Home அழகு குறிப்பு கூந்தல் அழகு பொடுகுத் தொல்லை

பொடுகுத் தொல்லை

58

பொடுகு என்பது எமது சிரசின் சருமத்தில் ஏற்படும் ஒரு வகை அழற்சி நோயாகும். சருமம் காய்ந்து அதன் துகள்கள் உதிர்வதுடன் தலையில் சற்று அரிப்பும் இருக்கலாம்.

இது மற்றவர் முன் சங்கடமாக உணர வைப்பதாக இருந்தாலும் ஆபத்தான நோயல்ல.

இதை அறவே ஒழிப்பது சற்று சிரமம் ஆனபோதிலும் கட்டுப்பாட்டினுள் வைத்திருக்க முடியும்.
இதற்கென பலவிதமான சம்பூ வகைகள் விறபனையாகின்றன. அதில் செலனியம், சலிசிலிக் அமிலம் மற்றும் நாகம் (salicylic acid, selenium sulfide or zinc pyrithione).இருக்கிறதா என அவதானிக்கவும்.
பொடுகு கடுமையாக இருந்தால் தினமும் அந்த சம்பூவை உபயோகிக்கவும். அது கட்டுப்பாட்டினுள் வந்ததும் வாரத்திற்கு மூன்று முறை, வாரத்திற்கு இருண்டு முறை எனப் படிப்படியாகக் குறைக்கவும்.
சம்பூவை தலைக்கு வைத்ததும் கழுவக் கூடாது. தலையில் வைத்து சுமார் 5 நிமிடங்கள் கழிந்த பின்னர் கழுவ வேண்டும். மருத்து தலையின் சருமத்தில் ஊற நேரம் தேவை என்பதாலேயே அவ்வாறு செய்ய வேண்டும்.
ஆதற்கு குறையவில்லை வேறு மருந்துகளை (ஸ்டிரொயிட் லோசன் Steroid lotion) அவர் தரக் கூடும்.