Home உறவு-காதல் முதல் டேட்டிங்கில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள்

முதல் டேட்டிங்கில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள்

20

09-1433842454-1seventhingswomenexpectonafirstdateகாதல் என்றது பூப்போன்றது என்று எழுதி வைத்தவரை கட்டிவைத்து உதைக்க வேண்டும். அவர் மென்மையானது என்று கருதிக் கூற. நம்மவர்கள் தினம், தினம் புதியதாய் ஒன்றை மலரவிடுகின்றனர். கால் போன போக்கிலே மனிதன் போனது மாறி, ஃபிகர் போன போக்கிலே காதல் போகிறது.

சரி, இதை எல்லாம் பேசி பயனில்லை. ட்ரெண்டுக்கு ஏற்றார் போல நாம் மாறாவிட்டால், நம்மை இந்த உலகம் மறந்துவிடுகிறதே. ஆகையால், நீங்கள் அப்படி ட்ரெண்டுக்கு ஏற்றார் போல மாறியவராக இருந்தால், முதல் டேட்டிங்கில் ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்களை பற்றிக் கட்டாயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

“அப்டேட்டிங் முக்கியம் அமைச்சரே, இல்லைனா வெறும் கைய தா காத்துல ஆட்டனும்….” சரி, அப்படி என்ன அந்த ஏழு விஷயங்கள் என இனிப் பார்க்கலாம்…

தூரமான பயணம்
பெண்களுக்கு எப்போதும் தொலைவான பயணம் செல்ல விரும்புவார்கள். முக்கியமாக, இருசக்கர வாகனாமாக இருந்தால், சிக்கனமாகவும் இருக்கும், சிக்கென்றும் இருக்கும்.

பொறுமை முக்கியம்
வாகனத்தில் வேகம் இருக்கலாமே தவிர, செயல்பாட்டில் கொஞ்சம் பொறுமை அவசியம். வாய்ப்பு கிடைத்துவிட்டது என்று எடுத்தோம், கவிழ்த்தோம் என்று செயல்படுவது, தங்க முட்டையிடும் வாத்தின் கழுத்தறுத்ததைப் போல ஆகிவிடும்.

பாராட்டுதல்
பிறவியிலேயே ஞாபக மறதியை வரமாய் பெற்று வந்தவர்கள் ஆண்கள். பெண்களோ, பாராட்டுதல்களை எதிர்பார்ப்பவர்கள். எனவே, நொடி பொழுதும் தவறாமல், அவர்கள் சிறு புள், பூண்டினை அசைத்தால் கூட, மனம் குளிர பாராட்ட வேண்டியது அவசியம் மக்களே!! (நொங்கு திங்கணும்னா.. கொஞ்சம் நோண்டி தான் ஆகணும்!!!)

ஆர்வமாக இருத்தல்
எக்காரணம் கொண்டும், முதல் டேட்டிங் அன்று ஆர்வம் குறைந்து இருக்காதீர்கள். பெண்களுக்கு தங்கள் மீது ஆர்வமாய் உள்ள ஆண்களை தான் பிடிக்கும்.

பிடிவாதம், வற்புறுத்துதல்
பெண்களிடம் தாரளாமாக பிடிவாதம் பிடிக்கலாம், ஓர் வழியாக அவர்கள் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், வற்புறுத்தக் கூடாது, மசியவே மாட்டர்கள். (பிடிவாதம் அத்தியாவசியம், வற்புறுத்துதல் ஆடம்பரம்!!!)

இன்னொரு திட்டம்
முதல் முறையாக டேட்டிங் போகும் போது ஒரே ஒரு திட்டத்தை மட்டும் நம்பி போக வேண்டாம். கண்டிப்பாக ஏதேனும் தடை ஏற்பட வாய்ப்புகள் இருக்கும். (இல்லாங்காட்டியும்… நம்ம இராசிக்கு தானா வந்து சனி உக்காரும்!!!) எனவே, எதற்கும் இரண்டாவதாக ஒரு திட்டம் வைத்துக்கொள்வது உங்களுக்கு நல்லது.