Home பாலியல் 14 வயதிலேயே பழுத்து விடும் பிஞ்சுகள்…!

14 வயதிலேயே பழுத்து விடும் பிஞ்சுகள்…!

20

25-1440509602-sex-in-public2-600செக்ஸ் கல்வியை எவ்வளவு சீக்கிரம் கொண்டு வர முடியுமோ, அந்த அளவுக்கு சமுதாயத்திற்கு நல்லது போல. காரணம், இந்திய சிறார்கள், மிக மிக இளம் வயதிலேயே செக்ஸுக்கு ஆட்பட்டு விடுகிறார்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது.

பாதுகாப்பற்ற செக்ஸை பல சிறார்கள் மேற்கொள்வதால் செக்ஸ் தொடர்பான நோய்களும் இவர்களை அதிக அளவில் தாக்க ஆரம்பிப்பதாகவும் சர்வே முடிவு கூறுகிறது. நாடு முழுவதும் 20 நகரங்களில் 13 முதல் 19 வயதுக்குட்பட்ட 15,000 சிறுவர் சிறுமிகளிடம் இதுதொடர்பாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

இதில் கிடைத்துள்ள தகவல்கள் அதிர வைப்பதாக உள்ளன. சிறார்கள் முதல் செக்ஸ் தொடர்பை வைத்துக் கொள்ளும் சராசரி வயது ஆண்களுக்கு 13.72 ஆகவும், சிறுமிகளுக்கு 14 ஆகவும் உள்ளது. அதாவது இரு பாலினருமே சராசரியாக 14 வயதிலேயே செக்ஸ் தொடர்பை சந்திக்கும் நிலை உள்ளது.

பாலியல் நோய்கள்
தாக்குதல் மேலும் பெரும்பாலான சிறார்களுக்கு பாதுகாப்பான செக்ஸ் குறித்துத் தெரிவதில்லை. இதனால் அவர்களுக்கு எச்ஐவி உள்ளிட்டவை தாக்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. மிகவும் சிறிய வயதிலேயே இதுபோன்ற செக்ஸ் நோய்கள் அவர்களைத் தாக்குவதும் அதிகரித்துள்ளதாக இந்த கருத்துக் கணிப்பை நடத்திய இணையதளத்தைச் சேர்ந்த டாக்டர் தேப்ராஜ் ஷோம் கூறுகிறார்.

ஒருமுறையாவது

கருத்துகணிப்பின்போது சந்தித்த பையன்களில் 6.3 சதவீதம் பேர் ஒருமுறையாவது செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்தனர். சிறுமிகளில் 1.3 சதவீதம் பேர் ஒருமுறை செக்ஸ் வைத்துக் கொண்டதாக தெரிவித்Lனர்.

14 வயதில் சிறுவர்களுக்கு
சிறுவர்களைப் பொறுத்தவரை 14 வயதில் செக்ஸ் தொடர்பான முதல் அனுபவம் கிடைத்ததாக பலரும் கூறினர். சிறுமிகளைப் பொறுத்தவரை இந்த வயது 16 ஆக உள்ளது.

15 முதல் 24 வயதுக்குள்
பொதுவாக 15 முதல் 24 வயதுக்குள் ஆண்களும், பெண்களும் திருமணத்திற்கு முன்பே செக்ஸ் வைத்துக் கொண்டதாக பரவலாக கூறியுள்ளனர். இது ஆண்களிடம் 15 முதல் 22 சதவீதமாகவும், பெண்களில் 1 முதல் 6 சதவீதமாக உள்ளது.

செக்ஸ் நோய்கள் அதிகரிப்பு
இந்தியாவில் இளம் பிராயத்தினர் மத்தியில் செக்ஸ் நோய்கள் பரவுகிறது. அதன் விகிதம் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் மக்கள் தொகையைப் பார்க்கையில் 4 சதவீதம் என்பதே மிக மிக அதிகமாகும். கவலைக்குரிய விஷயம்.