Home ஆண்கள் ஆனந்த உடலுறவுக்கு அளவு பிரச்சனையே இல்லை!

ஆனந்த உடலுறவுக்கு அளவு பிரச்சனையே இல்லை!

188
எல்லா காலங்களிலும் ஆண் – பெண் இருவருக்கும் மாபெரும் பிரச்சனைகளுள் இந்த அளவு பிரச்சனையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆணுக்கு தன் ஆண்குறி சிறியதாக இருக்கிறதே என்ற பிரச்சனை – பெண்ணுக்கு தன் மார்பகங்கள் சிறியதாக இருக்கிறதே என்ற பிரச்சனை. இதன் காரணமாக தன்னைத்தானே மட்டரகமாகப் பார்ப்பவர்கள் அதிகம். இப்படி சின்ன உறுப்பை வைத்துக்கொண்டு தன்னால் செக்ஸில் திருப்திகரமாக ஈடுபடமுடியாது என கவலைப்படுபவர்கள் நிறையப்பேர் உண்டு. ஆனால் நீங்கள் உண்மையை அறிந்தால் இதற்காகவெல்லாம் கவலைப்பட மாட்டீர்கள். எப்படிப்பட்ட உறுப்பையும் வைத்துக்கொண்டு செக்ஸில் திருப்தியாக ஈடுபடலாம் என்பதனை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

ஆண்களிடையே மன சஞ்சலத்தை ஏற்படுத்தக்கூடிய தவறான கருத்துக்களில் மிக முக்கியமானது ஆண் உறுப்பின் அமைப்பு மற்றும் அதன் அளவைப் பற்றியதுதான். உலகில் உள்ள எல்லா ஆண்களுக்குமே இந்தப் பிரச்னை இருந்து வருகிறது. இதில் நீண்ட, தடித்த நேரான ஆண்குறியை உடைய ஆண்கள்தான் நிஜமான ஆண்மகன் என்ற நினைப்பிலும், சிறியதான,தடிமன் குறைந்த, சற்றே வளைந்த ஆண்குறியை உடையவர்கள் தங்கள் ஆண்குறி இப்படி இருக்கிறதே என வருத்தப்படுவதும்,இதுவே த்துடைய பெர்ம் குறை என துக்கப்படுவதும் உண்டு.

ஆனால், குறியின் நீளத்திற்கும், தடிமனுக்கும், வளைவுடையதாய் இருப்பதற்கும், செச்ஸுக்கும் சம்பந்தம் இல்லை. இப்படிப்பட்ட அமைப்பினால் எந்த விதத்திலும் செக்ஸ் உணர்வு குறைந்து விடுவதில்லை. சின்ன ஆண்குரியை வைத்துக்கொண்டே எப்படிப்பட்ட பெண்ணுக்கும் தாம்பத்ய சுகத்தைத் தரலாம். ஆனால், இந்த விஷயத்தைப் பொருத்தவரையில் ஒட்டுமொத்த ஆண்களின் கணிப்பு தவறாகத்தான் இருக்கிறது.

தன் குறி இவ்வளவு சிறியதாக இருக்கிறதே,தன் நண்பனின் குறியும், பிற ஆண்களின் குறியும் பெரியதாக நீண்ட தடிமனாக இருக்கிறதே, நம்மால் பெண்ணைத் திருப்திபடுத்த இயலுமா என்ற கவலை பலருக்கு உண்டாகிறது. இதன் காரணமாக தன் குறையை வெளியில் சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு, தனக்கு திருமணமானால் தன் மனைவியை எங்கே திருப்திபடுத்த இயலாமல் போய் விடுமோ என்ற தவறான எண்ணத்தில் தனக்குத் திருமணமே வேண்டாம் என முடிவெடுத்த இளைஞர்கள் ஏராளம்.
மற்ற எல்லா ஆண்களைவிட தன் ஆண்குறி இவ்வளவு சிறியதாக அமைந்துவிட்டதே என தன் மனத்திற்குள்ளேயே புழுங்கிச் சாகும் ஆண்கள் மனநோயாளிகளானவர் பலர்.

