Home உறவு-காதல் விவாகரத்தான ஆணுடன் டேட்டிங் போகலாமா?

விவாகரத்தான ஆணுடன் டேட்டிங் போகலாமா?

10

விவாகரத்தான ஒரு ஆண்களுக்கு தான் உறவுகளின் அருமை, பெருமையெல்லாம் தெரிந்திருக்கும். விவாகரத்தான ஆண்கள் தான் நல்ல விவரமாகவும் இருப்பார்கள்.

அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட பலவிதமான அனுபவங்கள், விவரங்கள், அவர்களுடைய புத்திசாலித்தனம், வலிமை என்று எல்லாமே உங்கள் டேட்டிங்கிற்கு நன்றாகக் கை கொடுக்கும்.

நீங்கள் சொல்லும் எதையும் அக்கறையுடன் காது கொடுத்து அவர்கள் கேட்பார்கள். உங்கள் டேட்டிங்கிற்கு, குறிப்பாக சமீபத்தில் விவாகரத்தான ஆண்களைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நல்லது. உங்கள் டீன்-ஏஜ் பருவத்தில் உங்களைச் சுற்றிக் கொண்டிருந்த பசங்களை விட விவாகரத்தான ஆண்கள் எவ்வளவு பெட்டர் என்பதை அனுபவித்துப் பாருங்கள், உண்மை புரியும்!

விவாகரத்தான ஒருவர் தன் வாழ்க்கையில் நிறைய அனுபவங்களைச் சந்தித்திருப்பார். அவை பெரும்பாலும் கசப்பான அனுபவங்களாகத் தான் இருக்கும். எனவே அவற்றுக்கு எதிர்மாறாகத் தான் நடந்து கொள்ள அவர் விரும்புவார். இதனால், டேட்டிங்கின் போது அவர் கண்டிப்பாக உங்களைத் திருப்திப்படுத்துவார்.

ஒரு விவாகரத்தான ஆணால் மட்டுமே ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற நாசூக்கு தெரியும். எனவே, நீங்கள் செய்யும் செயல்களில் அவர் உங்களுக்கு நன்றாக ஒத்துழைப்பார். திருமணமாகாத ஆண்கள் உங்களிடம் அளவுக்கு அதிகமாகவே எதிர்பார்ப்பார்கள். ஆனால், விவாகரத்தான ஆண்களின் எதிர்பார்ப்புக்கள் அளவாகவே இருக்கும்; உண்மையாகவும் இருக்கும்.

பெரும்பாலான ஆண்கள் தங்களுக்கான பொறுப்புக்களைத் தட்டிக் கழிப்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால், விவாகரத்தான ஆண்கள் அப்படியல்ல; மிகவும் பொறுப்புடனே நடந்து கொள்வார்கள். விவாகரத்தான ஆண் ஏற்கனவே வாழ்க்கையில் அடிபட்டவர்.

எனவே, ஒரு புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளும் போது, மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பார். மீண்டும் ஒரு தோல்வியைத் தாங்கிக் கொள்ள அவர் விரும்பமாட்டார்.