Home ஆண்கள் அதிகம் ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய தகவல்

அதிகம் ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோய் பற்றிய தகவல்

91

நம் உடலில் சாதாரணமாக ஏற்படும் அறிகுறிகள் அலட்சியமாக நாம் தவிர்க்கக்கூடாது. ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயினை சில அறிகுறிகளை வைத்தே நாம் கண்டறிய இயலும்.

புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறிகள்
சிறுநீர் கழித்தலில் ஏற்படும் சிரமம் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படவுள்ளதை குறிக்கும் முக்கியமான அறிகுறியாகும்.

இரவில் அடிக்கடி சிறுநீர் கழித்தல் கூட புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல் மட்டுமல்லாது சிறுநீர் சரியாக வெளியேறாமல் இருப்பதும் புற்றுநோய்க்கான அறிகுறியாகும்.

முழுமையாக சிறுநீரை கழிக்க இயலாமல் இருப்பதும் ஒரு அறிகுறியாகும்.
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்பட்டால் இது புற்றுநோயின் முக்கியமான அறிகுறியாகும்.
சிறுநீருடன் இரத்தம் வெளியேறினால் கட்டாயம் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.

விந்து வெளியேறும் போது அதனுடன் இரத்தம் கலந்து வெளியேறுவது மற்றொரு அறிகுறியாகும்.
விந்தினை வெளியேற்றும் போது பிரச்சனைகளிருந்தால் புரோஸ்டேட் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அர்த்தம்.

உடல் வலி, முதுகு வலி போன்றவை ஏற்பட்டால் புற்றுநோய் தாக்குவதற்கான சாத்தியம் உள்ளது என அர்த்தம்.
சிறுநீர் கழிக்கும் போதோ அல்லது சாதாரணமாகவோ வலி இருந்தால் அது புற்றுநோய்க்கான முக்கிய அறிகுறியாகும்.

எலும்புகளில் ஏற்படும் வலி புரோஸ்டேட் புற்றுநோய்க்கான மிக ஆபத்தான அறிகுறியாகும்.
ஆணுறுப்பின் விரைப்பு தன்மை குறைவதும் முக்கிய அறிகுறியாகும். சிகிச்சையினை மேற்கொள்வது அவசியமாகும்.

தடுப்பது எப்படி
தக்காளியில் உள்ள லைக்கோ பீன் என்ற பொருள்தான் இந்த புற்று நோய்க்கு எதிராக செயல்படுகிறது அதுவும் சமைத்த வேகவைத்த தக்காளிக்கு புரோஸ்டேட் புற்றுநோயை குணப்படுத்தும் ஆற்றல் உள்ளதாம்.
மேலும் தர்ப்பூசணி பழம், ரோஸ் நிற திராட்சை பழங்கள் போன்றவற்றிலும் லைக்கோ பீன் அதிகம் இருப்பதால் ஆண்கள் இதனை தினமும் உண்டு வருவது மிகவும் நல்லது.