திருமணமான பல ஆண்களுக்கும் ஆண்குறி விஷயம் பெரிய பிரச்னையாக இருப்பதை அறிய முடிகிறது. தன் குறி சிறியதாக இருப்பதை தன் மனைவி பார்த்துவிடக்கூடாது என நினைக்கும் ஆண்கள் உண்டு. இதன் காரணமாக தன் மனைவி குறியை தொட்டு விடாதபடி மிக கவனமாக இருப்பவர் உண்டு. தன் மனைவிக்கு தன் குறியின் அளவு தெரியக்கூடாது என இரவில் அதிலும் இருட்டில் மட்டும் உறவுகொள்ளும் ஆண்கள் உண்டு.

இதெல்லாம் தேவை இல்லாமல் ஆண்கள் பயப்படக்கூடிய விஷயம். இரண்டு இஞ்ச் நீளமுடைய ஆண்குறியை வைத்துக் கொண்டு நூற்றுக்கணக்கான பெண்களை அனுபவித்தவர்கள் பலர் இருக்கின்றனர். நீண்ட தடிமனான குறியை உடைய ஆண்களால் கொடுக்க முடியாத சுகத்தை இரண்டு இஞ்ச் நீளமே உள்ள ஆண்குறியால் கொடுக்க இயலும்.

தன் குறி இவ்வளவு சின்னதாக இருக்கிறதே இதைக் கொண்டு மனைவியைத் திருப்திபடுத்த இயலுமா என்ற தயக்கத்திலேயே பல ஆண்கள் நடுங்கிவிட, இந்தப் பயத்தின் காரணமாகவே நிஜமாகவே அவன் மனைவியை அவனால் அனுபவிக்க முடியாமல் போகிறது.

அதைப்போன்றே ஆண்களின் உருவத்திற்கும் ஆண் குறிக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. நம்மில் பலர் குண்டான, தடித்த ஆண்களுக்கு நீண்ட ஆண்குறி இருக்கும் என்றும், ஒல்லியான ஆண்களுக்கு தடிமன் குரைந்த சின்னதான ஆண்குறியே இருக்கும் என்றும் நினைக்கின்றனர். ஆனால், இது தவறான கருத்தாகும். பல குண்டான ஆண்களுக்கு சின்னதாக ஆண்குறியும், பல ஒல்லியான ஆண்களுக்கு தடித்த ஆண்குறியும் இருக்கும். அதனைப் போன்ற உடலின் எடை குறைந்தாலும்,கூடினாலுமாண்குரியின் தடிமன் மாறாமல் ஓரே மாதிரியாகத்தான் இருக்கும்.

நம் உடலில் சுருங்கி விரியும் தன்மையுடைய உறுப்பான ஆண்குறியைப் பற்றி இன்னொரு தவறான கருத்து நிலவி வருகிறது. ஆண்குறி சிறியதாக இருந்தால் தன் மூலம் குழந்தை பிறக்காது, தன்னால் அப்பாவாக முடியாது என்ற தவறான கருத்துதான் அது. இப்படிப்பட்ட தவறான கருத்தையெல்லாம் முதலில் மூட்டைகட்டி வையுங்கள். ஆண்குறியின் அளவிற்கும் குழந்தை பிறப்பிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது.

ஆண்குறியைப் பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்? பெண்களைப் பொருத்தவரையில் ஆண்குறி நீளமாய் தடிமனாய் இருக்க வேண்டும் என்ற கட்டாயமெல்லாம் இல்லை. அப்படி இருப்பதும் உடலுறவின்போது மிகுந்த வேதனையையும், எரிச்சலையும் உண்டாக்கும் என நினைக்கின்றனர். அளவான ஆண்குறியாய் இருந்தால் போதும், உரவிற்கும் அதுதான் திருப்திகரமானதாய் இருக்கும். அல்லது சிறியதாக இருப்பினும் கவலையில்லை என்பது பெண்களின் கருத்து.

Previous articleவிந்து முந்துதல்…. ஆண்கள் மனத்தை அலைக்கழிக்கும் பிரச்சனை
Next articleகாமசூத்திரம் கற்றுக்கொடுக்கும் கலவி நிலைகள் எத்தனை?