Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மனஅழுத்தத்தை குறைக்கும் சுவாசப் பயிற்சி

மனஅழுத்தத்தை குறைக்கும் சுவாசப் பயிற்சி

22

அனைவரும் கட்டாயம் செய்ய கூடிய பயிற்சியாகும். இந்த சுவாசத் தியானம் உடலுக்கு மிகுந்த பலனளிக்க கூடியதாகும். ஒரு முழு சுவாசத்தில் வளிமண்டல காற்றானது மூக்கு வழியாக, உள்ளே வந்து பின்னர் சுவாசப்பைகளை அடைந்து பின்னர் வெளியேற்றப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல் உடல் முழுவதும் சக்தியை பரப்பும். இந்த சுவாச தியானத்தை நாம் கவனமாக அனுபவித்து செய்தோமானால் மிக நல்ல செழிமையான வாழ்கையை பெறுவோம்.

சுவாச உடற்பயிற்ச்சி செயல்முறைகள்:

1, முதலில் நீங்கள் மிகவும் அமைதியான இடத்தில் ஒரு துணி போட்டு அமர்ந்து கொள்ளவும்.

2. உடலை தளர்த்தி உட்காரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். அதற்காக விறைப்பாக உட்காரக்கூடாது.

3, பிறகு கண்ணை மூடி கொண்டு மெதுவாக மூச்சை இழுத்து விடுங்கள். பின் மனதுக்குள்ளே ” நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் ” ” நான் மிகவும் செல்வந்தனாக இருக்கிறேன் ” ” நான் சிறந்த வாழ்க்கையை வாழ்கிறேன் ” என்று மனதுக்குள்ளே சொல்லி கொண்டே இருங்கள்

4, பிறகு நீங்கள் வாழ்க்கையில் சந்தோசமாக இருந்த நேரங்களை நினைத்து பாருங்கள். அது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் பொது அளவற்ற சக்தியை பெறுவீர்கள்.

5, இப்போது மறுபடியும் சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதாவது மூச்சை மெல்ல இழுத்து பின் வெளிவிடுங்கள்.

6. இப்போது சற்றே அதிகமாக நீண்ட மூச்சை இழுத்து பின் மெதுவாக வெளிவிட வேண்டும்.

7. மூச்சை இழுத்து விடும்போது நேர்மறையான மற்றும் மகிழ்ச்சியான எண்ணங்கள் மட்டுமே இருக்க வேண்டும். இதே மாதிரி தினமும் 10 நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்தால், உங்கள் வாழ்கையில் மகிழ்ச்சி பெருகும்.

மன அழுத்தம் குறையும். நீங்கள் எந்நேரமும் சரியான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களை நோக்கி மற்றவர்களை ஈர்ப்பீர்கள்.உங்களின் உடலில் சக்தி அதிகரிக்கும்.