Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் அழகை கெடுக்கும் குதிகால் வெடிப்புகளை குனப்படுத்த சில வழிமுறைகள்…!

பெண்களின் அழகை கெடுக்கும் குதிகால் வெடிப்புகளை குனப்படுத்த சில வழிமுறைகள்…!

17

12079214_1639772049637613_3054771659189198907_nகுதிகால் வெடிப்பு எதனால் வருகிறது என்பதையும் தெரிந்து கொண்டால், பிற்காலத்தில் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை விரைவில் போய், வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் வறட்சியான சருமத்தினர், தண்ணீர் அதிகம் குடிப்பதோடு, தினமும் மாய்ஸ்சுரைசரைத் தடவ வேண்டும். உடல் எடை அளவுக்கு அதிகம் இருந்தாலும், குதிகால் வெடிப்பு வரும்.
குதிகால் வெடிப்புகள் வறட்சி மட்டுமின்றி, வேறுசில காரணங்களும் குதிகால் வெடிப்பை ஏற்படுத்தும். குதிகால் வெடிப்பை சரியாக கவனிக்காமல் விட்டால், அதனால் கடுமையான குதிகால் வலியை சந்திப்பதோடு, சில நேரங்களில் முற்றிய நிலையில் இரத்தக்கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக குதிகால்களில் வெடிப்புகள் ஏற்படும். மேலும் துணி துவைப்பவர்களின் பாதங்களில் வெடிப்புக்கள் அதிகம் இருப்பதற்கு இது தான் காரணம். காலணி அணியாமல் வெறும் காலிலேயே எப்போதும் சுற்றினால், பாதங்களில் வறட்சியுடன், கிருமிகளும் நுழைந்து, வெடிப்புக்களை மேலும் பெரிதாக்கி, நிலையை மோசமாக்கிவிடும்.
அளவுக்கு அதிகமான அழுத்தத்தை பாதங்களுக்கு கொடுப்பதால், பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகிறது. எனவே குதிகால் வெடிப்பைத் தடுக்க, உடல் எடையை குறைக்க முயற்சிக்க வேண்டியதும் அவசியம். நீரிலேயே நீண்ட நேரம் இருந்தால், அதனால் கால்கள் அதிகம் நீரில் ஊறி, சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.
ஆகவே எங்கு சென்றாலும் காலணிய அணிந்து செல்லுங்கள். வெளியில் சென்று வந்தவுடன் கால் பாதங்களை நன்றாக கழுவ வேண்டும். இரவு படுக்க போகும் முன்னர் கால்களுக்கு கிரீம் தடவி விட்டு செல்லுங்கள். இது கால் பாதத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கும்.