Home பெண்கள் அழகு குறிப்பு மார்பகங்கள் அழகாகட்டும்…

மார்பகங்கள் அழகாகட்டும்…

52

ஆயிரக் கணக்கில் கொட்டிக் கொடுத்து பட்டாகவும், பகட்டாகவம் உடை வாங்கும் பெண்களில் எத்தனையோ பேர் *உள்ளாடை* வாங்கும் போது மட்டும் *கஞ்சத்தனம்* காட்டுகிறார்கள். வெளியே தெரியவா போகிறது, அதற்கு எதற்கு அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற மனப்பான்மைதான் பெரும்பாலான பெண்களுக்கு. உண்மையில் உள்ளாடைதான் உடைகளில் முக்கியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. உள்ளாடை என்பது உடல் பாகங்களை மறைக்க மட்டுமில்லை, உடலின் ஷேப்பைக் கட்டுக் கோப்பாக வைக்கவும்தான்.

டீன் ஏஜ் பெண்களுக்காக, வயதானவர்களுக்காக, மார்பகப் புற்றுநோய் வந்து மார்பகங்களை அகற்றியவர்களுக்காக என்றெல்லாம் மார்க்கெட்டில் விதம் விதமான பிராக்கள் உள்ளன. இவற்றில் லேட்டஸ்ட் மார்பகங்களைத் தொய்வடையச் செய்யாமல் காக்கிற, சிறிய மார்பகங்களைப் பெரிதாக்குகிற, எக்கச்சக்கமாகப் பெருத்த மார்பகங்களை சரியான அளவுக்குக் கொண்டு வருகிற பிராக்கள். அதே மாதிரி குறுக்குப் பெருத்துப் போன பெண்களுக்கான ஸ்பெஷல் பேண்டீஸ். பிரசவத்துக்குப் பிறகு பெருத்துப் போன வயிற்றையும், இடுப்பையும் மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு வருமாம் இந்த பேண்டீஸ். இவற்றைத் தயாரிப்பது க்ரோனி பியூட்டி இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம். சைனா, ஆஸ்திரேலியா, மலேஷியா, இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் பிரபலமான இந்த நிறுவனம், அடுத்ததாக இந்தியாவுக்குள் காலடி எடுத்து வைக்கிறது.

*இந்த நிறுவனத்தின் இந்தியன் பிசினஸ் டெவலப்மென்ட் மேனேஜர் உமா, இந்தப் பிரத்யேக உள்ளாடைகளின் சிறப்புகளை விளக்குகிறார்.*

இந்த உள்ளாடைகள் ஆக்சிஜன் கலந்த நூலிழைகளால செய்யப்படுது. பிரா, இடுப்புப் பகுதிக்கு ஒரு சென்டர் பீஸ், முழங்கால் வரையிலான பேண்ட்ஸ்னு மூணு பீஸ் கிடைக்குது. தினம் எட்டு மணி நேரம், தொடர்ந்து மூணு மாசத்துக்குப் போட்டுக் கிட்டா, தொங்கிப்போன மார்பகங்கள் நல்ல ஷேப்புக்கு வரும். மார்பகங்களே இல்லாம இருக்கிறவங்களுக்கும் இதுல ஸ்பெஷல் பிரா இருக்கு. லிக்விட் பிரானு சொல்ற அது, இயற்கையாவே மார்பகங்களை நல்லா ஷேப் பண்ணும். பெரிசாக்கும். அதே மாதிரி ரொம்பப் பெரிய மார்பகங்கள் இருக்கிறவங்களுக்கான பிரா, சரியான அளவுக்கு அழகா மாத்தும்.

