Home பாலியல் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்க

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை போக்க

53

ஆண், பெண் என இருபாலரும் ஒன்றாய் சுற்றி திரியும் போது, அவர்களிடம் பெண் என்ற உணர்வு ஏற்பட்டிருக்காது. முதல் முறை மாதவிலக்கு ஏற்பட்டு, பருவமடைதல் எனும் நிகழ்வு ஏற்படும் போது தான், அவர்கள் பெண்மையை உணர துவங்குவார்கள். மாதவிலக்கு காலத்தை பெண்கள் மிகவும் கொடுமையான ஒன்றாக எண்ணுவார்கள். அந்த சமயத்தில் அவர்களுக்கு ஏற்படும் வயிற்று வலி, முதுகு வலி போன்றவை அவர்களை அப்படி எண்ண செய்யும்.

மாதவிடாய் சுழற்சியானது 28- 30 நாட்களுக்குள் ஏற்பட்டால் உடல் ஆரோக்கியம் சீராக உள்ளது என்று அர்த்தம். மாதவிடாய் ஏற்படும் போது உடல் அசதி, கால் வலி, தசை வலி உடன் வருகிறதே என வருத்தப்படாதீர்கள். சீரற்ற முறையில் ஏற்படாமல் இருந்தால் அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மாதவிடாய் சீரற்ற முறையில் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் பிரச்சனை இருப்பதன் அறிகுறியாகும். பருவ கால மாற்றம் அல்லது வேற ஏதாவது பிரச்சனையின் காரணமாக ஒரு முறை ஏற்படலாம். ஆனால் தொடர்ந்து சீரற்ற மாதவிலக்கு ஏற்பட்டால் மருத்துவ ஆலோசனை பெறுவது சிறந்தது. சில உடல்நல பிரச்சனைகளாலும் சீரற்ற மாதவிலக்கு ஏற்படலாம். இங்கு சீரற்ற மாதவிடாய்க்கான காரணத்தைப் பார்க்கலாம்.

அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொண்டால், உடலில் கொழுப்பின் அளவு மிகவும் குறையும். கொழுப்பு பாலின ஹார்மோன்கள் சுரப்பில் இன்றியமையாத ஒன்று. கொழுப்பு குறையும் போது ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காது. இதனால் சீரற்ற மாதவிடாய் ஏற்படும்.

தைராய்டு பிரச்சனை மற்றும் மன அழுத்த நோய்களுக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாத விடாய் சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும். மருந்துக்களின் வீரியமும், ஹார்மோன் மாற்றங்களுக்கு காரணமாகலாம்.

கொழுப்பு ஹார்மோன் உற்பத்திக்கு தேவை என்றாலும், அளவுக்கு அதிகமாக கொழுப்பு அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிடாய் பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.

மன அழுத்தை ஏற்படுத்த கூடிய ஹார்மோன் அதிகமாகும்போது, அது பலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். மன அழுத்தம் இனப்பெருக்க மண்டலத்தை பாதிப்பதால், சீரற்ற மாதவிடாய் ஏற்படும்.

போதுமான அளவு தூங்காமல் இருத்தல், தாமதமாக தூங்குதல், இரவு நேரப் பணிகளில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் சீரற்ற மாதவிடாய் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். வயதாவதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணம். மெனோபாஸ் நெருங்கும் சமயத்தில் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. இது குறித்து கவலையடைய தேவையில்லை.