Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பகாலத்தில் பெண் மகிழ்ச்சியாக்க இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்

கர்ப்பகாலத்தில் பெண் மகிழ்ச்சியாக்க இருந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்

39

தாய் நலம்:தாய்மை என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் மகிழ்ச்சியான காலக்கட்டம். எனவே கர்ப்ப காலத்தில் பெண் எப்படியிருக்க வேண்டும் என்பது பற்றி பல்வேறு மருத்துவ தகவல்கள் கூறுகின்றன. அவற்றில் ஒன்று இது…

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நலன், தாயின் மகிழ்ச்சியோடு நேரடித் தொடர்பில் உள்ளது. அதனால் தாய் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால், கருவில் இருக்கும் குழந்தையும் வளத்தோடு இருக்கும். மன அழுத்தம் குழந்தைக்கு நல்லதல்ல. தாய்க்கு மன அழுத்தம் ஏற்பட்டால், கருவில் இருக்கும் குழந்தையையும் அது பாதிக்கும். அதனால் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும். மன அழுத்தம் தரும் வி‌ஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது.

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அனைத்து சத்துள்ள உணவுகளையும் தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அது குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது.

கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சரிவிகித உணவை உண்ண வேண்டும்.

தண்ணீரும் முக்கியமானது. அதனை குறைத்து மதிப்பிடக்கூடாது. ஆகவே அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தோடு இருக்க வேண்டியதும் அவசியம். கர்ப்ப காலத்தில் பல மருந்துகள் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதனால் தாமாகவே எந்த மருந்தையும் வாங்கி சாப்பிடக்கூடாது. எப்போதும் மருந்தை உட்கொள்வதற்கு முன், மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.

நடைபோன்ற எளிதான உடற்பயிற்சி, குழந்தைக்கு நன்மை தரும். ஆனால் உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.