Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மார்பகம் சிறிதாக உள்ளதா கவலை வேண்டாம்

மார்பகம் சிறிதாக உள்ளதா கவலை வேண்டாம்

39

breast-enlargement-treatmentமார்பகங்கள் சிறிதாக Small Size Breast இருக்கும் சில பெண்கள் தம்மிடம் பெண்களின் அம்சங்கள் இல்லையென்றும், உடலுறவில் தம்மால் ஆண்ளைத் திருப்பிப் படுத்த முடியாது என்றும் கவலை கொண்டு ஒரு வித தாழ்வு மனப் பான்மைக்குத் தள்ளப் படுகிறார்கள்.

கிராமத்து பெண்களிடம் மட்டுமல்ல, நகரத்து பெண்களிடமும் இதுபோல் தங்களது உடல் அமைப்பு குறித்த தவறான எண்ணங்கள் உள்ளன. இதைத்தான் Body Image என்று சொல்கிறோம். அதாவது, நம்முடைய உடல் பற்றி நமக்கிருக்கும் எண்ணங்கள் மற்றும் நம் உடல் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பற்றிய நம் கற்பனை இரண்டும் சேர்ந்து, இது உருவாகிறது. முக்கியமாக உடலுறவில் ஆணைத் திருப்திப்படுத்த பெண்ணின் மார்பகங்கள் பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும், இதுபோல் பெண்ணைத் திருப்திப்படுத்த, ஆணுக்கு பிறப்புறுப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்றொரு நம்பிக்கையும் உள்ளன.

இந்த நம்பிக்கைகள் சரியானவைதானா என்று பார்ப்போம்.

முதலில் ஆண் பிறப்புறுப்பு பெரிதாக இருந்தால்தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என்பதை எடுத்துக் கொள்வோம். ஆண் பிறப்புறுப்பு விறைப்புத்தன்மை இல்லாத சாதாரண நேரங்களில் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அதுபற்றி யாரும் கவலைப்படுவதில்லை. ஏனெனில், அப்போது அதனுடைய வேலை, சிறுநீர் கழிப்பது மட்டும்தான். ஆனால், விறைப்புத்தன்மை அடைந்த பிறகு, எந்த அளவுக்கு அது நீளமாக, தடிமனாக இருக்கிறதோ, அந்த அளவுக்குப் பெண்ணைத் திருப்திப்படுத்த முடியும் என்னும் நம்பிக்கை உள்ளதால், விறைப்புத் தன்மை அடைந்த நிலையில், ஆண் பிறப்புறுப்பு எவ்வளவு நீளம் இருக்கிறது என்பது முக்கியமாகிவிடுகிறது.

அதாவது, பெண் பிறப்புறுப்பின் Vaginal Wall உட்பகுதி இடைவெளி இல்லாமல் நிரப்பப்படும்போதுதான், பிறப்புறுப்பின் உட்புறச் சுவர்களில் உராய்வு ஏற்பட்டு, அவள் உச்சகட்ட இன்பத்தை Orgasm பெற்று திருப்தியடைகிறாள் என்பது நம்பிக்கை. அதைவிட முக்கியமானது, பெண்ணை திருப்திப்படுத்துவது என்பது ஆண்மையின் அடையாளமாகவும், வீரத்தின் அடையாளமாகவும் வேறு கொள்ளப்படுகிறது. இதனடிப்படையில்தான் இந்த நம்பிக்கை உருவாகியுள்ளது. பெண்களுக்கும் இந்த நம்பிக்கை உள்ளது என்பது இதற்கு மேலும் வலு சேர்த்துவிட்டது. இனி விஞ்ஞான ரீதியான முடிவுகளைப் பார்ப்போம்.

சாராசரியாக உணர்ச்சிவசப்படாத நிலையில், அதாவது விறைப்பற்ற நிலையில் Flacid Stage ஆண் பிறப்புறுப்பு Penis 2 அங்குலம் முதல் 4 அங்குலம் வரை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. விறைப்படைந்த நிலையில் Erection Stage, 5 அங்குலம் முதல் 6 அங்குலம் வரை உள்ளது. ஆனால், பெண் பிறப்புறுப்பின் முதல் 2 இன்ச் பகுதிகளில்தான் அவள் தூண்டப்பட்டு செக்ஸ் உணர்ச்சிகளை அடைகிறாள் என்று விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், பெண்ணின் செக்ஸ் உணர்ச்சி நரம்புகள் இந்த பகுதியில்தான் உள்ளன. அதையும் கடந்து உள்ளே எவ்வளவு தூரம் சென்றாலும், பிரயோஜனமில்லை. எனவே, ஒரு பெண்ணின் செக்ஸ் உணர்ச்சிகளைத் தூண்ட, ஒரு ஆணுக்கு விறைப்படைந்த நிலையிலும்கூட 2 இன்ச் பிறப்புறப்பு போதும். ஆனால் இதைவிட அதிகமான நீளம்கொண்டதாகத்தான் உலகம் முழுக்க ஆண்களுக்கு பிறப்புறுப்பு அமைந்துள்ளது. எனவே ஆண் பிறப்புறுப்பு சிறியதாக Small Size Penis உள்ளதா, பெரியதாக உள்ளதா என்பது உடலுறவில் ஒரு பிரச்னையே இல்லை.

