Home பெண்கள் அழகு குறிப்பு முகம் பற்றிய சில குறிப்புகள்

முகம் பற்றிய சில குறிப்புகள்

21

Rachita-Tamil-Serial-Actress-photos-19வறண்ட சருமம் பெற:
பாதாம் பருப்பு, ஒரு தேக்கரண்டி பாலாடை, எழுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து பசை போலச் செய்ய வேண்டும். அந்த பசையை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின்னர் தண்ணீரால் கழுவி வந்தால் வறண்ட சருமம் பெறும்.
முகம் பளபளப்பாக:
சம அளவு கேரட் சாறு, ஆரஞ்ச் பழச்சாறு, எழுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.
முகம் மென்மையாக மாற:
சிறிதளது பாசி பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊற வைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.
முகத்தில் கரும்புள்ளிகள் குறைய:
கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறையும்.
முகப்பரு குறைய:
ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு நன்றாக அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.