

முகப்பருக்களைப் போக்க மிக மிக எளிமையான வழி சுகர் ஸ்கிரப் தான். சர்க்கரை உங்கள் சருமத்தைப் பளபளப்பாக்கும். 1 ஸ்பூன் சர்க்கரை, 2 ஸ்பூன் பால், 1 ஸ்பூன் தேன் அகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி, ஸ்கிரப் போல நன்கு தேய்த்து கழுவவும். வாரத்துக்கு மூன்று முறை இதைத் தொடர்ந்து செய்து வரவும்.

நன்கு பழுத்த பப்பாளியை எடுத்து, முகத்தில் மாஸ்க் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து கழுவினால், முகப்பருக்கள் மறைவதோடு, முகத்துக்கு நல்ல நிறமும் கிடைக்கும். அதேபோன்று தக்காளியையும் பேஸ்ட்டாக்கி முகத்தில் மாஸ்க் போடலாம். அது நல்ல ஸ்கிரப் ஆக இருப்பதோடு, சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்தும்.