Home பெண்கள் அழகு குறிப்பு மென்மையான சருமம் வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

மென்மையான சருமம் வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க…

37

அனைவருக்குமே அழகான மற்றும் மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக பலர் பல அழகு நிலையங்களுக்குச் சென்று சருமத்தைப் பராமரிப்பார்கள். ஆனால் அவ்வாறெல்லாம் நிறைய பணம் செலவழித்து அழகு நிலையங்களுக்கு சென்றால் மட்டும் அழகு வந்துவிடாது. பொதுவாக அழகு என்பது ஒருவர் மேற்கொள்ளும் செயல்களின் மூலம் தான் வருகிறது. சிலருக்கு இயற்கையாகவே சருமம் மென்மையாக இருக்கும். ஒருசிலருக்கு சருமம் கடினமாக இருக்கும். இவ்வாறு கடினமாக இருக்கும் சருமத்தை இயற்கையான முறையில் மென்மையாக்க வேண்டுமெனில், ஒருசில செயல்களை தினமும் பின்பற்ற வேண்டும் மற்றும் ஒருசில செயல்களை செய்யவே கூடாது. அப்படி சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய சில பழக்கங்களை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை பின்பற்றினால், நிச்சயம் சருமம் மென்மையாக இருக்கும்.

தண்ணீர் அதிகம் குடிக்கவும் தினமும் போதிய அளவில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ள வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவாகவும், மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

வியர்வை மிகவும் முக்கியம் வியர்வை வெளியேறுவது என்பது மிகவும் இன்றியமையாதது. ஏனெனில் வியர்வையின் மூலம் நிறைய நன்மைகள் உடலுக்கு கிடைக்கும். குறிப்பாக, சருமத்துளைகளில் தங்கியுள்ள நச்சுக்களை அனைத்தும் வெளியேறி, சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும். எனவே தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, வியர்வையை வெளியேற்ற வேண்டு

முகத்தை அடிக்கடி கழுவ வேண்டாம் முகத்தை அடிக்கடி சோப்பு போட்டு கழுவினால், சருமம் வறட்சியுடன் காணப்படும். ஏனெனில் சோப்பானது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்களை முற்றிலும் சருமத்தில் இருந்து வெளியேற்றிவிடும். எனவே ஒரு நாளைக்கு 1-2 முறை கழுவினால் போதுமானது.

தேவையற்ற சரும முடிகளை அகற்றவும் சருமத்தில் தேவையில்லாத இடங்களில் முடிகள் இருந்தால், அவற்றை வாக்சிங் அல்லது ஷேவிங் மூலம் நீக்க வேண்டும். இதனால் சருமம் மென்மையாக இருக்கும்