Home பெண்கள் அழகு குறிப்பு ஆண்களின் அழகை இந்த 4 விஷயங்கள் தான் கெடுக்கிறதாம்…

ஆண்களின் அழகை இந்த 4 விஷயங்கள் தான் கெடுக்கிறதாம்…

26

சருமம் பார்ப்பதற்கு பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதைத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள். இதில், ஆண் – பெண் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. அதேசமயம், சருமம் ஆரோக்கியமாக இருப்பதும் அவசியம்.

ஆண்களுடைய சருமத்தைப் பராமரிப்பதற்கும் பெண்களுடைய சருமத்தைப் பராமரிப்பதற்கும் வித்தியாசங்கள் உண்டு. ஆணுடைய சருமத்தோல் சற்று கடினமாக இருக்கும். பெண்களுடைய சருமம் சற்று மென்மையாக இருக்கும். ஆண்களுடைய சருமத்தைப் பொலிவாகவும் ஆரோக்கியமாகவும் எப்படி காப்பது?

குப்புறப்படுத்தல்

அதிக வேலைப்பளுவின் காரணமாக, நல்ல தூக்கம் இல்லாமல், கண்கள் சிவந்து இருக்கும். அப்படி ஒருபோதும் இருக்கக்கூடாது. உங்கள் செய்கைகளை நன்றாக கவனித்துப் பாாத்தால் தெரியும். அசதியும் நல்ல தூக்கமும் இருக்கும் நேரங்களில் குப்புறப்படுத்து தூங்குவார்கள். அது அவர்களுக்கு அமைதியான தூக்கத்தைத் தரும். அதனால், நீங்கள் அசதியாக உணரும் தருணங்களில், நன்றாகக் குப்புறப் படுத்து தூங்கிவிடுங்கள்.

நன்கு வேகவைத்த உணவுகள்

நன்கு வேகவைத்த உணவுகள் பொதுவாகவே, அதிக அளவிலான குளுக்கோஸை ரீபைண்ட் செய்யும். அதிக அளவிலான கார்போஹைட்ரேட் உடலுக்கு மட்டுமல்ல, சருமத்தின் பொலிவையும் கெடுத்து, முகத்தில் சுருக்கங்களைத் தோற்றுவிக்கும். அதனால், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக சேர்த்துக் கொள்ளுவது நல்லது.

அலர்ஜி

தும்மல், இருமல், காய்ச்சல், தொண்டைப்புண் போன்ற அலர்ஜியால் உண்டாகும் நோய்கள், கண்ணுக்குக் கீழே கருவளையத்தை உண்டாக்கும். அலர்ஜி ஏதேனும் இருந்தால், உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

காபி

காலையில் காபி குடிப்பதால், நீங்கள் புத்துணர்ச்சியாக இருப்பதுபோல் உணர்கிறீர்கள். ஆனால், அவை உங்கள் உடலின் நீர்த்தன்மையைக் குறைத்துவிடுகிறது. காபி அதிகமாகக் குடிப்பதால், சருமத்தில் விரைவாகவே சுருக்கங்கள் விழுந்துவிடுகின்றன. காபிக்கு பதிலாக, கிரீன் டீ குடிப்பது உடலுக்கு நல்லது.

இவற்றைச் சரியாகச் செய்தாலே, உங்கள் உடலும் சருமமும் ஆரோக்கியமாக இருக்கும்.