Home பெண்கள் தாய்மை நலம் 33 வயதுக்குப் பின் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு நீண்ட ஆயுள்..

33 வயதுக்குப் பின் கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு நீண்ட ஆயுள்..

25

index33 வயதுக்குப் பின்னர் கர்ப்பமடையும் பெண்கள் மெதுவாக மூப்படைவதால் நீண்ட காலம் வாழ்வதாக அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வு கூறுகின்றது.
இறுதியாக 29 வயதுக்குள் குழந்தை பிரசவித்த பெண்களுடன் ஒப்பிடுகையில் தமது இறுதிக் குழந்தையை 33 வயதுக்குப் பின்னர் பிரசவித்த பெண்கள் தமது 95 வது பிறந்த நாளை கொண்டாடும் வாய்ப்பை பெறுகின்றமை இரு மடங்கு அதிகம் என மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய போஸ்டன் பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தைச் சேர்ந்த மருத்துவ கலாநிதி தாமஸ் பெரில்ஸ் கூறினார்.
எனினும், இந்த கண்டுபிடிப்பானது பெண்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்துவதை வலியுறுத்தவில்லை என அவர் கூறினார்.
வயதான காலத்தில் கடைசிக் குழந்தைகளைப் பிரசவிப்பது பெண்களின் இனவிருத்தி முறைமை மெதுவாக வயதாவதற்கு வழிவகை செய்து அவர்கள் நீண்ட காலம் வாழ்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.
நீண்ட காலம் வாழும் உறுப்பினர்களைக் கொண்ட 551 குடும்பங்களின் பரம்பரை மற்றும் சமூக தரவுகளை அடிப்படையாக வைத்தே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி, பெண்களின் இனவிருத்தி ஆற்றல் காரணமாகவே அவர்களின் 45 சதவீதமானவர்கள் 100 வயது அல்லது அதற்கு அதிகமான வயது வரை வாழ்கின்றனர். ஆனால் ஆண்களில் 15 சதவீதமானவர்களே 100 வயது வரை வாழ்கின்றனர்.