Home பாலியல் செக்ஸை தவிர்க்க ஆண்களும், பெண்களும் சொல்லும் சுவாரஸ்யமான காரணங்கள்

செக்ஸை தவிர்க்க ஆண்களும், பெண்களும் சொல்லும் சுவாரஸ்யமான காரணங்கள்

53

செக்ஸ் வேண்டாம் என்றால், உறவு கொள்ளப் பிடிக்கவில்லை என்றால், ஆண்களும், பெண்களும் சொல்லும் காரணங்கள் என்று கூறி ஒரு சர்வேயில் சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

இந்தக் காலத்தில், நீண்ட நேர செக்ஸ் வாய்க்கிறது என்றால் அது பெரிய சாதனை. அதற்காக நிச்சயம் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். எந்த செயலாக இருந்தாலும் முயற்சி சிறப்பாக இருந்தால் ரிசல்ட்டும் சிறப்பாக அமையும். செக்ஸுக்கும் அது பொருந்தும். ஆனால் இன்று பலரும் செக்ஸில் நாட்டமில்லாமல் இருப்பதாக இந்த ஆய்வு சொல்கிறது.

செக்ஸை தவிர்க்க என்னவெல்லாம் காரணம் கைவசம் வைத்துள்ளனர் என்ற சுவாரஸ்யான தகவலையும் இந்த சர்வே விளக்குகிறது.

உறவைத் தவிர்க்க பலரும் சொல்லும் காரணமாக இது இருக்கிறதாம். எனக்கென்ன வயசாகிப் போச்சு, இதுக்கு மேல என்னத்த பலரும் காரணம் சொல்லி உறவிலிருந்து தப்பிக்கிறார்களாம்.

ஆனால் வயதானாலும் கூட செக்ஸில் நாட்டம் குறையாமல் தவிர்க்கலாம் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள். இளமையான மனசுதான் ஆர்வத்திற்கு அடிப்படை. எனவே செக்ஸ் குறித்த சிந்தனைகள் இளமையுடன் இருந்தாலே போதும் தானாகவே உறவை நோக்கி உங்களை மனசு இட்டுச் செல்லும். அதை விடுத்து வயசைக் காரணமாக சொல்வது சப்பைக் கட்டு என்பது நிபுணர்களின் கருத்து.

இன்னும் பலருக்கு பெரிய அளவிலான செக்ஸ் வேட்டைகள் பிடிப்பதில்லை. அதாவது கிரேட் செக்ஸ். மாறாக, இருக்கிறதே போதும். எதற்கு புதிய விஷயங்களை டிரை பண்ணிப் பார்க்கனும் என்ற மனோபாவம் இருக்கிறதாம்.

ஆனால் இப்படி இருக்காமல், அனுபவித்து ரசித்து, புதுப் புது விஷயங்களை செயல்படுத்தி ஈடுபாட்டுடன் செக்ஸில் இறங்கும்போதுதான் முழுமையான இன்பம் கிடைக்கும் என்பது நிபுணர்களின் கூற்றாக உள்ளது.

இன்னும் பலர் குழந்தைகளைக் காரணம் காட்டி செக்ஸைத் தவிர்க்கிறார்களாம். குழந்தை முழிச்சுக்கும் நாளைக்குப் பார்ப்போம் என்று பல பெண்கள் கணவர்களை தள்ளி விடுகிறார்களாம். இது பல வீடுகளில் வழக்கமாக உள்ளது என்று சர்வேயில் கூறப்பட்டுள்ளதாம்.

ஆனால் குழந்தைகளைக் காரணமாக காட்டுவது குழந்தைத்தனமானது என்பது நிபுணர்களின் கருத்தாகும். குழந்தைகள் இருந்தால் சீக்கிரம் தூங்க வைக்கலாம். குழந்தைதகள் வர முடியாத இடம் பார்த்து நகர்ந்து சென்று உறவைத் தொடங்கலாம் உள்ளிட்ட பல வழிகள் உள்ளன.

சிலருக்கு புதிதாக எதையும் செய்து பார்க்கும் ஆர்வம் வருவதில்லையாம். இதனாலும் அவர்கள் செக்ஸை வெறுக்கிறார்களாம். புதிதாய் ஏதாவது செய்யுங்களேன் என்று மனைவியர் கேட்டால், அதை பலர் கண்டு கொள்வதில்லையாம். போதும் போதும் என்று போய் விடுகிறார்களாம். இதனால் பல பெண்களுக்கு படுக்கை அறையில் புதிய விஷயங்கள் தெரியாமலேயே போய் விடுகிறது என்று கூறுகிறது இந்த சர்வே.

இது பலர் சொல்லும் காரணமாக இருக்கிறதாம். அதாவது சில விஷயங்களைச் செய்ய இவர்கள் முன்வருவதே இல்லையாம். அதெல்லாம் வேண்டாம், அந்த வேலையை மட்டும் சட்டுப்புட்டுன்னு முடிச்சுட்டுப் போங்க என்று சொல்வார்களாம் இவர்கள். பெரும்பாலும் பெண்கள்தான் இப்படித் தயக்கம் காட்டுவார்களாம் சில விஷயங்களில்.

பெண்களைப் பொறுத்தவரை 31.6 சதவீதம் பெண்களுக்கே இயல்பான உடலுறவின் மூலம் ஆர்கசம் ஏற்படுகிறதாம். ஆனால் 88.1 சதவீத பெண்களுக்கு கிளிட்டோரியஸ் தூண்டுதல் மூலம்தான் ஆர்கஸம் வருகிறதாம்.

திடீர் செக்ஸ் தித்திப்பான விஷயமாகவே இருக்கிறது என்று பலரும் சர்வேயின்போது சொல்லியுள்ளனர். அதாவது வீட்டில் திடீரென யாரும் இல்லாமல், தம்பதியர் மட்டும் தனித்து விடப்படும்போது ஒரு திடீர் செஷனை வைத்துக் கொள்வோம் என்று பெரும்பாலானவர்கள் சொல்லியுள்ளனராம். அது தித்திப்பாகவும், சூப்பராகவும் இருக்கிறது என்பது இவர்களின் கருத்து.

அக்கம் பக்கத்து வீடுகளில் நட்பு பிடித்து வைத்துக் கொள்கிறார்களாம். பிறகு தங்களுக்கு மூடு வரும்போது தங்களது பிள்ளைகளை அவர்களிடம் விட்டு விட்டு வந்து வீட்டில் உறவு கொள்கிறார்களாம். பிறகு போய் பிள்ளைகளை கூப்பிட்டுக் கொள்வார்களாம். அதேபோல அவர்களுக்கு இவர்கள் உதவுவார்களாம். பெண்களுக்குள் பேசிக் கொண்டு இப்படி அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறார்களாம்…