Home பெண்கள் அழகு குறிப்பு வாவ்.. என்ன அழகு’! அழகு குறிப்புகள்

வாவ்.. என்ன அழகு’! அழகு குறிப்புகள்

17

முகம் பளபளப்பாக ஒளிர்வதற்கான ‘க்ளோ மாஸ்க்’: ஒரு டீஸ்பூன் முல்தானி மிட்டி (இது ஒரு வகையான களிமண். நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும்), ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பப்பாளிப்பழ கூழ் எடுத்து நல்லா கலந்து முகத்தில் அப்பி ரிலாக்ஸ்டாகஉட்காருங்க. சரியா இருபது நிமிஷம் கழிச்சு இந்த பூச்சாண்டிக் கோலத்தை தண்ணீர் விட்டுக் கழுவி கலைச்சுடலாம். அப்புறம் நீங்களே சொல்வீங்க, ‘ஹை… என் முகம் இந்தியா மாதிரி ஒளிர் கிறது’ன்னு!

இதேமாதிரி ‘தேன் மாஸ்க்’கும் போடலாம். முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர் விட்டுக் கழுவி, அந்த ஈரம் கொஞ்சம் இருக்கும்போதே தேனை முகத்தில் தடவுங்கள். தேன் அபிஷேகம் முடிந்து முப்பது நிமிஷத்தில் முகத்தைக் கழுவலாம். பட்டுக் கன்னம் தொட்டுக் கொஞ்சலாம்.

சிலருக்கு முகத்தில் சின்ன சின்ன சுருக்கங்கள் இருக்கும். அதைப் போக்க அருமையான மருந்து வாழைப்பழம் தான்! வாழைப்பழத்தை க்ரீம் போல முகத்தில் பூசி இருபது நிமிடம் வைத்து இருங்கள். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவி, உடனடியாக ஜில் தண்ணீரை முகத்தில் வாரிஅடியுங்கள். மென்மையான டவலால் முகத்தை ஒற்றி எடுங்கள். புத்துணர்ச் சிக்கும் புதுப் பொலிவுக்கும் கியாரண்டி!