தென்னிந்தியப் பெண்களுக்கு இயற்கையாவே இடுப்பு பெரிசு. பிரசவத்துக்குப் பிறகு இன்னும் பெருத்துடும். வயித்தைக் கட்டற தெல்லாம் இப்ப நடைமுறைல இல்லை. அப்படிப்பட்டவங்களுக்கு இந்த பேண்டீஸ் உதவும். சுகப்பிரசவமானவங்களா இருந்தா, இருபது நாட்களுக்குப் பிறகும், சிசேரியன் ஆனவங்க, இரண்டு மாசத்துக்குப் பிறகும் போட்டுக்கிட்டா, மூணே மாசத்துல நல்ல மாற்றங்களைப் பார்க்கலாம். பின் பக்க சதையும் குறையும். பிட்டப் பகுதில சதையே இல்லாம இருக்கிற பெண்களுக்கும், பூசின மாதிரி மாத்த இதுல பிரத்யேக பேண்டீஸ் இருக்கு. முக்கியமா கர்ப்பப்பையை மேலே தூக்கும். அதனால அது இறங்க வாய்ப்பே இல்லை. இந்த உள்ளாடைகளோட முக்கியமான ஸ்பெஷாலிட்டி என்னன்னா, இது ஐந்து முறை மீள் தன்மை கொண்டது. எடை குறைஞ்ச பிறகும்கூட அதே அளவைப் போடலாம். சிம்ரன் மாதிரி உங்க உடம்புக்கு அழகான வளைவைக் கொடுக்கும் என்கிறார். உள்ளாடைகள் அணியும்போது கவனிக்க வேண்டிய முக்கிய மான விஷயங்களைப் பட்டியலிடுகிறார் உமா.

பிராவின் கப் அளவு ஒவ்வொருவருக்கும் மாறும். அது தெரிந்து வாங்கினால்தான் மார்பகங்கள் சரியான ஷேப்பில் இருக்கும்.

கப் அளவு பெரியதாக இருக்கிறபோது மார்பகங்களின் இருக்கும் ஷேப்பும் கெடுகிறது. சிறியதாக இருக்கும் போது, பிராவைத் தாண்டி, அக்குள் பகுதிகளில் மார்பகத் தசைகள் பிதுங்கி வழிகின்றன. இதை டபுள் பிரெஸ்ட் என்கிறோம். அந்தச் சதையோடு, அக்குள் பகுதி உரசிக் கொண்டே இருக்கிறது. நாளடைவில் ஜிம் போய் உடற்பயிற்சி செய்த மாதிரி ஆண்களுக்கு இணையாக உங்கள் கைகள் குண்டாகின்றன. பெண்களின் கைகள் குண்டாக இருக்க முக்கிய காரணம் இதுதான். இதைத் தவிர்க்க பக்கவாட்டில் மார்பகத் தசைகள் வழியாதபடி உள்ளே தள்ளும் சரியான பிரா அணிய வேண்டும். அதே மாதிரி ஸ்டைல் என்ற பெயராலல் குறுகலான பேண்டீஸ் அணிகிறார்கள். இதிலும் பக்க வாட்டில் உள்ள சதைகள் தொடைக்குத் தள்ளப் படுகின்றன. தொடைகள் பெருத்துப் போகின்றன. சரியான அளவு அணிகிற போது இடுப்பு பெருத்துப் போவதில்லை.

வயதாக, ஆக மார்பகங்கள் தொய்வடைய ஆரம்பிப்பது சகஜம். தவிர புவி ஈர்ப்பு விசையின் காரணமாகவும் அதில் ஒரு தொய்வு ஏற்படுகிறது. நிறைய பெண்கள் பேஷன் கருதியும், நைட்டி போடுகிற போதும் பிரா அணிவதைத் தவிர்க்கிறார்கள். இது நல்லதல்ல.

*உங்கள் மார்பகங்கள் தொய்வடையாமல் சரியான ஷேப்பில் இருப்பதைத் தெரிந்து கொள்ள ஒரு டெஸ்ட்.*

தொண்டைக் குழியிலிருந்து, மார்பகங்களின் நிப்பிள் வரை அளந்து பாருங்கள். 18 செ.மீ. இருக்க வேண்டும்.
இரண்டு மார்பகங்களின் அடியிலும் ஒரு பென்சிலை வைத்துப் பாருங்கள். பென்சில் சட்டெனக் கீழே விழ வேண்டும். *இல்லாவிட்டால் மார்பங்கள் தொய்ந்திருப்பதாக அர்த்தம்.*