Home பாலியல் உடலுறவின் போது சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

உடலுறவின் போது சிறுநீர் வெளிப்படுவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

25

Captureபெரும்பாலும் உடலுறவு சார்ந்த சந்தேகங்களுக்கு யாரும் மருத்துவரிடம் செல்வதில்லை. கூச்சம், சங்கோஜம் காரணமாக தவிர்த்துவிடுகிறார்கள். ஆனால், சில சந்தேகங்கள், அறிகுறிகள் அபாயமாக கூட பின்னாட்களில் மாறலாம். சில சந்தேகங்கள் மிகவும் இயல்பானவை, இயற்கையானவை என்பதை அறியாமல் சிலர் அச்சம் கொள்வதும் உண்டு. அதில் ஒன்று தான் உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர் வருவது போன்ற உணர்வு. பலருக்கும் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த உணர்வ வெளிப்படலாம். ஆனால், அச்சம் கொள்ளும் அளவிற்கு இது ஒன்றும் பெரிய உடல்நலக் கோளாறு எல்லாம் இல்லை….

நிபுணர் விளக்கம்: இது குறித்து மருத்துவ நிபுணர் டாக்டர். லெவ்காஃப்,” உடலுறவில் ஊடுருவி ஈடுபடும் சமயத்தில், சிறுநீர் பையில் அதன் மூலம் ஏற்படும் அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால், பெண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என கூறியுள்ளார்.

தீர்வு: இதற்கு மருத்துவ ரீதியாக எந்த தீர்வும் கிடையாது. ஆனால், உடலுறவில் ஈடுபடும் 45 – 60 நிமிடங்களுக்கு முன்னர் சிறுநீர் கழித்துவிட்டு வந்துவிடுவது நல்லது.

அறிவுரை: மேலும், சிறுநீர் கழித்தவுடனேயே உடலுறவில் ஈடுபட வேண்டாம் என்றும் மருத்துவநிபுணர்களால் அறிவுரைக்கப்படுகிறது. ஏனெனில், இதனால், பெண்களுக்கு தான் சிறுநீர் பாதை நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறது.

ஜி-ஸ்பாட்: சிறுநீர் மட்டுமின்றி ஜி-ஸ்பாட் (G-Spot)-ல் தூண்டுதல் அல்லது அழுத்தம் அதிகரித்தாலும் கூட சிறுநீர் வ வெளிவருவது போன்ற உணர்வு ஏற்படும் என கூறப்படுகிறது.

இயல்பு: மேலும், உடலுறவில் ஈடுபடும் போது, சிறுநீர் வெளிவருவது போன்ற உணர்வு மிகவும் இயல்பானது. இது ஒன்றும் குறைபாடு இல்லை எனவும், டாக்டர். லெவ்காஃப்கூறியுள்ளார். மேலும், உடலுறவில் ஈடுபட்ட பிறகு சிறுநீர் கழிக்க மறக்க வேண்டாம். இது சிறுநீர் பாதை தொற்று உண்டாகாமல் தடுக்கும் எனவும் அறிவுரைத்துள்ளார்.