Home ஆண்கள் ஆண்களின் விரல்களை வைத்தே அவர்களின் ‘அந்த’ உறுப்பு நீளம் எவ்வளவு எனத் தெரிஞ்சிக்கலாம்..

ஆண்களின் விரல்களை வைத்தே அவர்களின் ‘அந்த’ உறுப்பு நீளம் எவ்வளவு எனத் தெரிஞ்சிக்கலாம்..

75

பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அந்தரங்க உறுப்பு பற்றித் தெரியாமலேயே இருக்கிறார்கள். தான் பார்த்த மற்றும் காதால் கேட்ட சில விஷயங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, அதன் அளவு பற்றி அவர்கள் நினைத்திருக்கும் விஷயங்கள் வேறாகவும் உண்மை வேறாகவுமே இருக்கிறது.

அப்போ ஆணுறுப்பின் அளவு பற்றிய கருத்துக்களில் எது தான் உண்மை?

பொதுவாக ஆண்கள் எல்லோரும் தங்களுடைய அந்த உறுப்பு அளவில் பெரியதாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். பெரிதாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதே பலருடைய சந்தேகமாகவும் இருக்கிறது.

ஆனால் செக்சாலஜிஸ்ட்கள் அதுபற்றி கூறும்போது, ஆணுறுப்பின் அளவுக்கும் வீரியத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று சொல்கிறார்கள்.

இன்னும் அவர்கள் சொல்லும் சில விஷயங்கள் ஆண்களுக்கே ஆச்சரியமாகத் தான் இருக்கும்.

ஆண்களின் ஆணுறுப்பை அளப்பதற்கு ஸ்கேல், டேப் போன்ற அளவுகோல்களே தேவையில்லை. ஆண்களின் கை விரல்கள் மிகத் துல்லியமாக அதை அளந்துவிடும். ஆணுறுப்பு பெரியதா இல்லையா என்பதை அவர்களுடைய கைவிரல்களே சரியாக அளந்து காட்டிவிடும் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை.

ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் ஆகிய இரண்டும் விரல்களை வைத்தே அவர்களுடைய ஆணுறுப்பு அளவில் பெரியதா சிறியதா எனத் தெரிந்து கொள்ள முடியும்.

ஆம். ஆள்காட்டி விரலையும் மோதிர விரலையும் நீட்டிக் கொண்டு மற்ற விரல்களை மடக்கிக் கொள்ள வேண்டும். ஆள்காட்டி விரல் மோதிர விரலை விட நீளமாக இருந்தால் ஆணுறுப்பு சிறியதாகவும் மோதிர விரல் நீளமாக இருந்தால் ஆணுறுப்பு பெரியதாகவும் இருக்குமாம்.

ஆண், பெண் இருவருமே ஆண்களுடைய காலணிகளின் அளவுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று நினைக்கிறார்கள். ஆனால் காலணிக்கும் அவர்களின் ஆணுறுப்பின் நீளத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் பெண்களே! ஆண்களுடைய காலணிகளை வைத்து ‘அந்த’ உறுப்பின் அளவைக் கணிக்காதீர்கள்.

உயரமாக இருக்கும் ஆண்களுக்கு சராசரியை விட ஆணுறுப்பின் அளவு பெரிதாக இருக்குமென பெரும்பாலான பெண்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான எண்ணமே. ஆணுறுப்பின் நீளத்துக்கும் ஆண்களின் உயரம் மற்றும் எடைக்கும் சம்பந்தம் கிடையாது.

பெரிய அகலமாக கைகளைக் கொண்டிருக்கும் ஆண்களுக்கு ஆணுறுப்பு சராசரியை விட பெரியதாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதுவும் உண்மையல்ல.