Home பாலியல் உறவுக்கு முன்பாக சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு ஆபத்தா..?

உறவுக்கு முன்பாக சிறுநீர் கழிப்பதால் இவ்வளவு ஆபத்தா..?

72

Woman on toilet
உடலுறவில் ஈடுபடும்போது சுகாதாரமாக இருக்க வேண்டியது அவசியம். இதைத் தவறாகப் புரிந்து கொண்ட பலரும் உடலுறவில் ஈடுபடும் முன்பு சிறுநீர் கழித்துவிட்டு வருகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான பழக்கம்.

சமீபத்திய ஆய்வு ஒன்றில் உடலுறவுக்கு முன் சிறுநீர் கழித்து விட்டு வந்தால் பெண்களுக்கு பெண்ணுறுப்பில் நோய்த்தொற்றுகள் உண்டாகும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக்க கண்டறியப்பட்டுள்ளது.
உடலுறவுக்கு முன் தானாக வழிய சென்று சிறுநீர் கழிக்கக் கூடாது. அதேபோல் சிறுநீர் கழித்தவுடனேயே உடலுறவில் ஈடுபடவும் கூடாது.

இதுவரை உடலுறவுக்கு முன் சிறுநீர் கழித்துவிட்டு வருவது தான் சுகாதாரமான முறை எனக் கருதி வந்தனர். ஆனால் இது தவறான பழக்கம். அப்படி செய்யும்போது பெண்ணுறுப்பின் வழியாக சிறுநீர்ப் பாதையில் நோய்த் தொற்றுக்கள் உண்டாகும்.
உடலுறவுக்குப் பின் சிறுநீர் கழிக்கலாம். இயல்பாகவே உடலுறவுக்குப் பின் சிறுநீர் வரும். அதை அடக்கி வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

உடலுறவில் ஈடுபட்ட பின், பிறப்புறுப்பை நன்கு சுத்தம் செய்வது அவசியம்.
பொதுவாக பெண்கள் தங்களுடைய பிறப்புறுப்பை சுத்தம் செய்யும் போது பின்பக்கமாக சுத்தம் செய்வது நல்லது. அது பிறப்புறுப்பின் வழியே சிறுநீர்ப் பாதைக்குள் நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும்.