Home பாலியல் பெண்களின் உடல் நல பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களும். சிகிச்சையும்.

பெண்களின் உடல் நல பிரச்சனைகளையும், அதற்கான காரணங்களும். சிகிச்சையும்.

14

download (2)மார்பக காம்பில் கசிவு – Discharge in Breast Nipples
கப சுரப்பியில் இருந்து ப்ரோலக்டின் எனும் ஹார்மோன் அதிகமாக சுரப்பதால் இந்த நிலை ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் தாய்மார்களின் பால் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது. இது பால் சுரப்பியை தூண்டி பாலை சுரக்க செய்கிறது. நீங்கள் கர்ப்பமாக இல்லாத போதும், தாய்ப்பால் கொடுக்காத போதும் உங்கள் மார்பகத்தில் கசிவு இருந்தால், நீங்கள் ஹைப்பர் ப்ரோலக்டிமேனியா Hyper Prolactimania என்ற நிலையால் பாதிக்கப்பட்டு உள்ளீர்கள். துணை சுரப்பியில் கட்டி ஏற்படுவதால் இது உண்டாகிறது.

உடலுறவில் விருப்பம் இல்லாமை – No Desire in Sex
உடல் சார்ந்த மற்றும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளால் லிபிடோ குறைபாடு ஏற்படலாம். இதனை சரியாக சோதித்து பார்த்து, மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். பெண்களுக்கு மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்பு, ஈஸ்ட்ரோஜென் அளவு குறையத் தொடங்கும். அதன் தொடர்ச்சியாக பெண்ணுறுப்பில் வறட்சி ஏற்படுவதால் லிபிடோ குறைபாடு ஏற்படுகிறது. அதனால் மன சோர்வு ஏற்பட்டு உடலுறவில் நாட்டம் இல்லாமல் போகிறது.

வியர்த்து வடிதல் – Excessive Sweating
வியர்வை சுரப்பி அதிகமாக சுரப்பதால் அதிகமாக வியர்க்கும். அதிக வெப்பம், உணர்ச்சிவசப்படுதல் மற்றும் ஹார்மோன் குறைபாட்டால் வியர்வை சுரப்பி அதிகமாக தூண்டப்படுகிறது. இருப்பினும் சில ஹார்மோன் பிரச்சனைகளாலும் கூட அதிகமாக வியர்க்கலாம். சில மருந்துகளின் பக்க விளைவுகளாலும் கூட வியர்வை உண்டாகலாம். எனவே மருத்துவரை சந்தித்தால் நமது வியர்வைக்கான காரணத்தை அறிந்து அதனை கட்டுப்படுத்துங்கள்.

இன்றைய விஞ்ஞான மருத்துவத்தால் அனைத்து உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும் தீர்வு வந்து விட்டது. என்னதான் சில வியாதிகளை முழுவதுமாக சரிசெய்ய முடியாவிட்டாலும் கூட அதன் அறிகுறிகளை கண்டுகொள்ள முடியும்.

இப்போதெல்லாம் சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்களால் ஏற்படும் மரணத்தின் எண்ணிக்கை கூட பெருமளவு குறைந்து உள்ளது.

இருப்பினும் பல மக்கள் தங்களின் மருத்துவ நிலையை ஒழுங்காக பார்த்து கொள்ளாமல் புறக்கணித்து விட்டு, முற்றிய நிலைக்கு பின் மருத்துவரை நாடி செல்கின்றனர். அதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மருத்துவரிடம் தங்கள் நிலைமையை சொல்ல அவர்களுக்கு தர்மசங்கடமாக இருப்பதே.

நமது உடல்நிலையை புறக்கணித்து வந்தால் நோயின் தாக்கம் அதிகமாகிவிடும். அந்த முற்றிய நிலையில் மருத்துவர்களால் கூட உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் போகலாம்.

ஆகவே, உடலில் எந்தவொரு உடல்நல பிரச்சனை தென்பட்டாலும் உடனடியாக மருத்துவரை சந்திக்க வேண்டும்.