முதலில் செக்ஸ் வெறும் உடல் சம்பந்தப்பட்டது என்பதே தவறான நம்பிக்கை. உடல்தான் செயல்படுத்துகிறது என்றாலும் செக்ஸ் மனது சம்பந்தப்பட்டது என்பதுதான் உண்மை.

ஒரு பெண், ஒரு ஆணுடன் எந்த அளவுக்குப் பழகி, அவன் மேல் காதல் கொண்டு, எந்த அளவுக்கு அவன் மேல் விருப்பமும் ஆசையும் கொள்கிறாளோ அந்த அளவுக்குத்தான் அவள் உடலுறவின்போது திருப்தியடைகிறாள். ஒரு பெண் ஒரு ஆணின் மேல் காதலும் ஆசையும் திருப்தியும் அடைவது அவர்கள் இரண்டு பேருக்கும் இடையேயான பழக்க வழக்கங்களைப் பொறுத்துதான் உள்ளது. எனவே பெண்ணை திருப்திப்படுத்த விரும்பும் ஆண், அவள் தன்னை விரும்பும் விதமாக, அவளது ஆசைகளையும் விருப்பங்களையும் தெரிந்து நடந்துகொள்வதுதான் முக்கியமே தவிர, ஆண் பிறப்புறுப்பின் அளவு பற்றி கவலைப்படுவது தேவையில்லாதது. எனவே, மற்ற ஆண்களின் பிறப்புறுப்புடன் ஒப்பிட்டு தனக்கு மட்டும் சிறிதாக உள்ளது. தன்னை மட்டும் கடவுள் ஏமாற்றிவிட்டான் என்று கவலைப்படுவது தேவையில்லாதது.

மூக்கு பெரிதாக இருக்கிறவர்கள் அதிக அளவு காற்றை உள்ளே இழுத்து நன்றாக சுவாசிக்கிறார்கள், மூக்கு சிறிதாக இருப்பவர்களால் அந்த அளவுக்கு நன்றாக சுவாசிக்க முடிவதில்லை என்பது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல்தான் இதுவும்.

சிறுநீர் கழிக்கும் இடங்களில் மற்ற ஆண்களின் பிறப்புறுப்பைப் பார்க்க நேரும். சில ஆண்கள் தனது பிறப்புறுப்பு அவர்களைவிட மிகச் சிறியதாக உள்ளதாக எண்ணுகின்றனர். இதுவும் தேவையில்லாத கவலை. பொதுவாக ஒரு பொருளை பக்கத்தில் பார்ப்பதற்கும் தூரத்தில் பார்ப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. பக்கத்தில் பார்க்கும்போது சிறிதாக இருக்கும் ஒரு பொருளை தூர விலகி நின்று பார்க்கும் போது பெரிதாகத் தெரியும். இது ஆப்டிகல் இல்யூஷன் (Optical Illusion)தான். மேலும் எல்லோருக்கும் ஒரே அளவு இருக்க வேண்டும் என்று அவசியமும் இல்லை.

இதேநிலைதான் பெண்ணின் மார்பகங்களுக்கும். அது சிறிதாக இருப்பதற்கும் பெரிதாக இருப்பதற்கும் செக்சுக்கோ அல்லது குழந்தைக்கு பாலூட்டுவதற்கோ சம்பந்தமில்லை. ஒரு ஆண், அவள் மேல் எவ்வளவு ஆசையுடன் காதலுடன் நெருங்குகிறான் என்பதுதான் முக்கியம். நடிகைகள் சர்ஜரி செய்து கொள்வது சினிமாவின் காட்சி தேவைகளுக்காக. அதை ஒரு சாதாரணப் பெண் செய்ய வேண்டும் என்று அவசியமே இல்லை.

பொதுவாக இதுபோன்ற பயங்களும் தாழ்வு மனப்பான்மையும் ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி, அவர்களுக்கே அவர்கள்மீது நம்பிக்கை இல்லாமல் ஆகும்போதுதான் ஏற்படுகிறது. தன் உடலை காதலிக்க வேண்டும். என்ன இருக்கிறது என்பதல்ல, அதை நான் எப்படி பயன்படுத்திக் கொள்கிறேன் என்பதுதான் முக்கியம் என்கிற தன்னம்பிக்கை வேண்டும். இந்த இரண்டுடன், தன்னுடைய இணை மீது காதலும் விருப்பமும் சேர்ந்தால் போதும். பரிபூரண இன்பம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.