Home பெண்கள் அழகு குறிப்பு கூந்தல் பராமரிப்புக்கு சில யோசனைகள்

கூந்தல் பராமரிப்புக்கு சில யோசனைகள்

48

Capture* திடமான, அடர்த்தியான கூந்தலுக்கு முதல் தேவை சரியான, சத்துள்ள உணவு. கூந்தலுக்கு உகந்த உணவுகளைப் பற்றி, தனியாக சொல்லப்பட்டிருக்கிறது.

* ஆயுர்வேதத்தில் கூந்தல் பராமரிப்புக்கென பல மூலிகைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. ஆயுர்வேத தைலங்கள், நல்ல பலன்களை தரும். சிலவற்றை வீட்டிலேயே தயாரிக்கலாம். இவற்றை பற்றிய விவரங்களும் தனியாக கொடுக்கப்பட்டிருகின்றன. இந்த தைலங்களில் கூந்தலுக்கேற்ற மூலிகைகள் மற்றுமன்றி, மன உளைச்சல், மனோ ரீதியான பாதிப்புகளுக்கும் மூலிகைகள் சேர்க்கப்படுகின்றன.

* ரசாயனங்கள் கலந்த கூந்தல் எண்ணெய் போன்றவற்றை தவிர்க்கவும். இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளே நல்லவை.

* வாரம் ஒரு முறையாவது எண்ணெய் தேய்த்துக் குளித்தல் நல்லது.

* கூந்தலுக்கு பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் – சீப்பு, துவாலை, முடிப்ரஸ்கள் (Hair brush) அனைத்தும் சுத்தமாக இருக்க வேண்டும். வாரம் இரு முறை சீப்பையெல்லாம் கழுவ வேண்டும்.

* தலையை கைவிரல்களின் நுனிகளால் மசாஜ் செய்யவும் 15 நிமிடங்களுக்கு.

* முடியை ‘ப்ரஷ்’ செய்யும்முறை – காலை 5 நிமிடம், மாலை 5 நிமிடம் பிரஷ் செய்யவும்.

* குளித்த பின், கூந்தலை இயற்கையாக காயவிடுங்கள். ஈரக்கூந்தலில் வார வேண்டாம். ஈரமான முடி பலவீனமாக இருக்கும். அப்போது வாரினால் முடி உடையும். ஹேர் டிரையர்கள் சூட்டை அதிகமாக்கும்.

* முடியில் ‘சிக்கு’ ஏற்படாமல், வாரி வரவும்.

* வாசனை தேங்காய் எண்ணெயில், ரசாயன பொருட்கள் (Preservatives) சேர்க்கப்படுவதால் வீட்டில் தயாரிக்கப்படும் தைலங்களே நல்லது.

* தலை, உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பது இவற்றை விட்டுவிடாமல் செய்து வரவும். தைல எண்ணெயை உபயோகிக்கும் போது முடி வேர்க்கால்களில் படும்படி தேய்க்க வேண்டும்.