Home பெண்கள் உடல் கட்டுப்பாடு பெண்களுக்கு அழகான உடலமைப்பை தரும் உடற்பயிற்சி

பெண்களுக்கு அழகான உடலமைப்பை தரும் உடற்பயிற்சி

26

உடற்பயிற்சி பெண்களுக்கு, நிச்சயமாக அழகான உடலமைப்பை அளிக்கிறது என்றே சொல்லலாம். உடற்பயிற்சி செய்வதனால் அலைபாய்கிற மனம் ஓர் கட்டுக்குள் அடங்குகிறது.இரத்த ஓட்டம் சீராகி,புத்துணர்வு கிடைக்கிறது.

உடற்பயிற்சியினால் உடல் கட்டுக்கோப்பாக ஆகிவிட்டாலே மகிழ்ச்சிதான்.இந்த மகிழ்ச்சி தன்னம்பிக்கையை அளித்து அழகூட்டுகிறது. வியர்வை வெளிப்படுகிற மாதிரி பயிற்சி செய்தாலே முகம் பொலிவு பெற ஆரம்பித்து விடும்.

பயிற்சி செய்து விட்டு விட்டால் குண்டு பெண்மணி ஆகிவிடுவோம் என்று பயப்படும் அவசியம் இல்லை. என்ன இரண்டு கிலோ அதிகமாகும் அவ்வளவுதான்.மீண்டும் நீங்கள் தொடர்ந்தால் சரியாகி விடும். எந்தவிதமான ரிஸ்க்கும் இல்லாத பெண்கள், 2வது ட்ரைமெஸ்டரில் உடற்பயிற்சிகள் செய்யலாம்.

அது முதுகுவலி, மலச்சிக்கல் வராமல் காக்கும். வாக்கிங் மிகச் சிறந்த உடற்பயிற்சி. டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகவும் அவசியம். அரை மணி நேரம் மிதமான வேகத்தில் நல்ல காற்றோட்டமான சூழலில் நடக்கலாம்.

யோகாவும் சிறந்த பயிற்சி.ஜிம்முக்கு சென்று வருத்தும் அளவுக்கு உடற்பயிற்சி செய்து கிடைக்கும் வாட்டசாட்டமான உடல் மட்டுமே ஆரோக்கியத்தை குறிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது.

உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் அதனதன் தன்மை பிறழாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம். தங்கள் உடலுக்கு ஏற்ற பயிற்சி எது என்பதை அறிந்து அதை பின்பற்றியே உடற்பயிற்சி செய்ய வேண்டும்.