Home பாலியல் பெண்களைப் போல ஆண்களுக்கு மார்பகங்கள் வளர்வது அதிகரிப்பு: மருத்துவர்கள் கவலை

பெண்களைப் போல ஆண்களுக்கு மார்பகங்கள் வளர்வது அதிகரிப்பு: மருத்துவர்கள் கவலை

32

a873d078-f3ad-4b47-9165-00d05589ea80_S_secvpfமருத்துவ வரலாற்றில் முன்பு அரிதான நிகழ்வாக இருந்த ஆண்களுக்கு மார்பகங்கள் வளரும் பிரச்சனை, தற்போது அதிகரித்து வருவதாக டெல்லி காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

மார்பக அளவைக் குறைப்பதற்காக ஒரு மாதத்திற்கு 2 அல்லது 3 பெண்களே வரும் நிலையில், 8 முதல் 10 ஆண்கள் மார்பக அளவைக் குறைப்பதற்காக வருகின்றனர். இந்தப் பிரச்சனைக்கு ஹார்மோன் கோளாறு மட்டும் காரணமல்ல. ஜிம்மிற்கு செல்வது, அதிக எடையுடன் இருப்பது, வாழும் வாழ்க்கை முறை ஆகியவையும் இதற்கு காரணமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈஸ்ட்ரோஜென் என்பது பெண்மைக்கான ஹார்மோன். டேஸ்டோஸ்டிரோன் என்பது ஆண்மைக்கான ஹார்மோன். ஆனால் ஆண், பெண் இரு பாலருக்குமே, இந்த இரண்டு ஹார்மோன்களும் சுரக்கும். ஆனால் ஆண்களுக்கு டேஸ்டோஸ்டிரோன் அதிகமாகவும்,பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் அதிகமாகவும் சுரக்கும். பல்வேறு காரணங்களால் இதில் மாற்றம் ஏற்படும் போது மார்பகங்கள் பெரிதாக வளர்வதாக மூத்த காஸ்மெடிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.