Home பாலியல் பெண்கள் கிளைமேக்ஸை அடைவது…உறவில் மட்டுமே!

பெண்கள் கிளைமேக்ஸை அடைவது…உறவில் மட்டுமே!

26

பெண்களுக்கு கிளைமேக்ஸ் எனப்படும் உச்ச நிலை ஏற்படுவது உடலுறவின்போது மட்டுமே என்று தெரிவித்துள்ளனர் ஆய்வாளர்கள். மற்றபடி வேறு எந்தவிதமான தூண்டுதலும் அவர்களுக்கு உச்சநிலையைத் தருவதில்லை என்றும் இந்த புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆர்கஸம் அல்லது உச்சநிலை அல்லது கிளைமேக்ஸ் என்பது ரொம்ப நாளாகவே புரியாத புதிராக இருக்கிறது. இது எப்படி ஏற்படுகிறது, எந்தக் காரணியால் ஏற்படுகிறது என்பதில் இதுவரை உறுதியான கருத்து ஏதும் சொல்லப்படவில்லை. இருப்பினும் பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியானது தூண்டப்படும்போதுதான் உச்சநிலை ஏற்படுவதாக கூறப்பட்டு, கருதப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அதற்கு, இது காரணமில்லை என்ற புதிய கருத்தை இந்த ஆய்வு கூறியுள்ளது.
பெண்களின் கிளிட்டோரிஸ் பகுதியை தூண்டி விட்டால் போதும் அவர்கள் உச்சத்தை எட்டுவார்கள் என்றுதான் இத்தனை காலமாக, இந்த நிமிடம் வரை, இந்த நொடி வரை ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல என்பதுதான் இந்தப் புதிய ஆய்வின் முடிவாக உள்ளது.
பெண்களின் பிறப்புறுப்புக்கும், கிளிட்டோரிஸ் தூண்டுதலால் ஏற்படும் உச்சத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளனவாம். சுருக்கமாகச் சொன்னால் அது வேறு, இது வேறு. மூளையின் வெவ்வேறு பகுதிகளுடன் இவை தொடர்பு கொண்டுள்ளனவாம். எனவே இரண்டுக்கும் தொடர்பில்லை என்கிறார்கள் ஆய்வை நடத்தியவர்கள்.
மேலும் பெண் குறியிலோ அல்லது கிளிட்டோரிஸில் ஏற்படும் தூண்டுதலோ பெண்களுக்கு உச்சத்தைத் தருவதில்லையாம். இவற்றில் ஏற்படும் உச்சகட்ட உணர்ச்சிகள், பெண்கள் தங்களைத் தாங்களே உச்சத்தை எட்டி விட்டதாக உணர்வூட்டுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதைத்தான் உச்ச நிலை என்று இது நாள் வரை அனைவரும் கருதி வந்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.
ஆர்கஸத்தை ஏற்படுத்தும் இடம் அதாவது ஜி ஸ்பாட் என்று இது நாள் வரை கருதி வந்தது, உண்மையிலேயே அதைச் செய்வதில்லை என்பதே இந்த ஆய்வின் சுருக்கமான சாராம்சம். நல்ல உடல் ஆரோக்கியத்தில் இருக்கும் பெண்களுக்கு, கிளிட்டோரிஸ் தூண்டுதல் இல்லாமலேயே கூட உச்ச நிலையை எட்ட முடியுமாம்.
உடல் உறவின்போது ஆண்கள் செய்யும் பல்வேறு முன்விளையாட்டுக்களால் பெண்களின் உடலில் ஆங்காங்கு உள்ள உணர்ச்சி நரம்புகள் தூண்டப்படுகின்றன. இவை அனைத்தும் மொத்தமாக சேர்ந்துதான் பெண்ணுக்கு உச்ச நிலையை ஏற்படுத்துகிறதே தவிர, கிளிட்டோரிஸால் மட்டுமே அவர்கள் உச்சத்தை அடைகிறார்கள் என்பது தவறு என்பதே இந்த ஆய்வின் கருத்தாக உள்ளது.
மொத்தத்தில் பெண்கள் உடல் உறவின்போது மட்டுமே உச்சத்தை எட்டுகிறார்கள். மற்றபடி முன் விளையாட்டுக்களோ, பிற விஷயங்களோ அவர்களுக்கு ஆர்கஸத்தை ஏற்படுத்துவதில்லை என்று இந்த ஆய்வு திட்டவட்டமாக கூறுகிறது.
வழக்கமாக, பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது ரொம்பக் கஷடம் என்று கூறுவார்கள். இப்போது பெண்களின் உச்சநிலைக்கு எது காரணம் என்பதைத் தெரிந்து கொள்வது அதை விட கஷ்டமானதாக இருக்கும்போலத் தெரிகிறதே…